Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தீரன் பட பாணியில் கெத்து காட்டிய தமிழக போலீஸ்.. மத்திய பிரதேசத்தில் மாஸ் சம்பவம்.. திக் திக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்தியப் பிரதேசத்தில் பதுங்கியிருந்த குற்றவாளியைத் தீரன் அதிகாரம் ஒன்றில் வருவதைப் போல போலீசார் விரட்டி பிடித்த வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

கார்த்தி நடிப்பில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் செம ஹிட்டான படம். இந்தப் படத்தில் வெளி மாநிலத்திற்குச் செல்லும் கார்த்தி தலைமையிலான போலீசார், கிராமமே எதிர்த்த போதிலும், அவர்களைத் துணிச்சலாக எதிர்கொள்வார்கள்.

அப்படியொரு சம்பவம் தான் இப்போது ரியல் வாழ்க்கையில் நடந்துள்ளது. ஊரே எதிர்த்த போதிலும், ரன்னிங் சேஸிங் எல்லாம் செய்து தமிழக போலீசார் மத்தி பிரதேசத்தில் உள்ள கொள்ளையர்களை வெற்றிகரமாகப் பிடித்துள்ளனர்.

நகை

நகை

கோவை மாவட்டத்தில் நகை தயாரிப்பு பட்டறைகள் பல இயங்கி வருகிறது. இங்குத் தயாரிக்கப்படும் நகைகள் பல்வேறு மாநிலங்களுக்கும் வாகனம் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. பொதுவாகப் பலத்த பாதுகாப்புடன் தான் இந்த நகைகள் கொண்டு செல்லப்படும். அப்படித்தான் கடந்த அக்டோபர் மாதம் கோவையில் இருந்து தெலங்கானாவுக்கு நகைகள் எடுத்துச் செல்லப்பட்டது. இந்த நகைகள் ஹைதராபாத்தில் உள்ள கடைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

கொள்ளை

கொள்ளை

அப்போது ஒரு வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட சுமார் 3 கோடி ரூபாய் மதிப்புடைய 6.5 கிலோ தங்க நகைகள் திருட்டுப் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஏற்கனவே போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் விசாரணையைத் தொடங்கினர். ஒவ்வொரு சுங்கச்சாவடியில் உள்ள சிசிடிவி கேமாரக்களில் நகைகளை ஏற்றிச் சென்ற வாகனத்தை போலீசார் கண்காணித்தனர். அதில் எல்லா சுங்கச்சாவடிகளிலும் குறிப்பிட்ட ஒரு கார் மட்டும் நகை ஏற்றி வந்த வாகனத்தைப் பின்தொடர்ந்து வந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து அந்த கார் குறித்த தகவல்களைத் திரட்டும் முயற்சியில் போலீசார் இறங்கினர்.

 மத்தியப் பிரதேசம்

மத்தியப் பிரதேசம்

அந்த காரின் நம்பரை வைத்து போலீசார் விசாரணையைத் தொடங்கினர். அதில் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற நபரின் பெயர் சின்னு முஸ்தாக் என்பது தெரிய வந்தது. அவர் மத்தியப் பிரதேசத்தில் உள்ள கஞ்சர்சேர்வா என்ற பகுதியில் பதுங்கி இருப்பதையும் போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரை பிடிக்கக் கோவை மாநகர போலீசார் தலைமையிலான 4 பேர் கொண்ட தனிப்படை போலீசார் மத்தியப் பிரதேச மாநிலத்திற்குச் சென்றனர். அங்குச் சென்ற தமிழக போலீசார் கஞ்சர்சேர்வா பகுதிக்குச் சென்று விசாரித்துள்ளனர்,

 கிராமமே குற்றவாளிகள் தான்

கிராமமே குற்றவாளிகள் தான்

அப்போது தான் அங்கே சின்னு முஸ்தாக் மட்டுமின்றி, பலருக்கும் குற்றப் பின்னணி இருப்பதை போலீசார் தெரிந்து கொண்டனர். மேலும், அவர்களிடம் நாட்டுத்துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் இருப்பதும் போலீசாருக்கு தெரிய வந்தது. கஞ்சர்சேர்வா கிராமத்திற்கு போலீசாரை அழைத்துச் செல்லவே அங்குள்ள டிராவல்ஸ் ஏஜெண்டுகள் அஞ்சி மறுப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து உள்ளூர் போலீசாரின் உதவியைத் தமிழக போலீசார் நாடியுள்ளனர்.

துணிச்சல்

துணிச்சல்

இரு தரப்பும் இணைந்து சின்னு முஸ்தாக் பிடிக்க கஞ்சர்சேர்வா பகுதிக்குச் சென்றுள்ளனர். சின்னு முஸ்தாக்கை போலீசார் கைது செய்ய முயன்ற போது, போலீசார் சற்றும் எதிர்பார்க்காத வகையில் ஒட்டுமொத்த கிராமமே இணைந்து அவர்களைத் தாக்கத் தொடங்கியுள்ளது. அங்கிருந்த ஊர் மக்களும், கொள்ளையனின் கூட்டாளிகளுக்கும் நாட்டுத் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியும், கற்களை எரிந்தும் போலீசாரை விரட்ட முயன்றுள்ளனர். எது நடந்தாலும் சமாளிக்கத் தயாராகவே வந்திருந்த போலீசார், இதைத் துணிச்சலாக எதிர்கொண்டனர்.

கைது

கைது

மத்தியப் பிரதேச போலீசார் துப்பாக்கியைக் காட்டி கிராம மக்களைக் கட்டுப்படுத்த முயன்ற நிலையில், களத்தில் குதித்த தமிழக போலீசார் சின்னு முஸ்தாக் விரட்டி பிடித்தனர். அங்கிருந்து தப்பியோட முயன்ற சின்னு முஸ்தாக்கை பத்தே நிமிடங்களில் தமிழக போலீசார் விரட்டி பிடித்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்திலும் வெளியாகி உள்ளது. இதையடுத்து திருடப்பட்ட 6.5 கிலோ தங்கம் மீட்கப்பட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+