வேலுமணி ரெய்டில் கற்ற பாடம்.. கே.சி.வீரமணிக்கு எதிராக நடந்த ரகசிய ஆபரேஷன்.. தொண்டர்களுக்கு டிமிக்கி
சென்னை: அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு சொந்தமான, 28 இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரெய்டு நடத்தி வருகின்றனர். ஆனால், சோதனை நடத்தும் தகவல் லீக் செய்யப்படாமல் மிகவும் ரகசியம் காக்கப்பட்டு இருக்கிறது.
Recommended Video
கடந்த ஆகஸ்ட் மாதம் முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தியபோது முன்கூட்டி அந்த விஷயம் அவரது காதுகளுக்கு சென்றுவிட்டதாக கூறப்பட்டது.
இதையடுத்து காலை 6 மணி முதலே தொண்டர்கள் வேலுமணி வீட்டுக்கு முன்பாக புகுந்து போராட்டங்கள் நடத்தியதாகவும் கூறப்பட்டது .

பெரும் தள்ளுமுள்ளு
போலீசாருக்கும் அதிமுக தொண்டர்களுக்கும் இடையே பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சிலர் பேரிகேட்களை தள்ளி கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதுபோன்ற பரபரப்பு சம்பவங்கள் வேலுமணியின் வீட்டுக்கு எதிரே நடைபெற்று அதிர்ச்சியை ஏற்படுத்தின. ஆனால், வீரமணி வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் சோதனைகள் நடைபெற்றாலும் அது குறித்த தகவல் முன்கூட்டியே வெளியே தெரியவிடவில்லை.

கருப்பு ஆடுகள்
கடந்த முறை விஷயம் எப்படி வெளியே கசிந்தது என்பதை காவல்துறை உயர் அதிகாரிகள் கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுத்து இந்த ஆபரேஷனை மிகவும் ரகசியமாக செயல்படுத்தி உள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள சில அதிகாரிகள், கோவை மாவட்டத்தில் உள்ள சில அதிகாரிகள் மூலம் ரெய்டு நடக்கப்போகும் தகவல் முன்கூட்டியே எதிர் முகாமுக்கு சென்று உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த முறை கருப்பு ஆடுகள் காதுகளுக்கு தகவல் செல்லாமல் உஷாராக ரகசியம் காத்து இந்த ரெய்டு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக தான் காலை முதல் அதிமுக தொண்டர்கள் அங்கு வந்து குவியவில்லை. இதனால் காவல்துறையினரின் பணிகளுக்கு இடையூறு ஏற்படவில்லை.

சாலை மறியல்
ரொம்பவே தாமதமாக காலை 10.30 மணி அளவில் இடையப்பட்டி பகுதியில் அதிமுகவினர் சாலை மறியல் செய்து போராட்டம் நடத்தி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். வேலுமணி வீட்டுக்கு முன்பாக போராட்டம் நடத்திய தொண்டர்களுக்கு காலையில், இட்லி, பொங்கல், டீ, காபி போன்றவை வழங்கப்பட்டன. மதியம், தக்காளி சாதம், லெமன் சாதம், தயிர் சாதம் போன்றவை வழங்கப்பட்டன. அத்தோடு விடவில்லை வெயிலுக்கு இதமாக மாலையில் ரோஸ் மில்க் வழங்கப்பட்டது.

வடை போச்சே
வீரமணி வீட்டில் சோதனை நடத்துவது தொண்டர்களுக்கு தெரியாது என்பதால் அவர்கள் வந்து குவியவில்லை. இதனால் அவர்களுக்கு டிபன் , சாப்பாடு போன்றவையும் சப்ளை செய்யப்படவில்லை. இதனால் தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும் என்கிறார்கள் நமட்டு சிரிப்புடன் களத்தில் உள்ள பத்திரிக்கையாளர்கள்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications