சிதறிய ஆணுறைகள்.. அதென்ன ஐஸ் கட்டிக்குள்ளே கருப்பா ? அதிரவைத்த ஹோட்டல்.. கலக்கத்தில் மக்கள்.. உஷார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓட்டலில் சப்ளையாகும் ஐஸ்கட்டியில் என்ன இருந்தது தெரியுமா? இது தொடர்பான வீடியோக்களும், போட்டோக்களும் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.

மகாராஷ்டிரா மாநிலத்தில் புனேவில் செயல்பட்டு வரும் ஒரு நிறுவனம், பிரபல ஓட்டலுக்கு போன் செய்து, சமோசா ஆர்டர் செய்துள்ளது. அந்த சமோசாக்களை சாப்பிட முயன்றபோது அதில் ஆணுறைகள் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.. அந்த சமோசாவுக்குள் குட்காவும் இருந்திருக்கின்றன.. இதைத்தவிர, சின்ன சின்ன கற்களும் சமோசாவில் இருந்துள்ளன..

Hotels in Tamil Nadu and frozen rat embedded in ice supplied to hotels in Maharashtra pune

இதனால், அதிர்ந்துபோன நிறுவனம், சமோசாவை எடுத்துக்கொண்டு போலீஸுக்கு ஓடியது.. இறுதியில், தொழில் போட்டி காரணமாக, இப்படி சமோசாவில் கேவலத்தை நடத்தியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 5 பேர் கைதானார்கள். மிகப்பெரிய ஓட்டல்களிலும், கேட்டரிங் சர்வீஸ்களிலுமே இந்த அவலம் தொடர்வது அதிர்ச்சியை தந்து வருகிறது.

ஐஸ்கட்டிகள்: அதே மகாராஷ்டிரா மாநிலம் புனேவின் ஜூன்னா பகுதியில் இன்னொரு அதிர்ச்சி நடந்துள்ளது.. ஹோட்டல்களுக்கு சப்ளை செய்யப்படும் ஐஸ்கட்டிகளில் ஒரு எலி செத்து கிடந்ததாம்..

ஓட்டல்கள் முதல் தெருவோர கடைகள் வரை எல்லாருக்குமே இந்த இடத்திலிருந்துதான், ஜூஸ் தயாரிப்பதற்கு ஐஸ் கட்டிகள் சப்ளை செய்யப்படுகிறாம். திடீரென ஐஸ் கட்டிகளில் செத்த எலி கண்டறியப்பட்டிருப்பது, பொதுமக்களை கதிகலங்க செய்திருக்கிறது.

இணையவாசிகள்: இது தொடர்பான போட்டோக்களும், வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகிவிட்டது. மாவட்ட அதிகாரிகள், மாநில உணவு மற்றும் மருந்து நிர்வாகம் உள்ளிட்ட கண்காணிப்பு அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று இணையவாசிகள் கொந்தளித்து கேட்க துவங்கியிருக்கிறார்கள். அதிகாரிகள் முறையாக ஆய்வு நடத்தியிருந்தால், இதுபோன்ற தவறுகள் நடந்திருக்காது என்றும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

இதையடுத்து, போலீசார் உடனடியாக இது தொடர்பான விசாரணையை கையில் எடுத்துள்ளனர்.. ஜூன்னா பகுதியிலிருக்கும் அந்த ஐஸ்கட்டி தொழிற்சாலைகளில் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.. ஐஸ் கட்டியில் செத்த எலி கிடந்தது மீண்டும் புனேவில் பரபரப்பை கிளப்பி கொண்டிருக்கிறது.

வெளியூர்கள்: பொதுமக்கள் வெளியூர்களுக்கு கிளம்பி செல்லும்போதோ அல்லது மற்ற இடங்களுக்கு செல்லும்போதோ, வேறுவழியின்றி ஓட்டல்களில் சாப்பிட நேரிடுகிறது.. அதுபோலவே, வெளியூர்களில் தங்கி வேலை பார்க்கும் பேச்சுலர்களுக்கு, இந்த ஓட்டல்கள்தான் பசியாற்றி வருகின்றன..

இருந்தாலும், சில ஹோட்டல்களில் உணவு தரமாக இருப்பதில்லை.. சில ஓட்டல்களில் சுகாதாரம் சரியாக பேணப்படுவதில்லை.. இதுகுறித்த புகார்களையும் வாடிக்கையாளர்கள் அவ்வப்போது தெரிவித்து வரும்நிலையில், உணவுத்துறை அதிகாரிகளும் நேரடியாக சென்று சம்பந்தப்பட்ட ஓட்டல்களில் அதிரடி சோதனை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.

பொதுமக்கள்: நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரை, உணவு தரம் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்க ஏதுவாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை 'வாட்ஸ் அப்' எண் வெளியிட்டுள்ளது. உணவின் தரம் குறித்து பொதுமக்கள் புகார்களை நுகர்வோர் உணவு பாதுகாப்பு செல்போன் ஆப் மூலமாகவும், 94440 42322 என்னும் "வாட்ஸ் அப்" எண் வாயிலாகவும் பதிவு செய்யலாம்" என்று மக்கள் நல்வாழ்த்துறை தெரிவித்தவாறே உள்ளது.

foodsafety.tn.gov.in என்ற இணைய தளம் மூலமாகவும், Tn food safety Consumer App என்ற செல்போன் ஆப்பை டவுன்லோடு செய்து கொள்வதன் மூலமாகவும் புகார் தெரிவிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உஷார்: அதேபோல, மக்களும், தாங்கள் வாங்கும் உணவு பொருள்களின் உரிமத்துக்கான எண் வழங்கப்பட்டுள்ளதா? பாக்கெட் உணவுகளாக இருந்தால் தேதி உள்ளதா? அது காலாவதியாகி விட்டதா? என்றெல்லாம் கவனிக்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+