தமிழ்நாட்டில் முதல் முறையாக வாக்களிக்க போகும் இளம் வாக்காளர்கள் எண்ணிக்கை எத்தனை தெரியுமா?
சென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். இதில், தமிழ்நாட்டில் முதல் முறையாக வாக்களிக்க போகும் இளம் வாக்காளர்கள் எண்ணிக்கை எத்தனை என்ற லிஸ்டையும் வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே எஞ்சியிருக்கிறது. இதனால், தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறது. வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, வாக்களர் பட்டியலில் பெயர் நீக்கம், சேர்த்தல் என பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தான் இன்று தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். இதில், தமிழ்நாட்டில் முதல் முறையாக வாக்களிக்க போகும் இளம் வாக்காளர்கள் எண்ணிக்கை எத்தனை என்ற லிஸ்டையும் வெளியிட்டுள்ளார். இதில் கூறப்பட்டிருப்பதாவது:-
சிறப்பு சுருக்க முறைத் திருத்தத்தின் ஒருங்கிணைக்கப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி, தமிழ்நாட்டில் 6,18,90,348 வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஆண் வாக்காளர்கள் 3,03,96,330 மற்றும் பெண் வாக்காளர்கள் 3,14,85,724 மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 8,294 பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதில், முதல் முறையாக வாக்களிக்க போகும் இளம் வாக்காளர்கள் எண்ணிக்கையானது மொத்தம் 5,26,205 ஆகும். அதாவது, சிறப்பு சுருக்கமுறைத் திருத்தத்தின்போது, பெயர் சேர்த்தலுக்காக பெறப்பட்ட மொத்தப் படிவங்களில், 18 - 19 வயதுள்ள 5,26,205 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில், ஆண்கள் 2,74,035, பெண்கள் 2,52,096 மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 74 ஆகும்.
வாக்காளர் பட்டியலினை, தலைமைத் தேர்தல் அதிகாரியின் வலைத்தளமான https://elections.tn.gov.in என்ற வலைத்தளத்தில் காணலாம். அதில் வாக்காளர்கள் தங்கள் பெயரைச் சரிபார்த்துக் கொள்ளலாம். இதேபோல், வாக்காளர் பட்டியல் தொடர் திருத்த நடைமுறை தற்போது செயல்பாட்டிலுள்ளது.
அதாவது 22.01.2024 முதல் 01.01.2024 அன்று வரை 18 வயது நிரம்பிய தகுதியுள்ள நபர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் இருந்தால், கீழ்க்கண்ட முறைகளில் விண்ணப்பிக்கலாம். அதன்படி, i. வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகத்தில் படிவம் 6-ஐ சமர்ப்பித்து விண்ணப்பிக்கலாம். ii. இணையம் மூலமாக (www.voters.eci.gov.in) என்ற வலைத்தளத்திலும் விண்ணப்பிக்கலாம். iii. கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து "Voter Helpline App" செயலியைத் தரவிறக்கம் செய்து அதன்மூலம் விண்ணப்பிக்கலாம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications