தட்கலை விடுங்க.. தபால் நிலையத்திலேயே ரயில் டிக்கெட் எடுக்கலாம்! அது எப்படி தெரியுமா!
சென்னை: ரயில் டிக்கெட்களை நாம் பெரும்பாலும் ஆன்லைன் அல்லது ரயில் நிலையங்களில் தான் புக் செய்வோம். ஆனால், அதை விட எளிமையாகத் தபால் நிலையங்களிலேயே ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா.. தபால் நிலையங்கள் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி! எங்கெல்லாம் புக் செய்யலாம் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
இந்தியாவின் பொது போக்குவரத்து உள்கட்டமைப்பில் ரயில்களுக்கு மிக முக்கிய பங்கு இருக்கிறது. நாட்டின் பெரும்பாலான இடங்களுக்குக் குறைந்த செலவில் சென்று திரும்பலாம் என்பதால் மக்கள் பலரும் ரயில்களில் பயணிக்கவே விரும்புகிறார்கள்.

ரயில் டிக்கெட்கள்
நமது ரயில் டிக்கெட்களை நாம் பல வழிகளில் புக் செய்து கொள்ளலாம். பலரும் ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது ரயில் நிலையம் சென்றே டிக்கெட் புக் செய்வார்கள். ஆனால், தபால் நிலையங்களிலும் கூட ரயில்வே டிக்கெட் புக் செய்யலாம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.. இது குறித்து நாம் பார்க்கலாம்.
தபால் துறை இந்திய ரயில்வே உடன் இணைந்து India Post Passenger Reservation System என்ற சேவையை வழங்குகிறது. இந்த ஐபிபிஆர்எஸ் திட்டம் மூலம் சில குறிப்பிட்ட தபால் நிலையங்களில் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். ரயில்வே நிலையம் இல்லாத ஊர்களில் இருப்போர் இதுபோல தபால் நிலையத்திலேயே ரயில் டிக்கெட் எடுக்கலாம்.
தபால் நிலையங்களில் புக் செய்வது எப்படி?
இதற்கு உங்கள் ஏரியாவில் உள்ள தபால் நிலையங்களில் இந்த வசதி இருக்கிறதா என்பதை செக் செய்து கொள்ளுங்கள். அங்குச் செல்லும் போது அரசு அங்கீகரித்த ஐடி கார்டு (ஆதார், பாஸ்போர்ட்) எதாவது ஒன்றை எடுத்துச் செல்லுங்கள். அங்கு முன்பதிவு படிவத்தை வாங்கி தேவையான தகவல்களை நிரப்பித் தரவும். அதில் ரயில் எண் மற்றும் ரயில் பெயர், பயண தேதி, எங்கிருந்து எங்குச் செல்கிறீர்கள், பயணிகள் பெயர் உள்ளிட்ட தகவல்களைச் சரியாக நிரப்பித் தர வேண்டும்.
தபால் ஊழியர்கள் ஐடி கார்ட்டை கேட்டால் அதையும் கொடுங்கள். அங்குள்ள கவுண்டரில் பணம் செலுத்தினால் வேலை முடிஞ்சது.. அனைத்து தகவல்களையும் சரி பார்த்துவிட்டு தபால் ஊழியர்கள் டிக்கெட் போட்டுக் கொடுத்துவிடுவார்கள். இதன் மூலம் ரயில்வே நிலையத்திற்குச் செல்லாமலேயே ஈஸியாக டிக்கெட் போடலாம்.
கவனிக்க வேண்டிய விஷயம்
அதேநேரம் இதில் நாம் சில விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது தபால் நிலையங்களில் டிக்கெட் போடும் போது அதற்குத் தனியாக சர்வீஸ் சார்ஜ் வசூலிக்கப்படும். மேலும், என்ன தான் தபால் நிலையத்தில் டிக்கெட் எடுத்தாலும் அதை கேன்சல் செய்ய ரயில் நிலையத்திற்குத் தான் போக வேண்டும். அதாவது தபால் நிலையங்களில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்.. கேன்சல் செய்ய முடியாது. கேன்சல் செய்ய நீங்கள் ரயில் நிலையத்திற்கே நேரடியாகச் செல்ல வேண்டும்.
எந்த ரயில் நிலையங்கள்
தமிழ்நாட்டில் இப்போது 20 தபால் நிலையங்களில் மட்டுமே இந்த சேவை வழங்கப்படுகிறது. ஸ்ரீபெரும்புதூர், கல்பாக்கம், சென்னை ஐஐடி, சாஸ்திரி பவன், செஞ்சி, புதுக்கோட்டை, பொன்மலை, நெய்வேலி, கொடைக்கானல், ஆலங்குளம், சிவகாசி, திசையன்விளை, தேனி, பிஎன் புதூர், பள்ளிபாளையம், கோபிசெட்டிபாளையம், உடுமலைப்பேட்டை, ராசிபுரம், காந்திநகர் (திருப்பூர்), தாராபுரம் ஆகிய 20 தபால் நிலையங்களில் நீங்கள் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த லிஸ்ட்டை நீங்கள் தபால் துறையின் இணையத்திலும் பார்த்துக் கொள்ளலாம்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications