சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திருமணத்திற்கு செல்ல இ-பாஸ் எப்படி வாங்குவது.. என்ன நடைமுறை... அதிகாரிகள் விளக்கம்

Google Oneindia Tamil News

சென்னை: திருமணத்திற்கு செல்ல வேண்டுமெனில் என்ன ஆவணங்கள் இணைக்க வேண்டும். அதற்கான நடைமுறை என்ன என்பது குறித்து நமக்கு அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் மாதம் முழுவதும் ஊரடங்கு தொடரும் என்று அறிவித்துள்ள தமிழக அரசு, இந்த ஆகஸ்ட் மாதமும் ஒவ்வொரு ஞாயிறு அன்றும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுபோக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. அதாவது ஜூலையில் இருந்த நடைமுறை அப்படியே ஆகஸ்டிலும் தொடர்கிறது.

கடைகள் திறப்பில் மட்டும் அரசு சில தளர்வுகள் வழங்கி உள்ளது. அதேநேரம் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயம் என்று அறிவித்துள்ளது. இந்த நடைமுறை மக்களை மிகவும் அவஸ்தைக்கு உள்ளாக்கி வருகிறது.

அனைவரும் இ-பாஸ் பெறுவது இயலாத காரியம்... இந்த இ-பாஸ் முறையை முதலில் கைவிடுங்கள் -கொங்கு ஈஸ்வரன் அனைவரும் இ-பாஸ் பெறுவது இயலாத காரியம்... இந்த இ-பாஸ் முறையை முதலில் கைவிடுங்கள் -கொங்கு ஈஸ்வரன்

மக்கள் தவிப்பு

மக்கள் தவிப்பு

இந்நிலையில் பலரும் திருமணங்களுக்கு செல்ல இ பாஸ் கிடைப்பதில்லை என்று வேதனை தெரிவித்து வருகிறார்கள். இதேபோல் மருத்துவ அவசரம் என்றால் கூட பாஸ் வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. மக்கள் ஒரு மாவட்டத்திற்கு ஏதேனும் ஒரு காரணத்திற்காக வந்திருந்தால், திரும்பவும் சொந்த மாவட்டத்திற்கு செல்ல முடியாத நிலையில் சிக்கி தவிக்கிறார்கள். அவர்களுக்கும் பாஸ் வழங்க அதிகாரிகள் தொடர்ந்து மறுத்து வருகிறார்கள்.

என்ன நடைமுறை

என்ன நடைமுறை

இந்நிலையில் திருமணங்களில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்ற முந்தைய நடைமுறை தொடரும் என்று அறிவித்துள்ள அரசு, திருமணத்திற்கு செல்ல வேண்டுமெனில் என்ன ஆவணங்கள் இணைக்க வேண்டும். அதற்கான நடைமுறை என்ன என்பது குறித்தும், ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்திற்கு செல்வதற்கு என்ன நடைமுறை என்பது குறித்தும் தெரிந்து கொள்ள விரும்பினோம்.

ரத்த உறவாக இருத்தல்

ரத்த உறவாக இருத்தல்

இது தொடர்பாக நாம் அம்மா கால் சென்டர் மையத்திற்கு அழைத்தோம். அழைப்பை எடுத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் திருமணங்களுக்கு 50 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். திருமணத்திற்கு செல்ல ஒரு மாவட்டம் விட்டு இன்னொரு மாவட்டம் செல்ல வேண்டும் என்றால், திருமண பத்திரிக்கையை இ-பாஸ்க்கு விண்ணப்பிக்கும் போது இணைக்க வேண்டும். திருமண பத்திரிக்கையில் இபாஸ்க்கு விண்ணப்பிப்பவர்களின் பெயர்கள் கட்டாயம் இருக்க வேண்டும். அவர்கள் ரத்த உறவாகவோ அல்லது நெருங்கிய உறவாக இருக்க வேண்டும். அவர்களுக்குத்தான் பாஸ் வழங்கப்படும்.

இ-பாஸ் கிடைக்கும்

இ-பாஸ் கிடைக்கும்

திருமண பத்திரிக்கையுடன் எங்கு திருமணம் நடைபெற உள்ளதோ அந்த ஊரின் விஏஒவிடம் திருமணம் நடைபெற உள்ளதாக சான்றிதழ் பெற வேண்டும். அந்த சான்றிதழ் கேட்கும் போது மாவட்ட ஆட்சியருக்கு திருமணம் நடைபெறும் விஷயம் விஏஒ தரப்பில் தெரிவிக்கப்படும். இதன்பிறகு திருமணம் நடைபெற உள்ளது குறித்து விஏஒ ஒப்புதல் சான்றிதழ் அளிப்பார். எனவே கிராம நிர்வாக அலுவலர் சான்றிதழை இணைத்தால் தான் இ-பாஸ் கிடைக்கும் என்று தெரிவித்தார்.

இ பாஸ் கிடைக்காது

இ பாஸ் கிடைக்காது

இதனிடையே நமக்கு தெரிந்த திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் மகளுடன், தேனிக்கு வந்து மாதங்கள் உருண்டோடிவிட்ட நிலையில பாஸ் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தார். மீண்டும் ஊர் திரும்ப அவருக்கு பாஸ் வழங்கப்படவில்லை. இப்போது பயணம் செய்வதற்கான சரியான நேரம் இல்லை என்று விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இது இதைபற்றியும் நாம் விசாரித்தோம். அதற்கு அந்த அதிகாரி தகவல்களை கேட்டு விசாரித்துவிட்டு, இதை பற்றி நீங்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தான் விசாரிக்க வேண்டும். அவர்கள் தான் இதற்கு பதில் அளிப்பார்கள் என்றார். அவர் மேலும் கூறுகையில், தேனி கட்டுப்பாட்டு மண்டலத்தில் உள்ள பகுதி என்பதால் நிராகரித்து இருக்க வாய்ப்பு உள்ளது என்றும், கூறினார்கள் இதனிடையே இதுபற்றி நாம் தேனி ஆட்சியர் அலுவலகத்தில் விசாரித்த போது, மிகமிக அவசியமான காரணங்கள் என்றால் மட்டுமே பாஸ் வழங்கப்படுவதாகவும், மருத்துவ அவசரம் என்று சென்றவர்களுக்கு கூட அங்கேயே இருக்குமாறு அறிவுறுத்தப்படுவதாகவும் கூறினார். மாணவர்கள் தேர்வுக்க

English summary
How to get e-pass to go to the wedding? What is the procedure? tamil nadu government Officials explanation
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X