அரசியல் செய்யாத உதயநிதி.. விஜய்க்கு கிடைத்த கிரீன் சிக்னல்! கோட் ஸ்பெஷல் ஷோ அனுமதி கிடைத்தது எப்படி?
சென்னை: விஜய் நடித்துள்ள 'தி கோட்' திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இன்று காலை 9 மணி ஷோவிற்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
ஒரு நாளுக்கு இன்று 5 ஷோ வெளியிடும் அளவிற்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. காலை 9 மணிக்கு தொடங்கி இரவு 2 மணி முடியும் வரை ஷோ நடத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. நடிகர் விஜயின் கடைசி படத்திற்கு முந்தைய படம் ஆகும் இது. இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், அவரின் டீம் நடிகர்கள் மட்டுமன்றி பிரசாந்த், பிரபுதேவா, லைலா, சினேகா என்று பெரிய பட்டாளமே இந்த படத்தில் நடித்து உள்ளது.

நடிகர் விஜய் அரசியல்: நடிகர் விஜய் அரசியலில் குதித்துள்ளார். தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜய் தனது கட்சிக்கான மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளார். முதல் மாநாட்டிற்கான விண்ணப்பம் தரபட்டுள்ளது. இது தொடர்பாக விளக்கம் கேட்டு போலீசார் கடிதம் எழுதி உள்ளனர்.
ஏற்கனவே நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் கொடி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த கொடி சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. மேலே, கீழ் சிவப்பு, நடுவில் மஞ்சள் நிறத்தில் கொடி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கொடியில் இரண்டு பக்கம் யானை வைக்கப்பட்டு உள்ளது.
இவை போர் யானைகள் ஆகும். நடுவில் வாகைப்பூ வைக்கப்பட்டு உள்ளது. வாகைப்பூ தமிழ்நாட்டின் பூ ஆகும். அதை சுற்றி ஸ்டார்கள் வைக்கப்பட்டு உள்ளன. இந்த கொடி முழுக்க முழுக்க தமிழ், தமிழ் தேசியம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதை பார்க்க முடிகின்றது. போர் வீரம், தோழமை, தைரியம் ஆகியவற்றை குறிக்கும் விதமாக இப்படி வடிவமைக்கப்பட்டு உள்ளது. வாகைப்பூ இதை குறிக்கும் விதமாக அமைந்துள்ளது. அதே சமயம் கொடிக்கான விளக்கத்தை மாநில மாநாட்டில் அறிவிப்பதாக விஜய் கூறி உள்ளார்.
திமுக ஆளும் கட்சி: பெரும்பாலும் திமுக ஆளும் கட்சி என்பதால் அவர்களை எதிர்த்தே விஜய் அரசியல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் விஜய் நடித்துள்ள 'தி கோட்' திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இன்று காலை 9 மணி ஷோவிற்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக முறையாக தயாரிப்பாளர் சார்பாக தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதேபோல் இயக்குனர் சார்பாகவும் தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதில் தமிழக அரசு அரசியல் எதுவும் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ள நிலையில், விஜய் படத்துக்கு சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் அதற்கு முன் ஒரு சில கேள்விகள் மட்டும் கேட்டு உள்ளனர். அதன்படி, சிறப்பு காட்சி தந்தால் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். அசம்பாவிதங்கள் நடக்க கூடாது, நிலைமை கட்டுக்குள் இருக்க வேண்டும் என்று மட்டும் உறுதி செய்ய கேட்டு உள்ளனர். அதன் பின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரசியல் வேறுபாடுகளை பார்க்காமல் அனுமதி கொடுக்க கூறி உள்ளார்.
இந்த நிலையில் சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளித்ததற்காக தமிழக அரசுக்கும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் 'தி கோட்' திரைப்பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி நன்றி தெரிவித்துள்ளார்.
-
Vijay: உங்கள் விஜய்.. நா வரேன்.. விசிலடிக்க ரெடியா? தவெகவின் தேர்தல் பிரச்சார பாடல் வெளியீடு! -
விஜய் பற்றி.. டெல்லிக்கு பறந்த உளவுத்துறை ரிப்போர்ட்.. ஆட்டத்தை கலைத்து ஆடப்போகும் அமித் ஷா? -
10 சீட்டுகளை வெல்லும் தவெக.. 23.9 சதவிகித வாக்குகளை கைப்பற்றும் விஜய்.. லோக்போல் கருத்துக்கணிப்பு -
கொங்கு மண்டல பிரச்சாரத்தின் போது செங்கோட்டையன் வீட்டில் தங்கும் விஜய்.. புலம்பும் ஆதவ் அர்ஜுனா! -
போகிற இடமெல்லாம்.. அஜித் போட்டோவை தூக்கிட்டு போகும் எடப்பாடி.. விஜய்க்கு கவுண்டரா? ஆனால்...! -
தவெக வேட்பாளருக்கு எதிராக கொந்தளித்த மகளிரணி! கட்சியிலிருந்தே நீக்குங்க.. வெடிக்கும் பஞ்சாயத்து! -
விஜய் செல்வாக்கு + பதவி.. திருமாவளவன் மாநில அரசியலுக்கு திரும்புவதற்கு பின்னணியில் 2 காரணங்கள்! -
தமிழ்நாட்டில் தேர்தலுக்கு பின் விஜய் ஆதரவை கோருவோம்.. என்டிஏ கூட்டணி ஆட்சி உறுதி.. ராம்தாஸ் அத்வாலே! -
’ஆங்கிலோ இந்தியர்கள்’ நண்பரான விஜய் - பெரம்பூர் தொகுதி ஸ்பெஷல் தெரியுமா? -
தவெக பூந்தமல்லி வேட்பாளருக்கு சிக்கல்.. பெண் அளித்த புகாரின் பேரில் பாலியல் வழக்கு பதிவு -
கோவிலில் தேங்காய் உடைத்து பிரச்சாரத்தை தொடங்கிய தவெக முஸ்லிம் வேட்பாளர்கள் -
பிரதமர் மோடியின் முரட்டு அடிமை.. எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்












Click it and Unblock the Notifications