சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரரக்களை திணறடித்த "ஞாயிறு".. ஒரே நாளில் இப்படியா நடக்கணும்? எடப்பாடி டீமை டென்ஷனாக்கிய சசி - ஓபிஎஸ்!

Google Oneindia Tamil News

சென்னை: நேற்று ஒரே நாளில் அதிமுகவில் ஏகப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. ரத்தத்தின் ரத்தங்கள் என்ன நடக்கிறது என்று தெரியாமல் குழம்பும் அளவிற்கு வரிசையாக தொடர் சம்பவங்கள் நடந்துள்ளன.

அதிமுகவில் உட்கட்சி பூசல் உச்சத்தில் உள்ளது. அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் நான்தான் என்று எடப்பாடி பழனிசாமி தீவிரமாக சொல்லி வருகிறார். பொதுக்குழுவில் என்னைதான் பொதுச்செயலாளராக தேர்வு செய்தனர்.

அதனால் இதில் மாற்றம் செய்ய முடியாது என்று எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார். இன்னொரு பக்கம் ஓ பன்னீர்செல்வமோ பொதுக்குழுவோ சட்ட விரோதமாக நடந்தது என்று கூறி வருகிறார்.

ஆஹா! சட்டென ஆஹா! சட்டென "டோனை" மாற்றிய சசிகலா! பண்ட்ருட்டி ராமச்சந்திரனை பார்த்தது ஏன்? வலையில் சிக்கும் மீன்?

சட்ட விரோதம்

சட்ட விரோதம்

அதன்படி நான்தான் ஒருங்கிணைப்பாளர். அப்படி இருக்கும் போது, நான் அழைக்காமல் எப்படி பொதுக்குழுவை கூட்ட முடியும். அதனால் இதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஓ பன்னீர்செல்வம் கூறி வருகிறார். இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. அதிமுகவில் நிலவும் இந்த மோதல் தொடர்பாக தேர்தல் ஆணையத்திலும் முறையீடு செய்யப்பட்டு உள்ளது. விரைவில் இதில் முக்கிய தீர்ப்புகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

இந்த நிலையில்தான் நேற்று ஒரே நாளில் அதிமுகவில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றன. நேற்று தேனி சென்ற டிடிவி தினகரன் அங்கு ஓ பன்னீர்செல்வத்திற்கு நெருக்கமான நிர்வாகிகளை சந்தித்தார். தேனி மாவட்ட அமமுக செயல்வீரர்கள்- வீராங்கனைகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக டிடிவி தினகரன் அங்கு சென்றார். இவரை ஓபிஎஸ் ஆதரவாளர் சையது கான் வரவேற்றார். சையது கான் அங்கு எதேர்சையாக வந்ததாக கூறப்படுகிறது. மதுரைக்கு வேறு விஷயத்திற்காக சென்றவர்.. வழியில் சாஸ்தா கோவிலில் வைத்து டிடிவியை வரவேற்றதாக கூறப்படுகிறது.

நெருக்கம்

நெருக்கம்

ஓ பன்னீர்செல்வத்திற்கு நெருக்கமான இவர்தான் முன்பு சசிகலாவை அதிமுகவில் மீண்டும் சேர்க்க வேண்டும் என்று தேனியில் தீர்மானம் நிறைவேற்ற முக்கிய காரணமாக இருந்தார். இதனால் டிடிவி தினகரன் - ஓ பன்னீர்செல்வம் இருவரும் கை கோர்க்க போகிறார்களோ என்ற கேள்வி எழுந்துள்ளது. சையது கான் ஏற்கனவே சசிகலா, டிடிவி தினகரனுக்கு ஆதரவாக தேனி அதிமுகவில் தீர்மானம் நிறைவேற்ற காரணமாக இருந்தார். இந்த நிலையில்தான் இந்த சந்திப்பு அதிக கவனம் பெறுகிறது.

ஓ பன்னீர்செல்வம்

ஓ பன்னீர்செல்வம்

இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் நேற்று திடீரென சென்னையில் அதிமுக முன்னாள் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரனை சசிகலா சந்தித்தார். ராமசந்திரன் வீட்டில் நடைபெற்ற இந்த சந்திப்பில் அதிமுகவில் நிலவும் மோதல்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. ஒரு காலத்தில் திமுகவில் முக்கிய உறுப்பினராக இருந்தவர் பண்ட்ருட்டி ராமச்சந்திரன், அதன்பின் அதிமுக, பாமக, தேமுதிகவில் இருந்தார். இந்த நிலையில்தான் சசிகலா இவரை சந்தித்து பேசினார்.

சந்திப்பு

சந்திப்பு

இந்த சந்திப்பிற்கு பின் பேசிய சசிகலா, அதிமுகவில் விரைவில் கிளைமேக்ஸ் வர போகிறது என்று கூறினார். அதன்படி, எல்லாம் நல்லதாகவே நடக்கும். எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலுக்குள் எல்லாம் சரியாகிவிடும். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் அதிமுக இணையும். நான் யார் பக்கமும் இல்லை. தொண்டர்களின் விருப்பப்படியே செயல்பட்டு வருகிறேன், என்று சசிகலா குறிப்பிட்டார்.

அப்செட்

அப்செட்

சசிகலா, தினகரன், ஓபிஎஸ் ஆதரவாளர்களின் இந்த திடீர் சந்திப்புகள் காரணமாக எடப்பாடி தரப்பு கடும் அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. சாதி ரீதியாக மூவரும் ஒன்று சேர்கிறார்களோ என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு சந்தேகிக்க தொடங்கி உள்ளதாம். முக்குலத்தோர் பிரிவினர் ஒன்று சேர்ந்து அதிமுகவிற்கு எதிராக அணியை உருவாக்க போவதாக வரும் தகவல்கள் காரணமாக எடப்பாடி தரப்பு கடும் அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.

Recommended Video

    ADMK இப்போது வர்த்தகர்கள் கூட்டம் ஆகிவிட்டது - TTV Dinakaran *Politics
    ஞாயிறு

    ஞாயிறு

    அதிலும் நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து நடந்த சந்திப்புகள், ஆலோசனைகள், பேட்டிகள் காரணமாக எடப்பாடி கேம்ப் கொஞ்சம் கிலியில்தான் இருக்கிறது. ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் தனி தனியாக இருந்தால் அவர்களால் எடப்பாடியை எதுவும் செய்ய முடியாது. ஆனால் இவர்கள் மூவரும் இணைந்தால் அதிமுகவின் வாக்குகள் வெகுவாக பிரியும். எடப்பாடி இதனால் பாதிப்படைய வாய்ப்பு உள்ளது என்கிறார்கள் அரசியல் வல்லுனர்கள். இதனால்தான் நேற்று நடந்த சந்திப்புகளை பார்த்து எடப்பாடி தரப்பு அதிர்ச்சியில் இருக்கிறது என்கிறார்கள் விவரம் அறிந்த ரத்தத்தின் ரத்தங்கள்!

    English summary
    How does a single Sunday turn out to be a not-so-good day for the Edappadi Palanisamy team? நேற்று ஒரே நாளில் அதிமுகவில் ஏகப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. ரத்தத்தின் ரத்தங்கள் என்ன நடக்கிறது என்று தெரியாமல் குழம்பும் அளவிற்கு வரிசையாக தொடர் சம்பவங்கள் நடந்துள்ளன.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X