Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வித்யாவின் சிறு தவறால் 67 லட்சம் பறிபோனது.. சென்னையில் நிலம், வீடு வாங்குவோர் இப்படியும் ஏமாறலாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டிலேயே எங்குமே இல்லாத அளவிற்கு நிலத்தின் மதிப்பு அதிகமாக இருப்பது சென்னையில் தான். 20 வருடம் முன்பு சென்னையின் புறநகர் பகுதிகளில் நிலம் வாங்கி போட்டிருந்தால், கற்பனை செய்ய முடியாத அளவிற்கு பல மடங்கு விலை ஏறிவிட்டதை பார்த்திருப்பீர்கள்.. அந்த அளவிற்கு நிலத்தின் மதிப்பு பல லட்சங்களை கடந்துள்ளது. இதனால் நிலத்தை கைப்பற்றும் நோக்கில் மோசடி பதிவுகள் நடக்கின்றன. அந்த வகையில் சென்னையில் ஆள்மாறாட்டம் செய்து ரூ.67 லட்சம் மதிப்புள்ள நிலம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதில் ஒருவர் கைதாகி உள்ளார்.

சென்னையில் உள்ள நிலத்தின் மதிப்பிற்கு ஒரு சராசரி அல்லது மிதமான சம்பளம் வாங்குபவர் தன் வாழ்நாள் முழுக்க சேர்த்து வைத்தாலும் நிலமோ, இடமோ வாங்கிவிட முடியாது. ஏனெனில் சராசரியாக 40 லட்சத்திற்கு மேல் , ஏன் சில பகுதிகளில் கோடிகளில் தான் ஒரு சென்ட் நிலம் போகிறது. இப்படி நிலத்தின் மதிப்பு அதிகமாக இருப்பதால் மோசடி சம்பவங்களும் அதிகமாக நடக்கிறது. சில இடங்களில் ஆள்மாறாட்டம் செய்து மோசடி செய்வது நடக்கிறது.

How does impersonation land fraud happen in Chennai 67 lakhs lost due to Vidya s small mistake

உண்மையான நில உரிமையாளர் போல் தோற்றம் கொண்ட ஒருவரை அமர்த்தி, போலியான ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, பான் கார்டு போன்ற ஆவணங்களைத் தயாரித்து, அவற்றைப் பயன்படுத்தி விற்பனைப் பத்திரத்தைப் பதிவு செயவது நடக்கிறதாம். மோசடி செய்பவர்கள் பத்திரப் பதிவு அலுவலக ஊழியர்கள் அல்லது ஆவண எழுத்தர்களுடன் கூட்டு சேர்ந்து இப்படி மோசடிகளை அரங்கேற்றி உள்ளதாக புகார்கள் கடந்த சில ஆண்டுகளில் வந்துள்ளது..

நிலத்தின் உரிமையாளர்

நிலத்தின் உரிமையாளர் வெளிநாட்டில் இருப்பார். அல்லது நிலம் எங்கு உள்ளது என்றே தெரியாத அளவிற்கு நிலத்தின் உரிமையாளர்களின் பிள்ளைகள் நிற்க நேரம் கூட இல்லாமல், வெளிநாடுகளில் செட்டில் ஆகியிருப்பார்கள். சில உரிமையாளர்கள் வயதானவர்களாக இருப்பார்கள். அப்படிப்பட்ட நிலத்தை தான் மோசடியாளர்கள் ஆள்மாறாட்டம் செய்ய பயன்படுத்துகிறார்களாம்.

போலி குடும்ப அட்டை

அந்த வகையில் நில உரிமையாளரின் பெயரில் போலியாகத் தொடங்கப்பட்ட வங்கி கணக்குப் புத்தகம் அல்லது காசோலைகள் மற்றும் போலியான குடும்ப அட்டைகள் மூலம் வாரிசுகளாக ஆள்மாறாட்டம் செய்வார்கள். பின்னர் மோசடி செய்து நிலத்தை பத்திப்பதிவு செய்வார்கள். இப்படி பத்திரப்பதிவு செய்த நிலத்தை உடனே வெறு நபர்களுக்கு விற்றுவிடுவார்களாம்.

போலி ஆவணம்

அதேபோல் உண்மையான நில உரிமையாளரிடமிருந்து, வேறொருவருக்கு நிலத்தை விற்கும் அதிகாரத்தை வழங்கும் பொது அதிகாரப் பத்திரத்தை போலியாக உருவாக்குவதுடன், வெளிநாட்டில் வசிக்கும் உரிமையாளர்களின் கையெழுத்து மற்றும் நோட்டரி பொதுமக்களின் சீல்களைப் போலியாகப் பயன்படுத்தி பத்திரங்கள் தயாரிப்பார்களாம். பின்னர் ஆள்மாறாட்டம் செய்து இந்தப் போலி அதிகாரப் பத்திரம் மூலம் நிலத்தை எளிதில் விற்று விடுவார்களாம். சென்னை கொளம்பாக்கத்தை சேர்ந்தவருக்கு என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

சென்னையில் மோசடி

சென்னை கொளப்பாக்கம் மேக்ஸ்வர்த் நகரை சேர்ந்த 36 வயதாகும் வித்யா என்பவர் நிலம் வாங்க விரும்பியுள்ளார். அவரிடம் முகப்பேர் பகுதியை சேர்ந்த ராகுல் என்பவர் சுப்புராயலு என்பவருக்கு கொளப்பாக்கம் பகுதியில் 1,500 சதுர அடி நிலம் உள்ளது என கூறியுள்ளார்.
இதையடுத்து அந்த இடத்தை வித்யா ரூ.67 லட்சத்து 50 ஆயிரத்து 500-க்கு வாங்கி பத்திரப்பதிவு செய்துள்ளார். நிலத்தை வாங்க தியாகு, பிரபாகரன், லலிதா மற்றும் அருள்பிரகாஷ் ஆகியோர் உதவி செய்திருக்கிறார்கள்.

வித்யாவிற்கு 67 லட்சம் பறிபோனது

இந்த நிலையில் வித்யாவிற்கு நிலத்தின் உரிமையாளரான சுப்புராயலு என்பவர் தான் சொத்தை யாருக்கும் பத்திரப்பதிவு செய்து கொடுக்கவில்லை என்று வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த வித்யா பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சென்று விசாரித்துள்ளார். அப்போது சொத்தின் உரிமையாளரான சுப்புராயலு உயிரோடு இருக்கும் போது போலியான சுப்புராயலு என்று ஆள்மாறாட்டம் செய்து மேற்கண்ட நபர்கள் மோசடி செய்தது வித்யாவிற்கு தெரியவந்தது.

ஆவடி போலீஸ் அதிரடி

இதுகுறித்து வித்யா ஆவடி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் வழக்குப்பதிவு செய்து இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட சென்னை, முகப்பேர் பகுதியை சேர்ந்த அருள்பிரகாஷ் (வயது 47) என்பவரை நேற்று கைது செய்தனர். மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+