"கரெக்ட்டா" தாலி கட்டும்போது.. மணப்பெண்ணை "கட்டிப்பிடித்து"..விழித்த மாப்பிள்ளை.. ட்விஸ்ட் அங்கேதான்
கல்யாண பெண்ணை மணமேடையிலேயே கட்டிப்பிடித்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்
சென்னை: டக்கென மணப்பெண்ணை மணமேடையிலேயே கட்டிப்பிடித்துவிட்டார் அந்த நபர்.. அதற்கு பிறகு நடந்ததுதான் ட்விஸ்ட்டே..!
Recommended Video
எத்தனையோ கல்யாணங்கள் தாலி கட்டுவதற்கு முன்பு நின்றுள்ளன.. அதில் ஆணோ, பெண்ணோ, இருவரில் யாராவது ஒருவர் காதல் விவகாரங்களில் சம்பந்தப்பட்டிருப்பார்கள்.. அல்லது வரதட்சணை பிரச்சனைகள் ஏதாவது வெடித்துவிடும்.
இதனால் மணமேடை வரை வந்து திருமணங்கள் நின்றிருக்கின்றன.. மாப்பிள்ளை 2-ம் வாய்ப்பாட்டை சொல்லாதது, உருது வார்த்தைகளை சொல்லாதது, உள்ளிட்ட வினோத காரணங்களுக்காகவும் மணப்பெண்கள் தங்கள் கல்யாணத்தையே நிறுத்திய சம்பவங்களும் நம் நாட்டில் சமீப காலமாக அரங்கேறி வருகின்றன..

முகூர்த்தம்
அதேபோல, இதே திருமணங்களில் வன்முறைகளும் அரங்கேறி வருகின்றன... இதில் முன்னணியில் உள்ளது வடமாநிலம்தான்.. கடந்த ஏப்ரல் மாதம் கூட உத்தரபிரதேசத்தில் ஒரு சம்பவம் நடந்தது.. மதுரா பகுதியை சேர்ந்த இளைஞரும், ஒரு பெண்ணும் தீவிரமாக காதலித்து வந்தனர்.. ஆனால், திடீரென அந்த பெண்ணுக்கு, முபாரிக்பூர் கிராமத் நௌஜீல் பகுதியில் வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயம் ஆனது.. முகூர்த்த நாளும் குறிக்கப்பட்டுவிட்டு, திருமணம் தடபுடலாக நடந்து கொண்டிருந்தது.

ரிசப்ஷன்
ரிசப்ஷனுக்காக புடவை மாற்றிக் கொள்ள, மணமகள் அறைக்குள் மணப்பெண் சென்றார்.. அவர் பின்னாடியே உள்ளே ரூமில் நுழைந்தார் காதலன்.. கையில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து காதலியை சரமாரியாக சுட்டுக்கொன்றுவிட்டார்.. பிறகு தானும் தற்கொலை செய்து இறந்துவிட்டார்.. தங்கள் காதலியை, வேறு ஒருவர் மணக்க நேர்வதை ஜீரணிக்க முடியாத நிலையில், இப்படிப்பட்ட சம்பவங்கள் நடந்து வருகின்றன.

அலங்காரம்
இப்போதும் ஒரு சம்பவம் அப்படித்தான் நடந்துள்ளது.. இது தொடர்பான வீடியோவும் வெளியாகி வைரலாகி வருகிறது.. இதுவும் வடமாநிலம்தான்.. கல்யாண மண்டபத்தில் மணமக்கள் மேடையில் அலங்காரத்துடன் நின்று கொண்டிருக்கிறார்கள்.. வடமாநிலம் என்பதால் சடங்குகள் அதிகம் நடப்பது வழக்கம்.. அதன்படி, இந்த கல்யாணத்திலும் சடங்குகள் நடந்து கொண்டிருக்கிறது.. மணமகளுக்கு குங்குமத்தை எடுத்து நெற்றியில் வைக்கப்படுகிறது.. ஆனால், நெற்றியில் குங்குமத்தை வைப்பது மாப்பிள்ளை கிடையாது.

குங்குமம்
அந்த நபர் அத்துடன் நிறுத்தவில்லை.. திடீரென குங்குமத்தையும் வைத்துவிட்டு, மணப்பெண்ணை திடீரென கட்டிப்பிடிக்கிறார்.. இதை பார்த்து அங்கிருந்தோர் மிரண்டுவிட்டனர்.. மாப்பிள்ளையோ, பேய் அறைந்தது போல் நின்றுவிட்டார்.. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண், பளாரென அந்த நபரின் கன்னத்தில் அறைகிறார்.. பிறகு, பெண்ணின் குடும்பத்தினர், அந்த இளைஞரை பிடித்து தாறுமாறாக தாக்குகிறார்கள்.. இறுதியில்தான் தெரிந்தது அந்த நபர், மணப்பெண்ணின் காதலன் என்பது.. இந்த வீடியோதான் வெளியாகி அதிர்ச்சியை கிளப்பி விட்டு வருகிறது.

கட்டிப்பிடித்த நபர்
தர்மஅடி வாங்கிய காதலன் உடம்பெல்லாம் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.. பெண் வீட்டு தரப்பிலும் போலீசில் புகார் தரப்பட்டுள்ளது.. போலீசும் இதை விசாரித்து வருகிறது.. இந்த காதலன் குங்குமத்தை மட்டும்தான் காதலிக்கு வைத்தாரே தவிர, தாலி கட்டவில்லை.. எனினும், மணமேடையில், மணப்ணெணுக்கு குங்குமம் வைத்து, மாப்பிள்ளை கண்முன்னாடியே கட்டிப்பிடித்த நபர் குறித்து, ஏகப்பட்ட கமெண்ட்களை வீடியோவில் பதிவிட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்..!












Click it and Unblock the Notifications