அரிசி கொம்பன் நன்றாக இருக்கிறான்.. ஆனால் உடல் மெலிந்தது ஏன் தெரியுமா?.. வனத்துறை அதிகாரி பேட்டி
சென்னை: அரிசி கொம்பன் யானை நலமுடன் இருக்கிறான் என்றும் இயற்கையான உணவுகளை சாப்பிடுகிறான் என்றும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேனி மாவட்டம் கம்பம் மேகமலைப்பகுதி மக்களை பீதியிலும் அச்சத்திலும் ஆழ்ந்தி வந்தது கேரளாவை சேர்ந்த அரிசிக் கொம்பன் யானை. இது மூணாறு பகுதியை சேர்ந்தது.

இந்த யானை கம்பம் பகுதிகளில் சுற்றித் திரிந்த போது தனியார் நிறுவனத்தில் பாதுகாவலராக பணியாற்றிய பால்ராஜ் என்பவரை தாக்கியது. இதில் படுகாயமடைந்த பால்ராஜ் கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு உயிரிழந்தார்.
இதையடுத்து அந்த யானையை பிடிக்க வனத்துறையினர் தீவிரம் காட்டி வந்தனர். ஆனாலும் வனத்துறையினருக்கு போக்கு காட்டி வந்தது. இந்த நிலையில் அந்த யானையை கடந்த 6 ஆம் தேதி அன்று 3 மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். வழியோர பகுதிகளில் அரிசிக் கொம்பனின் ஆக்ரோஷத்தை தணிக்க மேலும் இரு முறை மயக்க ஊசி செலுத்தப்பட்டது.
இதையடுத்து நெல்லை மாவட்டத்தின் மணிமுத்தாறு பகுதி மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி 45 கி.மீ. தொலைவு மலை மீதுள்ள மாஞ்சோலைக்குள் கொண்டு வந்தனர். மயக்க ஊசியின் தாக்கத்தால் 4 நாட்கள் உணவு உட்கொள்ளாமலும் 2 நாட்கள் தண்ணீர் குடிக்காமலும் இருந்தது. இந்த நிலையில் இந்த அரிசிக் கொம்பன் மிகவும் பலவீனமடைந்துவிட்டது.
இதையடுத்து அரிசிக் கொம்பனை 25 க்கும் மேற்பட்ட வனத்துறையினர் கோதையாறு பகுதியில் கொண்டு போய்விட்டனர். மேலும் அதன் நடமாட்டத்தை கண்காணிக்க கொம்பனின் கழுத்தில் ரேடியோ காலர் கருவி பொருத்தப்பட்டது. இந்த நிலையில் அரிசிக் கொம்பன் யானை பார்ப்பதற்கு உடல்நலக் குறைவுற்று காணப்படுகிறது. கோதையாறு பகுதியில் குட்டியாறு இடத்தில் விடப்பட்ட அரிசிக் கொம்பன் யானை சரியாக உணவு உட்கொள்ளாததால் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து யானை விடப்பட்ட இடத்தைவிட்டு வேறு எங்கும் செல்லாமல் அங்கேயே சுற்றி வருகிறது.
உடல் மெலிந்து காணப்படுவதால் மருத்துவ சிகிச்சை வழங்க வனத்துறை நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிகிறது. அது போல் அதன் சாணத்தை எடுத்து பரிசோதனை செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குநர் செண்பகப்பிரியா தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: அரிசிக் கொம்பன் நலமுடன் உள்ளது.
அரிசியை சாப்பிட்டு வந்த நிலையில் தற்போது இயற்கையான உணவுகளை சாப்பிடுகிறது. தூரத்திலிருந்து புகைப்படம் எடுக்கப்பட்டதால் மெலிந்தது போல் தெரிகிறது. மற்றபடி யானை நன்றாக இருக்கிறது என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications