நடிகர் ரஜினிகாந்த் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை தகவல்: சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நலமுடன் இருக்கிறார் என்று காவிரி மருத்துவமனை தெரிவித்ததாக தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் தற்போது காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று இவரின் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்ட நிலையில் காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நடிகர் ரஜினிகாந்துக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு அவர் கண்காணிக்கப்பட்டு வருகிறார். அவரின் ரத்த குழாய் வால்வுகளில் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாதிப்பு

பாதிப்பு

இதுவரை நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் எந்த விதமான அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை. இந்த நிலையில் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் அளித்த பேட்டியில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரஜினிகாந்த் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் எங்களிடம் தெரிவித்துள்ளது.

நலம்

நலம்

அவர் நல்ல உடல்நிலையில் இருக்கிறார். அவரின் துணைவியாரிடம் உரையாடினோம், அவரும் இதே விஷயத்தை உறுதி செய்தார். எப்போதும் நடத்தும் சோதனைதான் இது. ஆண்டுதோறும் நடக்கும் செக் அப் இது என்று அவர் குறிப்பிட்டார்.

Recommended Video

    ICU-வில் சிகிச்சை பெற்று வரும் Rajinikanth.. என்ன பாதிப்பு?
    எப்போதும் நடக்கும் செக் அப்

    எப்போதும் நடக்கும் செக் அப்

    அதன்பின் நாங்களும் மருத்துவமனை நிர்வாகத்திடம் பேசினோம். ரஜினி நல்ல உடல்நிலையில் இருக்கிறார் என்று அவர்களும் எங்களிடம் கூறி உள்ளனர். அவர் நலமுடன் இருப்பதாகவே நாங்கள் நம்புகிறோம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

    பாதிப்பு என்ன

    பாதிப்பு என்ன

    ரஜினிகாந்திற்கு என்ன மாதிரியான உடல்நிலை கோளாறு இருக்கிறது என்பது குறித்த கேள்விக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் பதில் அளிக்க மறுத்துவிட்டார். சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் அளித்த பேட்டியை தொடர்ந்து காவிரி மருத்துவமனை விரைவில் அதிகாரப்பூர்வ மருத்துவ அறிக்கையை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+