திருமாவின் "பளீர்" மூவ்.. திரண்ட கட்சிகள்! எதிர்பார்க்காத ஆர்எஸ்எஸ்! பேரணிக்கு தடை கிடைத்தது எப்படி?
சென்னை: ஆர்எஸ்எஸ் அமைப்பும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் ஒரே நாளில் தமிழ்நாட்டில் பேரணி நடத்த திட்டமிட்டு இருந்த நிலையில் தமிழ்நாடு அரசு பேரணிகளுக்கு தடை விதித்து உள்ளது.
தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் பேரணியை நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பு குறைபாடுகளை காரணம் காட்டி பேரணி நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் 51 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சார்பில் அக்டோபர் 2ஆம் தேதி அணிவகுப்பு ஊர்வலம் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இந்திய சுதந்திர தின 75ஆம் ஆண்டு, அம்பேத்கரின் பிறந்த தின நூற்றாண்டு, விஜய தசமி ஆகியவற்றை முன்னிட்டு இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது.
இதற்கு அனுமதி வழங்கும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில்தான் போலீசார் இந்த பேரணிக்கு தடை விதிப்பதாக அறிவித்துள்ளனர்.

பேரணி
இங்கே ஆர்எஸ்எஸ் பேரணிக்கு கோர்ட் அனுமதி கொடுக்கும்படி உத்தரவிட்டதும் இன்னொரு பக்கம் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் எம்பி திருமாவளவன் மத நல்லிணக்க மனித சங்கிலிப் போராட்டம் நடத்துவதாக திருமா அறிவித்தார். அதே காந்தி ஜெயந்தி தினத்தில் பேரணி நடத்துவோம் என்று மத நல்லிணக்க மனித சங்கிலிப் போராட்டம் குறித்த அறிவிப்பை திருமாவளவன் வெளியிட்டார். அதோடு ஆர்எஸ்எஸ் பேரணிக்கு எதிராக வழக்கும் தொடுத்தார். உயர் நீதிமன்றம் தனது உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்று வழக்கு தொடுத்தார்.

ஆர்எஸ்எஸ்
விஜய தசமி மீது நம்பிக்கை இல்லாத அம்பேத்கரின் கொள்கைக்கு முரணாக இந்த அணிவகுப்பு நடத்தப்படுகிறது, அம்பேத்கரை இந்துத்துவா ஆதரவாளராக சித்தரிக்க ஆர்.எஸ்.எஸ். முயற்சிக்கிறது. அக்டோபர் 2 ஆம் தேதி வி.சி.க சார்பில் தமிழகம் முழுவதும் சமூக நல்லிணக்க ஊர்வலம் நடத்த உள்ளது. நீதிமன்ற நிபந்தனைகளை பின்பற்றாமல் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்த ஆர்.எஸ்.எஸ் திட்டமிட்டுள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
விஜய தசமி மீது நம்பிக்கை இல்லாத அம்பேத்கரின் கொள்கைக்கு முரணாக இந்த அணிவகுப்பு நடத்தப்படுகிறது, அம்பேத்கரை இந்துத்துவா ஆதரவளராக சித்தரிக்க ஆர்.எஸ்.எஸ். முயற்சிக்கிறது. அக்டோபர் 2 ஆம் தேதி வி.சி.க சார்பில் தமிழகம் முழுவதும் சமூக நல்லிணக்க ஊர்வலம் நடத்த உள்ளது. நீதிமன்ற நிபந்தனைகளை பின்பற்றாமல் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்த ஆர்.எஸ்.எஸ் திட்டமிட்டுள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

விசிக
இந்த நிலையில்தான் தமிழ்நாடு அரசுக்கும் இக்கட்டான ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. ஒரு பக்கம் ஆர்எஸ்எஸ் பேரணி. இன்னொரு பக்கம் விசிக பேரணி நடக்கிறது. இது போக இடையில் பெட்ரோல், டீசல் குண்டு தாக்குதல்கள் நடக்கின்றன. இதெல்லாம் போக பிஎஃப் அமைப்பை தடை செய்துள்ளதால் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் எந்த விதமான பேரணிக்கு இடம் கொடுத்தாலும் அது கலவரத்தில் முடியும் வாய்ப்புகள் உள்ளன.

திருமாவளவன்
இந்த நிலையில்தான் ஆர்எஸ்எஸ்ம் எதிர்பார்க்காத ஒரு சம்பவமும் நடைபெற்றது. விசிக போராட்டத்தை முதலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக இணைந்து நடத்துவதாக மட்டுமே இருந்தது. ஆனால் கடந்த இரண்டு நாட்களாக நாம் தமிழர் கட்சி, வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சி போன்ற கட்சிகளும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தன. வேறு வேறு இடங்களில் இருக்கும் கட்சிகள் ஒன்றாக ஒரு குடையின் கீழ் கூடியதை ஆர்எஸ்எஸ் அமைப்பே எதிர்பார்க்கவில்லை.

ட்விஸ்ட்
இதனால் விசிக நடத்தும் பேரணி பிரம்மாண்ட பேரணியாக உருவெடுத்தது. இந்த நிலையில்தான் சட்டென உள்ளே புகுந்த தமிழ்நாடு அரசு பேரணிக்கு தடை விதித்து உள்ளது. ஆர்எஸ்எஸ் பேரணி காரணமாக சட்ட ஒழுங்கு கெடும் என்று கூறி, பாதுகாப்பு விஷயங்களை காரணம் காட்டி தடை விதித்து உள்ளது. அதேபோல்விசிக உள்ளிட்ட மற்ற அமைப்புகள், கட்சிகள் பேரணி நடத்தவும் தடை விதித்து உள்ளது. ஆர்எஸ்எஸ் பேரணி செய்தால்.. நாங்களும் பேரணி செல்வோம் என்று திருமா உறுதியாக இருந்த நிலையில்தான்.. ஆளும் தரப்பு மொத்தமாக அனைத்து பேரணிகளுக்கும் தடை விதித்து உள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications