படத்தில் எத்தனை குதிரைகள் உள்ளன? சரியான விடையை கண்டுபிடித்தால் நீங்க ஜீனியஸ் தான்.. 7 செகண்ட் டைம்!
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மொத்தம் எத்தனை குதிரைகள் உள்ளன என்று கண்டுபிடிக்க வேண்டும். இதுவே உங்களுக்கான இன்றைய சவால் ஆகும். 7 செகண்டுக்குள் விடையை சரியாக கூறினீர்கள் என்றால் நீங்க ஜீனியஸ். எளிதில் விடையை கண்டுபிடித்துவிடலாம் என்று நீங்கள் நினைக்காதீங்க.. என்ன போட்டிக்கு தயாரா?
பார்க்கும் நம் கண்களை ஏமாற்றி மூளையை குழப்பமடையச் செய்யும் படங்களே ஆப்டிகல் இல்யூஷன் படங்கள். எப்படி சாலையில் தூரத்தில் கானல் நீர் தெரிகிறதோ அதேபோலத் தான் ஆப்டிகல் இல்யூஷன் படங்களும். தூரத்தில் தண்ணீர் இருப்பது போல் தெரியும், ஆனால் அருகில் சென்று பார்த்தால் தண்ணீர் இருக்காது. அது போலத்தான் இருப்பது போன்று நம் கண்களுக்கு காட்சியளித்து ஏமாற்றிவிடும்.

ஆப்டிகல் இல்யூஷன் படம்
ஒருவரது கவனிப்புத்திறன், பார்வைத்திறன் எப்படி உள்ளது என்பதை இது போன்ற படங்களை வைத்து கண்டுபிடிக்க முடியும் என்று ஆய்வுகள் சொல்கின்றன. இதனால் ஆப்டிகல் புதிர் படங்களானது போட்டித் தேர்வுகளில் கூட கேட்கப்படுகிறது. ஒருவர் எந்த மாதிரி கோணத்தில் படத்தை அணுகுகிறார், எப்படி விடையை கண்டுபிடிக்கிறார் என்பது ஆராயப்படுகிறது. இதனால் இதுபோன்ற படங்கள் அதிகளவில் இணையத்தில் பரவுகின்றன.
பலரும் நம்மால் விடையை கண்டுபிடிக்க முடியுமா என தங்களுக்குள்ளே சேலஞ்ச் எடுத்துக்கொண்டு விடையை கண்டுபிடிக்க முயற்சிக்கிறார்கள். ஒரு வேளை சரியான நேரத்திற்குள் விடையை கண்டுபிடித்துவிட்டால் தன் நண்பர்களுக்கு அனுப்பி அவர்களால் முடிகிறதா என்று சோதித்து பார்க்கிறார்கள். அவர்களும் படத்தை பார்த்து விடையை கண்டுபிடிக்க முடியாமல் குழம்பிப் போய்விடுகிறார்கள்.
எத்தனை குதிரைகள் உள்ளன?

அப்படித்தான் இன்று கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூசன் படமும் கண்களை குழப்பக் கூடியது. ஒரு பெரிய பனிச் சரிவில் குதிரைகள் பல நிற்பது போல படம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 5 முதல் 6 குதிரைகள் இருக்கிறதோ என்று நம் கண்களுக்கு தெரியலாம். ஆனால் உறுதியாக சொல்ல முடியாது என்பதே நிதர்சனமான உண்மை. ஆம். இந்த படத்தில் மொத்தம் எத்தனை குதிரைகள் இருக்கின்றன என்று கண்டுபிடிக்க வேண்டும் என்பதே சவால் ஆகும்.
படத்தை பார்ப்பதற்கு முன்னர் பலரும் இதெல்லாம் ஒரு விஷயமா என்று ஈசியாக கண்டுபிடித்து சொல்லிவிடுவொம் என்று தான் சொல்வார்கள். ஆனால் படத்தை பார்த்த பிறகு உண்மையிலேயே நம் கண்களுக்கு குழப்பமாக இருக்கிறதே என்று நினைப்பீர்கள். சரி 7 செகண்டுக்குள் விடையை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். உங்களுக்கான நேரம் தொடங்கியது. 1.. 2.. 3.. .. .7. ஓக்கே டைம் ஓவர்.
விடையை கமெண்ட் செய்யுங்கள்
குறிப்பிட்ட 7 செகண்டுக்குள் விடையை கண்டுபிடிக்க முடிந்ததா?.. படத்தில் எத்தனை குதிரைகள் உள்ளன. சரியான விடையை கண்டுபிடித்தவர்கள் ஜீனியஸ் தான். ஏனென்றால் ஒரு குதிரை இருப்பது போல் தெரியும் ஆனால் இருக்காது.. இப்படி நன் கண்களை ஏமாற்றும் வகையில் இந்த படம் கொடுக்கப்பட்டு இருந்தது. எனவே படத்தில் எத்தனை குதிரைகள் இருக்கின்றன என்று கண்டுபிடிப்பது சற்று சவால் மிக்கது தான். சரியான விடை என்ன? என்பதை கமெண்ட்டில் பதிவிடுங்கள்.












Click it and Unblock the Notifications