சொத்துக்கு நகல் பத்திரம் பெறுவது எப்படி? என்னென்ன ஆவணங்கள் தேவை? ரொம்ப ஈஸி!
சென்னை: சொத்துக்கு எளிதாக நகல் பத்திரம் பெறுவதற்கான வழிமுறைகள்! என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். அது போல் ஆன்லைன் மூலம் பத்திர நகலை பெறுவது எப்படி என்பதையும் பார்க்கலாம்.
இதுகுறித்து இன்றைய தகவல் எனும் சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: ஒரு சொத்தை விலைக்கு வாங்குவதற்கான நடவடிக்கையில் ஈடுபடுவோர், அது தொடர்பான அனைத்து பத்திரங்களையும் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்.
இதில் உரிமையாளர்கள் தங்களிடம் உள்ள அனைத்து பத்திரங்களின் பிரதிகளையும் முறையாக கொடுப்பர் என்று எதிர்பார்க்க முடியாது.

சில சமயங்களில் சொத்தை விற்கும் உரிமையாளர்கள் தங்கள் பெயருக்கு வந்த கிரைய பத்திரத்தின் அசல் பிரதி மட்டும் வைத்து இருப்பர்.
அதற்கு முந்தைய பத்திரத்தின் நகல் மட்டும் இருக்கும், அசல் பத்திரம் இல்லை என்பதற்கு பல்வேறு காரணங்களை சொல்வர்.
இது போன்ற சூழலில், முந்தைய பத்திரங்களின் அசலில் என்ன விபரங்கள் உள்ளன, விற்பனையாளர் காட்டும் நகல் பத்திரங்கள் உண்மை தானா என்று பார்க்க வேண்டும்.
இதற்கு, அந்த குறிப்பிட்ட பத்திரத்தின் எண், பதிவு செய்த ஆண்டு, சார்-பதிவாளர் அலுவலகம் ஆகிய விபரங்கள் இருந்தால் போதும்.
இந்த அடிப்படை விபரங்களை அளித்து உரிய முறையில் கட்டணம் செலுத்தி விண்ணப்பித்தால் சம்பந்தப்பட்ட பத்திரங்களின் பிரதிகள் உங்களுக்கு கிடைத்துவிடும்.
தற்போது, சொத்தின் நகல் பத்திரங்கள் பெற வேண்டுமானால், சார்-பதிவாளர் அலுவலகம் கூட செல்ல வேண்டியதில்லை.
நீங்கள் வீட்டில் இருந்தபடியே இணையதளம் வாயிலாக நகல் பத்திரங்கள் கோரி விண்ணப்பிக்கலாம்.
இதிலும், சில ஆண்டுகள் முன்பு வரை, 1975 முதல் தற்போது வரை பதிவான பத்திரங்களின் பிரதியை மட்டுமே பெற முடியும் என்ற நிலை இருந்தது, இது தற்போது, 1865 முதல் பதிவான பத்திரங்களின் நகல் கிடைக்கும் அளவுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் முறையில் பத்திர நகல் கோரி விண்ணப்பிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், ஆவண எழுத்தர்கள் வாயிலாக அல்லது நீங்களே உங்கள் பெயரில் விண்ணப்பிக்கலாம்.
இதற்கான பணியில் இறங்கும் முன், ஆதார் எண், இ-மெயில் முகவரி, மொபைல் போன் எண் ஆகிய விபரங்களை தயாராக வைத்திருக்க வேண்டும்.
ஒரு சொத்தின் பத்திரத்தின் நகல் வேண்டும் என்ற தேவை எழுந்தால், பதிவுத்துறையில் முறையாக விண்ணப்பித்தால் ஓரிரு நாட்களில் அது உங்களுக்கு இ-மெயில் வாயிலாக அனுப்பப்படும். இதை வைத்து அந்த சொத்தை வாங்குவது தொடர்பான விஷயங்களில் அடுத்தடுத்த முடிவுகளை எடுக்கலாம்.
குறிப்பாக, ஒரு சொத்தின் நகல் பத்திரம் பெறும் நிலையில் அதை முறையாக பயன்படுத்த வேண்டிய தேவை இருக்கிறதா என்ற பாருங்கள்.
வில்லங்கம் மட்டும் பார்க்க வேண்டும் என்றால், பதிவு குறித்த அடிப்படை தகவல்கள் போதும் என்ற நிலையில் பத்திர நகல் தேவைப்படாது.
நீங்கள் வாங்கிய சொத்தின் முந்தைய அசல் பத்திரங்கள் வேண்டுமென்றே மறைக்கப்படுகிறது என்று தோன்றும் நிலையில், நீங்கள் நகல் பிரதியை வாங்கி பார்ப்பது நல்லது என்கின்றனர் ரியல் எஸ்டேட் சொத்து மதிப்பீட்டாளர்கள்.
ஆன்லைன் மூலம் சான்றளிக்கப்பட்ட பத்திர நகல் பெறுவது எப்படி?
இந்த சேவையை பத்திர பதிவுத்துறையின் https://tnreginet.gov.in/portal/
என்ற வலைதளத்தில் பயனர்களாக பதிவு (Registered Users) செய்யப்பட்டவர்கள் மட்டுமே பெற முடியும்.
மின்னஞ்சல் முகவரியை உருவாக்குவது போல பயனர்கள் எளிதாக இந்த தளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
இதில் பயனர்களின் பெயர், ஊர், வயது, அடையாள சான்று, பிறந்த ஆண்டு, மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி, வசிப்பிட முகவரி என அனைத்து விவரங்களும் கேட்கப்படும்.
அதை கொடுத்து புதிய பயனர்களாக இணைந்து கொள்ள முடியும்.
பதிவு செய்யப்பட்ட பயனர்கள் பதிவுத்துறையின் வலைதளத்தில் லாக்-இன் செய்ய வேண்டும்.
தொடர்ந்து மின்னணு சேவைகள் > 'சான்றளிக்கப்பட்ட நகல்' என்பதை தெரிவு செய்ய வேண்டும்.
அதில் தேடல் மற்றும் சான்றளிக்கப்பட்ட நகல் விண்ணப்பிக்க என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.
அதில் ஆவண விவரம் தேடுதல், தனிப்பட்ட விவரங்கள் மற்றும் கட்டண விவரங்கள் என மூன்று நிலைகள் இருக்கும்.
ஆவண விவரம் தேடுதலில் ஆவணத்தின் வகைப்பாட்டை தேர்வு செய்ய வேண்டும். பொதுவாக தனிநபர்கள் என்றால் சொத்து சம்பந்தப்பட்ட ஆவணம் என்பதை தேர்வு செய்யலாம்.
பின்னர், ஆவணத்தின் எண், சார்பதிவாளர் அலுவலகம், பதிவு செய்யப்பட்ட ஆண்டு, புத்தக எண் உள்ளிட்ட விவரங்களை உள்ளிட வேண்டும். இது அனைத்தும் சம்பந்தப்பட்ட ஆவணத்தில் இருக்கும்.
அந்த விவரங்களை கொடுத்து சமர்ப்பிக்க வேண்டும்.
அந்த ஆவண விவரம் தேடி எடுக்கப்பட்டு, அதில் ஆவண எண், சார்பதிவாளர் அலுவலகம், பதிவு செய்த நாள், ஆவணத்தின் தன்மை உள்ளிட்ட விவரங்கள் இருக்கும். அது சரியாக இருந்தால் அதை தேர்வு செய்து இணையவழியில் விண்ணப்பித்து பெறுவதற்கான ஆப்ஷனை க்ளிக் செய்யலாம்.
இதன் பின்னர் விண்ணப்பதாரரின் பெயர் மற்றும் மொபைல் எண் உள்ளிட்டவை தனிப்பட்ட விவரங்கள் பிரிவில் கேட்கப்படும்.
அதை கொடுத்ததும் விவரங்களை சரிபார்க்குமாறு தெரிவிக்கும்.
தொடர்ந்து மனு கட்டணம், தேடுதல் கட்டணம், நகல் கட்டணம், கணினிக் கட்டணம், முத்திரைத்தீர்வை உள்ளிட்ட கட்டணங்கள் என மொத்தமாக விண்ணப்பத்திற்கான கட்டணம் குறிப்பிடப்பட்டு இருக்கும்.
இணையவழியில் கட்டணம் செலுத்தியதும் அடுத்த சில நாட்களில் (குறைந்தபட்சம் 2 முதல் 3 நாட்கள்) பயனர்களுக்கு டிஜிட்டல் வடிவில் (pdf) சான்றளிக்கப்பட்ட பத்திர நகல் கிடைக்கும்.
அதை பதிவுத்துறையின் வலைதளத்தில் மின்னணு சேவைகள் > சான்றளிக்கப்பட்ட நகல் > கோரிக்கைப் பட்டியலில் இருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம். கட்டணம் செலுத்தியதற்கான ரசீதும் கிடைக்கும்.
இதில் Digitally Signed (மின் கையொப்பம்) வெரிபிகேஷனும் இருக்கும். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
-
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
ADMK Candidate list: 167 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? முழு பட்டியல்! -
கொளத்தூரை விட்டுவிட்டு தொகுதி மாறிய ஆதிராஜாராம்! சேப்பாக்கத்தில் உதயநிதியை எதிர்த்து போட்டி -
ஒரு பக்கம் கொளுத்தும் வெயில்.. இன்னொரு பக்கம் இடி, மின்னலுடன் மழை! தமிழகத்தின் நிலை இதுதான்! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்?












Click it and Unblock the Notifications