இது சாதாரணம் இல்லைங்க.. திமுக போட்ட அக்னி பரீட்சை பிளான்.. "அவரையே" களமிறக்கி.. ரொம்ப சீரியசாமே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக இந்த தேர்தலை சாதாரண தேர்தலாக பார்க்கவில்லை. இதை அக்னி பரீட்சையாக பார்த்தது. இதில் 40 தொகுதிகளில் வெல்ல வேண்டிய கட்டாயம் திமுகவிற்கு இருந்தது என்று மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் முடிந்துள்ளது. ஒரே கட்டமாக கடந்த 19ம் தேதி தமிழ்நாட்டில் தேர்தல் நடந்தது. இந்த தேர்தல் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் பிரகாஷ் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

How did CM Stalin and DMK plan everything for Lok Sabha 2024 Tamil Nadu elections

அதில், திமுக இந்த தேர்தலை சாதாரண தேர்தலாக பார்க்கவில்லை. இதை அக்னி பரீட்சையாக பார்த்தது. இதில் 40 தொகுதிகளில் வெல்ல வேண்டிய கட்டாயம் திமுகவிற்கு இருந்தது. இன்னொரு பக்கம் பாஜக நாங்கள்தான் 2ம் இடம்.. அதிமுக இரண்டாம் இடம் கிடையாது என்றெல்லாம் பிக் லை.. அதாவது பெரிய பொய்யை பாஜக சொன்னது. நாங்கள் வளர்ந்துவிட்டோம்.. நாங்கள்தான் தமிழ்நாட்டில் பெரிய கட்சி என்று பாஜக கூறியது.

இதை திமுக தீவிரமாக எதிர்கொண்டது. அதிமுக பாஜகவை அட்டாக் செய்யவே இல்லை. யார் யாரையோ வேட்பாளர்களாக போட்டு ஏதேதோ பிரச்சாரங்களை செய்தனர். பெரிதாக அதிமுகவில் யாரும் பிரச்சாரம் செய்யவில்லை. இங்கே உதயநிதி, ஸ்டாலின், ராகுல் காந்தி பிரச்சாரம் செய்தனர். எதிரே பாஜகவில் அண்ணாமலை, ராஜ்நாத் சிங், அமித் ஷா, மோடி, நிர்மலா சீதாராமன் என்று பலரும் பிரச்சாரம் செய்தனர். இதை திமுகதான் எதிர்கொண்டது.

திமுகவை அழிக்க வேண்டும் என்றுதான் பாஜக பிரச்சாரம் செய்தது. இதை எதிர்க்க திமுக சிஸ்டமெட்டிக் பிளான் செய்தது. அதற்கான பிளானிங் செய்தது சபரீசன். அவரிடம் பென் என்ற அமைப்பு உள்ளது. முன்பு பிரஷாந்த் கிஷோரிடம் வேலை பார்த்தவர்கள் உருவாக்கிய குழு இது. அவர்கள்தான் தேர்தல் திட்டங்களை வகுத்தனர். சிலருக்கு இடங்கள் கொடுக்க கூடாது என்று கூறினர். ஆனாலும் அதை மீறி இடங்கள் கொடுக்கப்பட்டது.

எதிர்பார்ப்பை மீறி சிலர் இடங்கள் மாறி நிற்க வைக்கப்பட்டனர். பாஜகவில் கோவையில் அண்ணாமலை நிற்பார் என்று எதிர்பாக்கப்படவில்லை. இதற்கு இடையில்தான் பென் அமைப்பு திட்டங்களை வகுத்தது. அந்த அமைப்பு சில வேட்பாளர் தேர்வுகளை மேற்கொண்டது. கோவை வேட்பாளரும் கூட அப்படி தேர்வு செய்யப்பட்டவர்தான். செந்தில் பாலாஜி கருத்தும் இதில் இருந்தது.

இந்த அமைப்புதான் தொகுதி வாரியாக ஆய்வு செய்து ஸ்டாலினுக்கு அனுப்பினார்கள். அதை தொகுதி பொறுப்பாளர்களுக்கு தொடர்ந்து அனுப்பினார்கள். எங்கே பிரச்சனை உள்ளது, எங்கே மாற்ற வேண்டும் என்பதை எல்லாம் தினமும் ரிப்போர்ட்டாக் அனுப்பினார்கள். பென் அறிக்கை கொடுத்துதான் ஒவ்வொரு தொகுதிகளிலும் ஏற்பட்ட சரிவுகளை திமுக சரி செய்தது .

இப்படி பிரம்மாண்டமாக அக்னீ பரீட்சை போல திமுகவினர் செய்தனர். ராணிப்பேட்டையில் ஒரு அமைச்சர், சென்னையில் இருக்கும் அமைச்சர் ஒருவர், இன்னொரு பக்கம் தாம்பரத்திலும் அமைச்சர் ஒருவருக்கும் வேட்பாளருக்கும் இடையில் மோதல் வந்தது. தேனியில், மதுரையில் நன்றாக பணிகள் நடந்தன. கோவையில் பூச்சி முருகன் பொள்ளாச்சியில் பணிகளை செய்தார். அவர் சிஸ்டமேட்டிக்காக பணிகளை செய்தார்.

அவர் சிஸ்டமேட்டிக்காக பூத் பணிகளை செய்ததால் அவரை பாராட்டி கோவைக்கு கேட்ஸ் செல்கின்றனர். அவருடன் சேர்ந்து டி ஆர் பி ராஜா, பிடிஆர் ஆகியோரும் பணிகளை செய்கின்றனர். இப்படித்தான் சிஸ்டமேட்டிக்காக திமுக வேலைகளை செய்தது., என்று நக்கீரன் பிரகாஷ் பேட்டியில் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+