சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஜெ.வின் நம்பிக்கைக்குரியவர்.. 1987ல் "ரிசார்ட்" அரசியல் செய்தவர்.. யார் இந்த சாத்தூர் ராமச்சந்திரன்?

Google Oneindia Tamil News

சென்னை: ஸ்டாலின் அமைச்சரவையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள சாத்தூர் ராமச்சந்திரன் எனப்படும் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அதிமுகவிலிருந்த போது ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்தவர்.

இவர் யார் என்பது குறித்தும், இவரது பின்னணி குறித்தும் பார்ப்போம். கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள கோபாலபுரத்தில் பிறந்தவர்.

ஸ்டாலினின் முதல் சட்டசபை கூட்டம்.. சட்டசபை கட்டிடத்தில் இல்லை.. கலைவாணர் அரங்கில்.. இதுதான் காரணம்! ஸ்டாலினின் முதல் சட்டசபை கூட்டம்.. சட்டசபை கட்டிடத்தில் இல்லை.. கலைவாணர் அரங்கில்.. இதுதான் காரணம்!

இவருக்கு படிப்பு சரியாக வராததால் விருதுநகரில் பஞ்சு வியாபாரம் செய்து வந்தார். இவர் தீவிர எம்ஜிஆர் ரசிகராக இருந்தார். பின்னர் ரசிகர் மன்றத்தை தொடங்கி எம்ஜிஆர் ரசிகர் மன்றச் செயலாளர் பதவிக்கு உயர்ந்தார்.

எம்ஜிஆர்

எம்ஜிஆர்

பின்னர் தனது செயல்பாடுகளால் எம்ஜிஆர் இவரை நினைவுப்படுத்திக் கொள்ளும் வகையில் பிரபலம் ஆகினார். பின்னர் திமுகவிலிருந்து எம்ஜிஆர் விலகிய சில மாதங்களில் திண்டுக்கல் இடைத்தேர்தல் நடந்தது. அங்கு திமுகவை தோற்கடிக்க எம்ஜிஆரால் அனுப்பி வைக்கப்பட்டு அவர் நினைத்ததை மிகச் சரியாக செய்தார்.

சாத்தூர் சட்டசபை தொகுதி

சாத்தூர் சட்டசபை தொகுதி

பின்னர் சாத்தூர் சட்டசபை தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை எம்ஜிஆர் கொடுத்தார். அந்த தொகுதியில் வென்ற ராமச்சந்திரன் எம்ஜிஆர் அமைச்சரவையில் பொதுப்பணித் துறை, மின்சாரத் துறை, கூட்டுறவு துறை அமைச்சராக இருந்தார். எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு அதிமுக இரண்டாக உடைந்தது.

ஜா அணி

ஜா அணி

அதாவது ஜெயலலிதா அணி, ஜானகி அணி என பிரிந்தது. அப்போது இவர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக இருந்தார். ஜெயலலிதாவை ஆதரித்த 32 எம்எல்ஏக்களை விருதுநகருக்கு அழைத்து வந்த ராமச்சந்திரன் தனது ஸ்பின்னிங் மில்லில் தங்க வைத்து பாதுகாத்தார். இதனால் ஜெயலலிதாவின் குட்வில் புக்கில் இடம்பெற்றார்.

அமைச்சர்

அமைச்சர்

பின்னர் ஜெயலலிதாவுடனான கருத்து வேறுபாட்டால் அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்த இவர் திமுகவில் இணைந்தார். கருணாதி ஆட்சியிலும் பல்வேறு துறைகளின் அமைச்சராக பதவி வகித்தார். தற்போது வருவாய் துறை அமைச்சராக பதவியேற்றுள்ளார்.

English summary
How Sathur Ramachandran became loyalist of Jayalalitha? Here is the story.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X