சென்னையை அதிர வைத்த குழந்தை கடத்தல்.. 4 மணிநேரத்தில் மீட்டது எப்படி? ஹீரோவான 2 ஆட்டோ டிரைவர்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று கடத்தப்பட்ட ஒன்றரை வயது குழந்தை 4 மணிநேரத்தில் மீட்கப்பட்டது. 2 பேரை கைது செய்யப்பட்டுள்ள நிலையில் குழந்தையை மீட்க 2 ஆட்டோ டிரைவர்கள் உதவியது பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்தவர் சுஜித் மண்டல். இவரது மனைவி சஞ்சனா. இந்த தம்பதி ஒன்றரை வயது குழந்தையுடன் நேற்று மதியம் 1.30 மணியளவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் டிக்கெட் கவுண்ட்டர் அருகே நின்றனர்.

அப்போது ரயில் நிலையத்தில் நின்ற அவர்களின் குழந்தையை 2 பேர் கடத்தி சென்றனர். கண்காணிப்பு கேமராவில் பதிவான உருவத்தை வைத்து போலீசார் தீவிரமாக தேடிப்பார்த்தனர்.

how-did-police-rescued-one-and-half-year-old-child-who-kidnapped-and-how-2-auto-drivers-helped

இந்த கடத்தல் சம்பவம் மதியம் 1.30 மணிக்கு நடந்த நிலையில் அடுத்த 4 மணிநேரத்தில் குழந்தை சென்னை எண்ணூர் பகுதியில் மீட்கப்பட்டது. குழந்தையை கடத்திய 2 பேர் குழந்தையை விற்க பேரம் பேசிய நிலையில் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். அதன்பிறகு குழந்தை சுஜித் மண்டல் - சஞ்சனா தம்பதியிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் தான் கடத்தப்பட்ட குழந்தையை மீட்க ஆட்டோ டிரைவர்களான நந்தகுமார், அப்துல் ஆகியோர் தான் முக்கிய பங்காற்றி உள்ள விபரம் தெரியவந்துள்ளது. இதுபற்றி நந்தகுமார் கூறியதாவது: நான் வஉசி நகர் சுனாமி குடியிருப்பில் இருக்கிறேன். நான் ஆட்டோ ஓட்டுகிறேன். குழந்தையை கடத்திய 2 பேரும் குழந்தையுடன் பாரீஸ் கார்னரில் என்னை சவாரிக்கு அழைத்தனர். தேரடிக்கு செல்ல வேண்டும் என்றனர். நான் அவர்களை ஆட்டோவில் ஏற்றி கொண்டு தேரடிக்கு சென்று கொண்டிருந்தேன்.

ஆட்டோவில் அவர்கள் இருவரும் ரூ.2 லட்சத்துக்கு போகும். ஒன்றரை லட்சத்துக்கு போகும் என பேசிக்கொண்டே வந்தனர். மேலும் அவர்களின் முகத்தை பார்க்கும்போது எனக்கு சந்தேகம் எழுந்தது. இதற்கிடையே தேரடியில் ஆட்டோவில் இருந்து இறங்கியவர்கள் எனக்கு சவாரி காசை தரவில்லை. இதனால் அவர்கள் என்ன செய்கிறார்கள்? என்று ஃபாலோ செய்ய தொடங்கினேன்.

அப்போது தம்பி அப்துல் ஆட்டோவில் அவர்கள் தேரடியில் இருந்து நேதாஜி நகர் சுனாமி குடியிருப்புக்கு சென்றனர். அப்போது ரூ.3 ஆயிரத்துக்கு குழந்தையை விற்க முயற்சித்தது தெரியவந்தது. அங்குள்ள சின்ன சின்ன பையன்களிடம் குழந்தை உள்ளது. 3 ஆயிரம் ரூபாய் தான். உங்கள் அம்மா வாங்குவார்களா? என கேட்டனர். இருவரும் மதுபானம் குடித்து கஞ்சா போதையில் இருந்தது போல் தெரிகிறது. நானும், அப்துல்லும் சேர்ந்து அவர்களை பிடித்து போலீசில் ஒப்படைத்தோம். குழந்தை மீட்கப்பட்டுள்ளது. இருவரும் எந்த ஏரியா என்று தெரியவில்லை. ஆனால் ஒருவர் ஆட்டோ ஓட்டுவதாக கூறியிருந்தார்'' என்றார்.

அதேபோல் ஆட்டோ டிரைவர் அப்துல் கூறுகையில், ‛‛என் பெயர் அப்துல். நானும் எர்ணாவூரில் உள்ள சுனாமி குடியிருப்பில் தான் இருக்கிறேன். தேரடியில் இருந்து என் வண்டியில் 2 பேரும் ஏறினார்கள். என் வண்டியில் இன்னொருவர் இருந்ததால் அவர்கள் எதுவும் பேசவில்லை. பாரதிநகரில் நான் இறக்கவிட்டவுடன் அண்ணன் நந்தகுமார் வண்டிக்கு வந்த பணம் தரவில்லையா? என கேட்டார். எனக்கும் சவாரி காசை தரவில்லை. அப்போது இவர் தான் (நந்தகுமார்) குழந்தையை விற்பது போல் பேசுகிறார்கள் என்று சொன்னார். நாங்கள் அனைவரும் சேர்ந்து அவர்களை போலீசில் பிடித்து ஒப்படைத்தோம்'' என்றார்.

இந்நிலையில் தான் கடத்தப்பட்ட குழந்தையை மீட்க உதவிய 2 ஆட்டோ டிரைவர்களுக்கும் போலீசார் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+