கிரெடிட் கார்ட் இருக்கா? உடனே இதை பண்ணுங்க! இல்லைனா பல ஆயிரம் செலவு வைச்சுடும்.. கவனம் மக்களே

Subscribe to Oneindia Tamil

சென்னை: நீங்கள் எந்தவொரு விமான நிலையத்திற்குச் சென்றாலும் சும்மா டீ குடிக்கவே பல நூறு ரூபாய் செலவழிக்க வேண்டி இருக்கும். சாப்பாடு எல்லாம் சாப்பிட நினைத்தால் சொத்தில் ஒரு பங்கையே தர வேண்டி இருக்கும். இதன் காரணமாகவே பலரும் கிரெடிட் கார்ட் மூலம் லவுஞ்ச்களுக்கு செல்வார்கள். ஆனால், கிரெடிட் கார்ட் வைத்திருந்தாலே இந்த சலுகை நமக்குக் கிடைக்காது. சில கண்டிஷன்கள் உள்ளன. அது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

உங்களிடம் உள்ள கிரெடிட் கார்டு வைத்து ஏர்போர்ட்டில் உள்ள லவுஞ்ச்களுக்கு செல்ல முடியுமா என்ற கேள்வி பலருக்கும் வரும். விமான நிலையத்தில் உள்ள லவுஞ்ச்சிற்கு சென்ற பிறகு அதை அவர்கள் ஏற்கவில்லை என்றால் சும்மா சாப்பிடவே ஆயிரக்கணக்கில் செலவிட வேண்டி இருக்கும்.

airport credit card business

இந்த நிலை ஏற்படாமல் இருக்க நம்மிடம் இருக்கும் கார்டுகளில் லவுஞ்ச் ஏக்செஸ் இருக்கிறதா என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். ஈஸியாக எப்படி எதைத் தெரிந்து கொள்வது. அதை எப்படிப் பயன்படுத்துவது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

புதிய கிரெடிட் கார்ட்: முதலில் உங்களுக்கு புதிய கிரெடிட் கார்ட் வரும் போதே அதில் லவுஞ்ச் ஆக்செஸ் இருக்கிறதா இல்லையா என்பது தெளிவாக விளக்கப்பட்டு இருக்கும். லவுஞ்ச் ஆக்செஸ் மட்டுமின்றி வேறு என்ன சலுகைகள் எல்லாம் இருக்கிறது என்பதை நாம் அதில் இருந்தே தெரிந்து கொள்ளலாம்.

ஒரு வேலை அதை மிஸ் செய்துவிட்டால் கிரெடிட் கார்ட் வழங்கும் நிறுவனம் அல்லது வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லுங்கள். அதில் உங்கள் அகவுண்டை லாகின் செய்து பாருங்கள். அதில் benefits என்ற பகுதி இருக்கும். அதில் சென்று பார்த்தால் உங்கள் கார்டிற்கு என்ன ஆஃபர் இருக்கிறது என்பது தெளிவாகத் தெரிந்துவிடும்.

அப்படி இல்லை என்றால் வங்கியின் அதிகாரப்பூர்வ வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்பு கொள்ளவும்.. அவர்களிடம் உங்கள் கார்ட் குறித்த தகவல்களைச் சொன்னால் போதும் அவர்களே செக் செய்து சொல்லிவிடுவார்கள்..

விமான நிலைய லிஸ்ட்: லவுஞ்ச் ஆக்செஸ் இருக்கிறது என்றே சொல்லி இருக்கிறார்கள் என வைத்துக் கொள்வோம். அப்போதும் கூட எல்லா விமான நிலையத்திற்கும் செல்ல முடியும் என்று நினைத்துவிடாதீர்கள். குறிப்பிட்ட லவுஞ்ச் ஆக்செஸ் நெட்வோர்கில் இருக்கும் ஏர்போர்ட்டிற்கு மட்டுமே செல்ல முடியும். மாஸ்டர்கார்டு லவுஞ்ச் அல்லது விசா லவுஞ்ச் என பல வகைகள் உள்ளன. எனவே, சம்பந்தப்பட்ட நெட்வோர்க் தளத்திற்குச் சென்று நீங்கள் போகும் ஏர்போர்ட்டில் உங்கள் கார்டிற்கு லவுஞ்ச் ஏக்செஸ் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

எப்படிப் பயன்படுத்துவது: சரி எல்லாம் செக் பண்ணியாச்சு.. லவுஞ்ச் ஆக்செஸ் இருக்கிறது.. எப்படி உள்ளே செல்ல வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம்.. அது ஒன்றும் அவ்வளவு பெரிய வேலை இல்லை. நேராக லவுஞ்ச்சுக்கு செல்லுங்கள்.. உங்கள் கார்டை கொடுங்கள். சிறிய தொகையைக் கட்டணமாகப் பிடித்துக் கொள்வார்கள். பொதுவாக இந்த கட்டணம் வெறும் 2 ரூபாயாக மட்டுமே இருக்கும்.

பல ஆயிரம் செலவு செய்ய வேண்டி இருக்கும்: கிரெடிட் கார்ட் இல்லை என்றாலோ.. அல்லது உங்கள் கார்ட் இதற்கு சப்போர்ட் செய்யவில்லை என்றாலோ நீங்கள் பல ஆயிரம் ரூபாய் தர வேண்டி இருக்கும். ஆனால், தகுதியான கிரெடிட் கார்ட் இருந்தால் அவை எதுவும் தேவையில்லை. உணவு, வை- பை, ஸ்நாக்ஸ் என அனைத்தையும் வெறும் 2 ரூபாய்க்கு நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதுபோக தேர்ட் பார்ட்டி செயலிகளையும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்காகவே பிரத்தியேகமாக சில செயலிகள் உள்ளன. அதில் சென்று உங்கள் கார்ட் விவரங்களைக் கொடுத்தும் செக் செய்து கொள்ளலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+