உத்தரகாண்ட் சுரங்க ஊழியர்களுக்கு உயிர் கொடுத்த.. நம்ம திருச்செங்கோடு.. சிலிர்க்க வைக்கும் சம்பவம்!
சென்னை; உத்தரகாண்டில் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கும் சுரங்க ஊழியர்களுக்கு ஆக்சிஜன் தொடங்கி உணவு வரை எல்லாம் கொடுக்க திருச்செங்கோட்டை சேர்ந்த இரண்டு நிறுவனங்கள்தான் காரணம் ஆகும்.
உத்தராகண்டில் தொழிலாளர்களை மீட்கும் பணி இயந்திர கோளாறு காரணமாக தற்காலிக நிறுத்தம் செய்யப்பட்டு உள்ளது. இன்று இரவுக்குள் தொழிலாளர்கள் மீட்கப்படுவார்கள் என மீட்புக்குழுவினரால் நம்பிக்கை அளிக்கப்பட்டு உள்ளது. கிடைமட்டமாக துளை போடும் பணிகள் நிறுத்தம் செய்யப்பட்டு மேலிருந்து துளை போட முடிவு செய்யப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டு நிறுவனங்கள் : உத்தரகாண்டில் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கும் சுரங்க ஊழியர்களுக்கு ஆக்சிஜன் தொடங்கி உணவு வரை எல்லாம் கொடுக்க திருச்செங்கோட்டை சேர்ந்த இரண்டு நிறுவனங்கள்தான் காரணம் ஆகும். ரிக் தொழில் நுட்பத்துடன் கூடிய கருவிகள் மூலம்தான் இங்கே துளையிடப்பட்டு உள்ளது. மேலே துளையிடப்பட்டு அது வழியாக முதலில் ஆக்சிஜன் அனுப்பப்பட்டது.
அதன்பின் எண்டோஸ்கோபி கேமரா அனுப்பப்பட்டு.. அவர்களின் உடல்நிலை கண்காணிக்கப்பட்டது. அதன்பின் அதே துளை வழியாக உணவும் அனுப்பப்பட்டது. இங்கே துளை போட காரணமாக இருந்தது 'தரணி ஜியோ டெக்' நிறுவனம் ஆகும். இவர் திருச்செங்கோட்டை சேர்ந்தவர்கள். இந்த நிறுவனம்தான் 'பி.ஆர்.டி. - ஜிடி 5' என்ற கருவி மூலம் துளை போட்டு உள்ளே பொருட்களை அனுப்பி உள்ளது.
தேசிய பேரிடர் மீட்பு படை கேட்டுக்கொண்டதன் பெயரில் இவர்கள் களமிறங்கி இங்கே துளை போட்டுள்ளனர். முதல் இரண்டு இடங்களில் போடப்பட்ட துளைகள் சரியாக பயன் அளிக்கவில்லை. இதனால் மூன்றாவது முறையாக இவர்கள் முயன்று அங்கே துளை போட்டுள்ளார்.
திருச்செங்கோடு நிறுவனங்கள்: இது போக 'பி.ஆர்.டி. - ஜிடி 5' கருவியை உருவாக்கியதும் இன்னொரு திருச்செங்கோடு நிறுவனம் ஆகும். பரந்தாமன் ராக் டிரில்லர் என்ற திருச்செங்கோடு நிறுவனம்தான் இந்த கருவியை உருவாக்கி உள்ளது. இதைத்தான் 'தரணி ஜியோ டெக்' நிறுவனம் பயன்படுத்தி வந்துள்ளார். இந்த நிறுவன ஊழியர்கள்தான் சுரங்கத்திற்குள் ஆக்சிஜன் தொடங்கி உணவு வரை எல்லாம் செல்ல காரணம் ஆவர்.
மீட்பு பணிகள் தீவிரம்: உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி சில்க்கியாரா சுரங்கப் பாதை இடிபாடுகளில் சிக்கி 12 நாட்களாக 41 தொழிலாளர்கள் தவிக்கின்றனர். இங்கே சுரங்கம் அமைக்கும் பணியின் போது சுரங்கம் இடிந்து உள்ளே மூடியதால் அவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கினர்.
சார் தாம் திட்டத்தின் ஒரு பகுதியான இந்த சுரங்கப்பாதை, உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள சில்க்யாரா மற்றும் தண்டல்கான் இடையே உத்தர்காசி மற்றும் யமுனோத்ரியை இணைக்க உள்ள சாலையில் அமைந்துள்ளது. 4.5 கிமீ சுரங்கப்பாதை அமைக்கும் பணி பெரும்பாலும் முடிவடைந்துள்ளது. மீதம் உள்ள பணிகளை செய்யும் போதே சுரங்கம் இடிந்துள்ளது.
உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் கடந்த 13 நாட்களாக சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆனால், பணிகளை முடிக்க இன்னும் குறைந்தது 10 மணிநேரம் ஆகும். மேல் பக்கம் மற்றும் கிடை மட்டமாக இரண்டு துளையிட்டு அது வழியாக ட்யூப் போட்டு.. அதில் இருந்து ஊழியர்களை வெளியே கொண்டு வர முடிவு செய்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications