சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அப்பாடா, தெற்கு வளர்கிறது! தென் மாவட்டங்களில் தொழில் முதலீடுகளை அதிகரிக்கும் தமிழக அரசு! முழு விவரம்

Google Oneindia Tamil News

சென்னை: தென்தமிழகத்தில் சிறப்பு கவனம் செலுத்தி தொழிற்சாலைகள், நிறுவனங்களை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டு வரப்படுகிறது. இதன்மூலம் தொழில்முதலீடுகள் உயர்ந்து வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

1990 தாரளாளமயமாக்கல் காலத்தில் தென்தமிழககம் சாதிய மோதல்களுக்கு சாட்சியாக இருந்தன. இதனால் அங்கு தொழிற்சாலைகளை கொண்டு சென்று வேலைவாய்ப்புகளை உருவாக்குவது என்பது சிரமத்தை ஏற்படுத்தது.

சான்ஸே இல்ல! 2 தலைகளுக்கும் சான்ஸே இல்ல! 2 தலைகளுக்கும்

இருப்பினும் அடுத்ததடுத்த காலக்கட்டத்தில் மாநில அரசுகள் சிறப்பு நடவடிக்கைள் மூலம் தென்தமிழகத்தில் தொழில் முதலீட்டை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டது. இதில் வெற்றியும் கிடைத்து வருகிறது.

 திருநெல்வேலி, தூத்துக்குடி

திருநெல்வேலி, தூத்துக்குடி

இதற்கு உதாரணமாக திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி எஸ்இஇசட்(SEZ- Special Economic Zone) நடவடிக்கையை கூறலாம். மேலும், திருநெல்வேலி மாவட்டம் கங்கை கொண்டானில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் அனைத்து வியாபார மனைகளும் விற்று தீர்ந்து விட்டன. இதனால் விரிவுப்படுத்தும் வகையில் சிப்காட் நிறுவனம் தற்போது அடுத்தடுத்த பகுதிகளில் அதிக நிலத்தை கையகப்படுத்த முயற்சி மேற்கொள்ள உள்ளது. தென்தமிழகத்தில் குறிப்பாக திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் அதிக தொழில் முதலீடுகளைப் பெற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி தூத்துக்குடியில் சமீபத்தில் தொடங்கப்பட்ட மரச்சாமான்கள் பூங்கா துவங்கப்பட்டது. இது உள்நாடு மற்றும் வெளிநாட்டு வர்த்தகர்களுக்கான முக்கியமையமாக மாறியுள்ளது.

1 டிரில்லியன் பொருளாதாரத்துக்கு உதவி

1 டிரில்லியன் பொருளாதாரத்துக்கு உதவி

இதுபற்றி சிஐஐ(தூத்துக்குடி) முன்னாள் தலைவர் மைக்கேல் மோத் கூறுகையில், ‛‛திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்டான் சிப்காட் பெரிய முதலீடுகளுக்காக மையமாக மாற உள்ளது. தமிழகத்தை 2030ம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் பொருளாதாரமாக மாற்ற முக ஸ்டாலின் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இதனை சாத்தியமாக்க நிச்சயம் தென்மாவட்டங்கள் முக்கிய பங்காற்ற வேண்டியது அவசியமாகும். மேலும் ஒவ்வொரு மாவட்டத்தின் சிறப்பை கண்டறிவதில் அரசு கவனம் செலுத்துகிறது. இதனால் இப்பகுதிகளுக்கு தற்போது புதிய முதலீடுகள் வந்துள்ளன'' என்றார்.

மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர்

மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர்

மேலும் தேனி மற்றும் திண்டுக்கல் ஆகியவை அக்ரோ சம்பந்தப்பட்ட தொழில் முதலீடுகளுக்கு வாய்ப்பு வழங்குகிறது. மதுரை ரப்பர்பேஸ் தயாரிப்புக்கான உற்பத்தி தளமாக மாறியுள்ளது. மேலும் எச்சிஎல், ZOHO மென்பொருள் நிறுவனங்களையும் கொண்டதாக மாறியுள்ளது. இதுதவிர மேலும் பல ஐடி நிறுவனங்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் மதுரை உள்ளது. இதுபற்றி சிஐஐ மதுரை மண்டல தலைவர் ஜெய்சிங் வேர்கர் கூறுகையில், ‛‛சில காலமாக, சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் தொழில் முதலீட்டுக்கு கவனம் செலுத்தப்பட்டு வந்தது. தற்போது ஒவ்வொரு பிராந்தியத்துக்கும் அதன் தனித்துவமான சிறப்புகளை அறிந்து முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது'' என்றார். இதுதவிர விருதுநகரில் மசாலாபொருட்களை தவிர பருப்பு மற்றும் தானியங்களுக்கான சிறந்த செயலாக்க வசதிகள் உள்ளன. இதன்மூலம் புதிய தொழில் நிறுவனங்களை ஈர்க்கும் வசதி உள்ளது. மேலும் அதிகளவிலான நிலங்களை குறைந்த விலைக்கு கிடைப்பதால் தொழில் நிறுவனங்களுக்கு இது கூடுதல் போனசாக அமைகிறது.

400 முதல் 600 கோடி தொழில் முதலீடு

400 முதல் 600 கோடி தொழில் முதலீடு

‛‛விக்ரம் சோலார், முதலில் சென்னைக்கு அருகே சிறிய அளவில் யூனிட்டை செயல்படுத்தி விரிவாக்க ஆர்வமாக இருந்தது. இதையடுத்து தென்பகுதிக்கு மாற்ற முயன்றோம். விருதுநகர் மாவட்டம், டெக்ஸ்டைல் ​​துறையில் ரூ.400 - 600 கோடி வரையில் சில முதலீடுகளைக் கண்டுள்ளது. பிரதமர் மித்ரா திட்டத்தின் கீழ் மெகா ஜவுளிப் பூங்கா அமைக்கப்படும் என்பதை உறுதியாக நம்புகிறோம். தொழிலாளர்கள் அதிகளவில் கிடைப்பதன் மூலம் ஆடை மற்றும் காலணி நிறுவனங்கள் இந்த பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் தென்தமிழகத்தில் தொழில் முதலீடு அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என்றார்.

மூன்று மண்டல தொடக்க மையங்கள்

மூன்று மண்டல தொடக்க மையங்கள்

இதுபற்றி எம்எஸ்எம்இக்களுக்கான (MSME) செயாளர் அருண்ராவ் கூறுகயைில், ‛‛மதுரை மாவட்டத்தில் உள்ள சக்கிமங்களத்தில் சிட்கோ ஒரு புதிய தொழிற்பேட்டைக்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதே வேளையில் தென்மாவட்டங்களில் புதிய முதலீட்டாளர்களுக்கான மூலதன மானியத் திட்டத்தை நாங்கள் வழங்குகிறோம். மாநிலத்தில் திட்டமிடப்பட்டுள்ள மூன்று மண்டல தொடக்க மையங்களில் மதுரையில் இரண்டும், திருநெல்வேலியில் ஒன்றும் வருகிறது. மேலும், விருதுநகரில் பெண்களுக்கான ஆடைகள், மதுரையில் பொம்மை உற்பத்தி, திருநெல்வேலியி் சமையல் பொருட்கள் தயாரிப்பு, கன்னியாகுமரியில் மரவேலைப்பாடுகள் கொண்ட தொழில்களுக்கான கிளஸ்டர்கள் உருவாக்கப்பட உள்ளன'' என்றார்.

English summary
Steps are being taken to increase the number of factories and companies with special focus on the South. This creates an environment for increased investment and increased employment.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X