தீபாவளிக்கு ஏன் ஆட்டுக்கறி எடுக்கிறாங்க தெரியுமா? ஆனால் வட இந்தியாவில் மட்டும் சைவம்.. ஏன்?
சென்னை: தீபாவளி என்றாலே புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து, இனிப்பு பலகாரங்களோடு ஆட்டுக்கறி, கோழிக்கறிக்குழம்பு சாப்பாடு சாப்பிடுவது வழக்கம். ஆனால் தீபாவளி அன்று அசைவ சாப்பாடு சாப்பிடும் பழக்கம் எப்படி வந்தது என்றும் வட இந்தியாவில் சைவம் மட்டும் தான் சாப்பிடும் பழக்கம் ஏன் என்று இங்கே பார்க்கலாம்.
தீபாவளி பண்டிகை தமிழ்நாடு முழுவதும் களை கட்ட தொடங்கியுள்ளது. தீபாவளிப் பண்டிகை என்றாலே சின்னஞ்சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவர் மனதிலும் ஒரு கொண்டாட்ட எண்ணம் வந்துவிடும். அவரவர் வசதிக்கு ஏற்ப அனைத்து மதத்தினரும் கொண்டாடும் ஒரே பண்டிகை இந்த தீப ஒளித் திருநாள் தான். தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுவதற்கு புராண இதிகாச கதைகள் பல சொல்லப்படுகிறது.

குறிப்பாக மூன்று முக்கிய கதைகள் சொல்லபடுகின்றன. ராமாயண கதைப்படி, ராமர் 14 ஆண்டுகள் வனவாசம் முடிந்து அயோத்தி திரும்பும் நாளை கொண்டாடியதுதான் தீபாவளி என்று சொல்லப்படுகிறது. இன்னொன்று என்னவென்றால் கடவுள் கிருஷ்ணர் நரகாசுரனை அழித்த நாள் என்றும் அதனை கொண்டாடும் நாள் என்றும் சொல்லப்படுகிறது. மற்றொன்று சமண மதத்தின் மகாவீரர் வீடுபேறு அடைந்த நாள்.
தீபாவளி பண்டிகை: மகாவீரர் வீடுபேறு அடைந்த நாளை சமண மதத்தவர், அவரது சிறப்பைப் போற்ற, தீபங்கள் ஏற்றி வழிபடுகின்ற நாள் என்றும் சொல்லப்படுகிறது. பஞ்சாபில், 1577ஆம் ஆண்டில் இத்தினத்தில் தான் தங்கள் புனித திருத்தலமான பொற்கோவில் கட்டுமானப் பணியை துவங்கினர். அதைக் கொண்டாடவே தீபாவளித் திருநாளன்று இரவில் சீக்கியர்கள் தங்கள் வீடுகளிலும், குருத்வாராக்களிலும் தீபங்களையும் மெழுகுவர்த்திகளையும் ஏற்றி வைத்து தீபாவளித் திருநாளை கொண்டாடி மகிழ்கின்றனர்.
குஜராத் மாநிலத்தை பொறுத்தவரையில், தீபாவளித் திருநாளை புத்தாண்டு தினமாக கொண்டாடி மகிழ்கின்றனர். இப்படி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதற்கு பல்வேறு காரணங்களும் பல விதமாகவும் கொண்டாடப்படுகிறது. ஆனால், இந்தக் கதைகள் எல்லாம் வலியுறுத்துவது தீமைகளை அழித்து மக்களின் மனதில் மகிழ்ச்சியை மலரச் செய்த நன்னாள் என்பது ஒன்றுதான். எனவேதான் இதை சாதி, மதம் பேதமின்றி அனைத்து தரப்பினரும் கொண்டாடுவதை பார்க்க முடிகிறது.
அசைவம் இல்லாமல் தீபாவளியா: தீபாவளி நாளில் நரகாசூரனை மகிழ்விக்க நல்லெண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடை அணியவேண்டும் என்பது மரபு. அதை முடித்துவிட்டு அப்படியே ஸ்வீட் பலகாரங்களை முடித்து விட்டு தீபாவளி நாளில் அசைவ உணவு இல்லாமல் எப்படி என்று இளைஞர்களும், சிறுவர்களும் கேட்பார்கள். மட்டன் பிரியாணி, சிக்கன் கிரேவி, போன்லெஸ் ப்ரை, மீன் பொறியல் முட்டை அவியல் என பல ஐயிட்டங்களை கலந்து கட்டி சாப்பிடுவார்கள்.
கூடவே டிவியில் சிறப்பு திரைப்படங்களும் பார்த்துக்கொண்டே சாப்பிடுவதுதான் தீபாவளியின் சிறப்பம்சமாகிவிட்டது. தென் இந்தியாவில் அசைவம் இல்லாமல் தீபாவளி என்றால் ஆச்சர்யத்துடன் கேட்க தொன்றுகிறது அல்லவா.. ஆனால், வட இந்தியாவில் தீபாவளி நாளில் அசைவத்தை மறந்தும் தொட மாட்டார்கள். தமிழ்நாட்டில் தீபாவளி கொண்டாடப்படுவதற்கு காரணம் குறித்த வரலாற்று தரவுகள் குறைவாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
பழக்கம் எப்படி வந்தது: அதாவது, 19ஆம் நூற்றாண்டுவரை தீபாவளி குறித்த குறிப்புகள் தமிழ் வரலாற்றில் எதுவும் இல்லை என்பதே வரலாற்று ஆய்வாளர்கள் முன்வைக்கும் கருத்தாக இருக்கிறது. அதே நேரத்தில் இன்று பரவலாக கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை , விசயநகர மன்னர்களின் காலத்தில் தெலுங்கு பிராமணர் வழியாக தமிழ்நாட்டிற்கு வந்த திருவிழா என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது.

தமிழக பண்பாடுகளில் இறைச்சி உணவு என்பதே, விருந்தாக ஒருவருக்கு கொடுக்கும் உணவாக பார்க்கப்படுகிறது. அசைவ உணவு சாப்பிடுவர்கள் இன்றுவரை வீட்டிற்கு முக்கிய விருந்தினர்கள் வந்தால், சிக்கன், மட்டன் என கறி விருந்து வைக்கும் பழக்கம் உள்ளது. மற்றவர்களுக்கு விருந்து கொடுக்கும்போது அதனை சிறப்பாக கொடுப்பதற்கு இறைச்சி கலந்த உணவு அளிப்பதை கவுரமாக கருதும் வழக்கம் நெடுங்காலமாக தமிழ்நாட்டில் உள்ளது.
வட இந்தியாவில் ஏன் சைவம்: அதேபோல், கொண்டாட்ட மனநிலையில் இருந்தால் முதலில் கறி விருந்து வைத்துதான் சாப்பிடுவது வழக்கம் உள்ளது. இன்றளவில் இளைஞர்கள் மத்தியில்கூட, ஒரு கொண்டாட்ட மனநிலை அல்லது உற்சாகமாக கொண்டாடும் நிகழ்ச்சி என்றால் கண்டிபாக அதில் அசைவம் இருக்கும். அதன் தொடர்ச்சியாகவே, தீபாவளி பண்டிகையிலும் கறி விருந்து வைக்கிறார்களே தவிர வேறு சிறப்பான காரணங்கள் ஏதுமில்லை என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது.
வட இந்தியாவை பொறுத்தவரை தீபாவளி பண்டிகை புனித நாளாக கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக ராமாயண கதைப்படி, ராமர் 14 ஆண்டுகள் வனவாசம் முடிந்து அயோத்தி திரும்பும் நாளை கொண்டாடியதுதான் தீபங்களாக விளக்கு ஏற்றி கொண்டாடடப்படுவதாக புராண கதைகள் சொல்கின்றன. எனவே, இந்த நாளில் அசைவ உணவுகள் சாப்பிடுவதை தவிர்த்து சைவ உணவுகளை அன்றைய நாளில் சாப்பிடும் பழக்கம் வட இந்திய மக்களிடம் எற்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
எது எப்படியோ.. இந்த தீபாவளியை நீங்கள் எப்படியெல்லாம் கொண்டாடலாம் என ஏற்கனவே பிளான் போட்டு வைத்திருப்பீர்கள்... அனைவரும் பாதுகாப்பாகவும் உற்சாகமாகவும் இந்த தீபாவளியை கொண்டாடுங்கள்..
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications