எங்கே வாக்களிக்க வேண்டும்னு தெரியலையா! இதை செய்யுங்க 2 நொடியில் வாக்குச்சாவடி விவரம் தெரிஞ்சுக்கலாம்
சென்னை: தமிழ்நாட்டில் நாளை லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில், உங்கள் வாக்குச்சாவடி எங்கே என்று தெரியாது என்றால் அதை எப்படி அறிந்து கொள்வது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
நமது நாட்டில் தற்போது உள்ள மக்களவையின் காலம் வரும் ஜூன் 16ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதன் காரணமாக 18ஆவது லோக்சபாவுக்கான உறுப்பினர்களைத் தேர்வு செய்ய தற்போது லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முறை மொத்தம் ஏழு கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. அதில் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு முதல் கட்டத்திலேயே தேர்தல் நடைபெறுகிறது.
லோக்சபா தேர்தல்: தமிழ்நாட்டில் 39 லோக்சபா சீட்கள் உட்பட மொத்தம் 102 இடங்களுக்கான தேர்தல் நாளை நடைபெறுகிறது. இந்தத் தொகுதிகளில் பிரச்சாரம் நேற்றைய தினத்துடன் முடிவடைந்தது. நாளைய தினம் தமிழ்நாடு, புதுச்சேரி தவிர அருணாச்சல பிரதேசம் (2 தொகுதிகள்), அசாம் (5 தொகுதிகள்), பீகார் (4), சத்தீஸ்கர் (1), மத்தியப் பிரதேசம் (6), மகாராஷ்டிரா (5), மணிப்பூர் (2), மேகாலயா (2), மிசோரம் (1), நாகாலாந்து (1), ராஜஸ்தான் (12), சிக்கிம் (1), திரிபுரா (1), உத்தரப் பிரதேசம் (8), உத்தரகண்ட் (5), மேற்கு வங்கம் (3), அந்தமான் (1), காஷ்மீர் (1), லட்சத்தீவு (1) ஆகிய இடங்களில் தேர்தல் நடைபெறுகிறது.
நாளை காலை முதல் வாக்காளர்கள் வாக்களிக்கலாம். தேர்தல் ஆணையம் வெளியிட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் இருக்கும் வாக்காளர்கள் உரிய ஆவணங்களைக் காட்டி வாக்களிக்கலாம். பொதுவாகத் தேர்தல் நாளில் வாக்காளர் அடையாள அட்டையைக் காண்பித்தே வாக்களிப்பார்கள். அதேநேரம் வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் வேறு 12 ஆவணங்களைத் தேர்தல் கண்காணிப்பாளரிடம் காட்டியும் வாக்களிக்கலாம்.
12 ஆவணங்கள்: அதேநேரம் பூத் சிலிப்பை அடையாள அட்டையாகக் காண்பிக்க முடியாது என்பது தெளிவுபடுத்தப்பட்டு இருக்கிறது.. அதேநேரம் ஆதார் கார்டு, பான் கார்டு உள்ளிட்ட 12 ஆவணங்களைக் காட்டி நம்மால் வாக்களிக்க முடியும்.
என்னென்ன ஆவணங்கள்: ஆதார் கார்டு, பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் பணி அடையாள அட்டை (100 நாள் வேலைத் திட்டத்தின் அடையாள அட்டை), மருத்துவ காப்பீட்டு அட்டை, வங்கி/அஞ்சலக கணக்கு புத்தகங்கள், தேசிய மக்கள் தொகை பதிவேட்டின்கீழ் இந்தியத் தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம் ஆகியவற்றைக் காட்டி வாக்களிக்கலாம்.
இது தவிர மத்திய- மாநில அரசுகள்- பொதுத்துறை நிறுவனங்கள் வழங்கிய புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டை, எம்பி- எம்எல்ஏக்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை, சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டை ஆகியவற்றையும் ஆவணங்களாகக் காட்டி வாக்களிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளன.
சரி விஷயத்திற்கு வருவோம்.. உங்கள் வாக்குச்சாவடியை எப்படி அறிந்து கொள்ள வேண்டும்.. நீங்கல் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் சென்று வாக்காளர் பட்டியலைப் பார்க்கலாம். அதில் உங்கள் பெயர் இருக்கும்.. அதிலேயே நீங்கள் எந்த வாக்குச் சாவடியில் வாக்களிக்க வேண்டும் என்ற விவரமும் இருக்கும்.. மேலும் voters.eci.gov.in என்ற தளத்திற்குச் சென்றும் இதைத் தெரிந்து கொள்ளலாம். அந்தத் தளத்தில் உங்கள் வாக்காளர் எண்ணைப் பதிவிட்டு வாக்குச்சாவடியைத் தெரிந்து கொள்ளலாம்.
மேலும், 1950 என்ற எண்ணுக்குக் கால் செய்து உங்கள் விவரங்களைப் பகிர்ந்து கொண்டு, வாக்குச்சாவடி விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.. அல்லது 1950 எண்ணுக்கு ECI என்று டைப் செய்து, ஸ்பேஸ் விட்டு வாக்காளர் அடையாள எண்ணைப் பதிவிட்டு மெசேஜ் அனுப்பினாலும் உரியத் தகவல்கள் மெசெஜில் வரும். பொதுவாக வாக்குச்சாவடி உங்கள் வீட்டில் இருந்து ஓரிரு கிமீக்குள் தான் இருக்கும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications