வீழ்வேன் என்று நினைத்தாயோ! சந்திரயான் 3 நிலாவை தொட்டதற்கே சந்திரயான் 2-தான் காரணம்! எப்படி தெரியுமா

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2019 ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட்ட சந்திரயான் 2 திட்டம் தோல்வியடைந்ததாக கூறப்பட்டு வரும் நிலையில், சந்திரயான் 3 திட்டம் பெற்ற இந்த சரித்திர வெற்றிக்கே சந்திரயான் 2 திட்டம் தான் உதவி இருக்கிறது. எப்படி என்பதை விரிவாக பார்ப்போம்.

உலகிலேயே ரஷியா, அமெரிக்கா, சீனா ஆகிய வல்லரசு நாடுகள் மட்டுமே இதுவரை செயற்கைக்கோளை அனுப்பி சாதித்து உள்ளன. இதில் 4 வது நாடாக இணைந்து இருக்கிறது வளரும் நாடான இந்தியா. இதில் குறிப்பிடத்தக்க சாதனையை என்னவென்றால் மேலே சொல்லப்பட்ட 3 நாடுகளாலும் தொட முடியாத நிலவின் தென் துருவத்தை சந்திரயான் 3 திட்டத்தின் மூலமாக இந்தியா தொட்டு உள்ளது.

How Chandrayaan 2 helped the Chandrayaan 3 for landing in Moon

இதற்காக பல்வேறு தோல்விகளையும் வலிகளையும் இஸ்ரோ சந்தித்து உள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு நிலவில் இந்தியாவின் கொடியை நாட்ட விரும்பினார்கள் விஞ்ஞானிகள். அதன்படி சந்திரயான் 1 விண்கலம் கடந்த 2008 ஆம் ஆண்டு நிலவை நோக்கி அனுப்பப்பட்டது. ஆனால், அது தோல்வி அடைந்தது.

அதில் இருந்து பாடம் கற்று பல்வேறு நவீன தொழில்நுட்பங்களை கொண்டு சந்திராயன் 2 விண்கலத்தை கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழ்நாட்டை சேர்ந்த இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் தலைமையிலான விஞ்ஞானிகள் குழுவினர் நிலவை நோக்கி ஏவினர். ஆனால், ரோவர் கருவி தரையிறங்கும்போது நிலவின் மேற்பறப்பில் வேகமாக மோதி வெடித்து சிதறியது.

அதன் தொடர்ச்சியாகவே சந்திரயான் 3 விண்கலத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் உருவாக்கினர். இம்முறை எந்த நாடுகளுமே தொட்டிடாத நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க முடிவு செய்த இஸ்ரோ அதற்கான முன் ஏற்பாடுகளை செய்து, கச்சிதமான திட்டத்துடன் கடந்த ஜூலை 14 ஆம் தேதி சந்திராயன் 3 விண்கலம் விண்ணில் ஏவியது.

பூமியின் சுற்றுவட்டப்பாதையை பலமுறை சுற்றி நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் நுழைந்து அங்கும் சுற்றில் சுமார் 45 நாள் பயணத்தை முடித்து வெற்றிகரமாக இன்று நிலவை தொட்டு இருக்கிறது சந்திரயான் 3 இன் விக்ரம் லேண்டர். எல்லோரும் சந்திரயான் 2 ஐ தோல்வி திட்டம் என்று சொல்லி வருகிறார்கள்.

How Chandrayaan 2 helped the Chandrayaan 3 for landing in Moon

ஆனால், அது முழுமையாக தோல்வியடையவில்லை. ரோவர் இறங்கியதில் மட்டும்தான் பிரச்சனையே தவிர சந்திரயான் 2 திட்டத்தால் இன்று வரை இந்தியாவுக்கு பயன்கிடைத்து வருகிறது. ஆம், சந்திரயான் 3 திட்டம் வெற்றிபெறுவதே சந்திரயான் 2 ஒரு முக்கிய காரணம். அதில் ஏவப்பட்ட ஆர்பிட்டர் இன்றும் நிலவை சுற்றி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

நேற்று நிலவை சந்திரயான் 3 நெருங்கியவுடன் அதை வரவேற்றதே சந்திரயான் 2 இன் ஆர்பிட்டர்தான். அது சரியாக வேலை செய்து வந்ததால்தான் சந்திரயான் 3 இல் ஆர்பிட்டரையே வைக்காமல் இஸ்ரோ அனுப்பி இருக்கிறது. சந்திரயான் 2 இன் ஆர்பிட்டர் வழங்கிய தெளிவான வழிகாட்டுதல்களால்தான், சந்திரயான் 3 முறையாக நேர்த்தியாக தரையிறங்கி இருக்கிறது குறிப்பிடத்தக்கது. சந்திரயான் வெற்றியில் முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் தலைமையிலான குழுவிற்கும் பெரும் பங்கு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+