Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முகத்தில் கீறல்..மாஜி எம்பி மஸ்தான் மகனுக்கு வந்த டவுட்! சீன் போட்ட கொலையாளி..சிக்கியது இப்படி தான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : திமுக நிர்வாகியும் முன்னாள் எம்பியுமான டாக்டர் மஸ்தான் கொலை செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து தமிழகம் முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் அவரது முகத்தில் இருந்த சிறு காயம் தான் கொலையாளிகள் வசமாக சிக்குவதற்கு வாய்ப்பாக அமைந்திருக்கிறது என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்தவர் முன்னாள் எம்பி மஸ்தான் தஸ்தஹீர். திமுக மாநில சிறுபான்மையினர் நல செயலாளராக இருந்த அவர் சிறுபான்மை ஆணையத் துணைத் தலைவராகவும் திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்டார்.

கடந்த 22 ஆம் தேதி அவரது மகனுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருந்த நிலையில் 21ஆம் தேதி நள்ளிரவில் அவர் வலிப்பு மற்றும் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்ததாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியானது.

மாஜி எம்பி மஸ்தான்

மாஜி எம்பி மஸ்தான்

இதை அடுத்து அவரது உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு உறவினர்களால் அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது மஸ்தான் இயற்கையாக மரணம் அடையவில்லை எனவும் அவரது சகோதரனின் மருமகன் இம்ரான் பாஷா மற்றும் அவரது கூட்டாளிகள் அவரது முகத்தை மூடி மூச்சு திணறலை ஏற்படுத்தி கொலை செய்துள்ளதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது கொலையாளிகள் கைது செய்யப்பட்டு இருக்கும் நிலையில் கொலை நடந்த அன்று இரவு என்ன நடந்தது? கொலையாளிகள் எப்படி சிக்கினார்கள்? என்பது குறித்து பல்வேறு தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது.

சிறுசிறு காயங்கள்

சிறுசிறு காயங்கள்

முன்னாள் எம்பி மஸ்தானின் உடலை அடக்கம் செய்வதற்காக அவரது வீட்டில் உறவினர்கள் வைத்திருந்த போது அவரது முகத்தில் ஆங்காங்கே சிறுசிறு காயங்கள் இருந்திருக்கிறது, கீரல்கள் போல் அல்லாமல், நகத்தால் முகத்தில் அழுத்திப் பிடித்தது போன்ற காயங்கள் இருந்ததால் மருத்துவரான அவரது மகன் ஷா நவாஸ் சந்தேகம் அடைந்திருக்கிறார். இதை அடுத்து தான் தந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதை அடுத்து சந்தேக மரணம் என போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். சம்பவம் நடந்தபோது மஸ்தான் உடன் அவரது சகோதரரின் மருமகனான இம்ரான் பாஷாவும் உடன் இருந்திருக்கிறார்.

 பலே திட்டம்

பலே திட்டம்

திருமண நிச்சயதார்த்தம் தொடர்பாக திருச்சிக்கு செல்ல வேண்டும் என மஸ்தான் கூறிய நிலையில் 21ஆம் தேதி இரவு அவரது மருமகனான இம்ரான் பாஷா நானும் உங்களோடு வருகிறேன் எனக் கூறியிருக்கிறார். இதை அடுத்து இரவு 9:30 மணி அளவில் இருவரும் காரில் சென்றிருக்கின்றனர். அப்போதுதான் இம்ரான் பாஷா மஸ்தான் இறந்துவிட்டதாக மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார். மருத்துவர்கள் அவர் உயிரிழந்ததாக கூறிய நிலையில் அதற்குள்ளாக மஸ்தானின் மகன் மற்றும் உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்திருக்கின்றனர்.

முரண் தகவல்

முரண் தகவல்

மஸ்தானின் உடலைப் பார்த்து இம்ரானும் அழுது துடித்திருக்கிறார். அதே நேரத்தில் தனது நண்பர்கள் என சிலருடன் அவர் சுற்றி திரிந்தது தெரியவந்தது. இதை அடுத்து போலீசாரின் விசாரணை வளையத்திற்குள் இம்ரான் கொண்டுவரப்பட்டு அவரது செல்போன் சிக்னல்கள் ஆராயப்பட்டது. அதில் இம்ரான் பாஷா காரில் செல்வதற்கு முன்பாக அடிக்கடி தமீம், நசீர் ஆகியோருடன் பேசியதும் தெரியவந்தது. இதை அடுத்து தனிப்படை போலீசார் இம்ரான் மற்றும் அவர் பேசிய தமீம், நசீர் ஆகியோரை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது இம்ரான் கான் கூறிய தகவல்கள் முரண்பாடாக இருந்தது.

கடனால் கொலை

கடனால் கொலை

இதையடுத்து சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது மஸ்தான் சென்ற காரை தொடர்ந்து வந்ததும் தெரிய வந்தது. தொடர்ந்து கிடுக்குப்படி விசாரணையில் மஸ்தானை தனது நண்பர்களுடன் சேர்ந்து முகத்தை மூடி மூச்சு திணறலை ஏற்படுத்தி கொலை செய்ததாக இம்ரான் ஒப்புக்கொண்டார். பல் மருத்துவரான இம்ரான் பாஷா மருத்துவமனை நடத்தி வந்திருக்கிறார். திமுகவில் முக்கிய நிர்வாகியாக மஸ்தான் இருப்பதால் அவர் மூலம் அரசு மருத்துவமனையில் சேரலாம் என நினைத்ததோடு அடிக்கடி இம்ரானிடம் 15 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கி இருக்கிறார்.

எப்படி நடந்தது

எப்படி நடந்தது

மஸ்தான் மகனுக்கு திருமண தேவைக்காக பணம் கேட்டதால் கோபமடைந்த அவர் தனது சித்தி மகன் தமிழ் என்பவர் உடன் சேர்ந்து கொலை செய்ய முடிவு எடுத்திருக்கிறார். தொடர்ந்து 21ஆம் தேதி வீட்டில் இருந்து புறப்பட்ட நிலையில் தாம்பரம் சானடோரியம் அருகே வந்தபோது உங்களுக்கு தர வேண்டிய பணத்தை தருகிறேன் எனக் கூறி செங்கல்பட்டு செல்ல வேண்டும் எனக் கூறியிருக்கிறார். இதை அடுத்து ஜாமீன் கையெழுத்து போட வேண்டும் என தமீம் மற்றும் அவரது நண்பர் நசீர் ஆகியோர் காரில் ஏறி இருக்கின்றனர். செங்கல்பட்டு சுங்கச்சாவடியை தாண்டிய பின் மஸ்தானின் இரண்டு கைகளையும் நசீர் பின்பக்கமாக இறுக்கிப்பிடித்ததோடு தமீம் மஸ்தானின் முகத்தை துண்டு ஒன்றால் மூடி மூச்சு திணறல் ஏற்படுத்தி கொலை செய்திருக்கிறார்கள்.

கவனித்த மகன்

கவனித்த மகன்

அப்போது இம்ரான் மஸ்தானின் இரண்டு கால்களை பிடித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் வெளியே செல்ல முடியாத நிலையில் மஸ்தான் உயிருக்கு போராடி துடிதுடித்து உயிர் இழந்திருக்கிறார். இதை அடுத்து இம்ரான் கான் வலிப்பு மற்றும் நெஞ்சு வலியால் மயங்கி விட்டதாகவும் அவரை மருத்துவமனைக்கு அழைத்து வந்து பார்த்தபோது இறந்து விட்டதாக நாடகமாடி இருக்கிறார். மேலும் பிரேத பரிசோதனை அறிக்கையிலும் மூச்சு திணறல் காரணமாகவே உயிரிழந்ததாக அறிக்கை வந்ததால் தான் அவர் கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. மேலும் அடக்கம் செய்யும் போது மஸ்தானின் முகத்தில் இருந்த காயங்களை மகன் பார்த்ததால் தான் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+