சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழக அரசியலில் தேர்தல் கருத்துக்கணிப்புக்கள் எப்படி.. ஓர் அலசல்!

Google Oneindia Tamil News

சென்னை : தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் மார்ச் 27 ம் தேதி துவங்கி தொடர்ந்து நடைபெற்றன. தமிழகம், கேரளா, புதுச்சேரியில் ஏப்ரல் 6 ம் தேதி ஒரே கட்டமாகவும், அசாமில் 3 கட்டங்களாகவும், மேற்குவங்கத்தில் 8 கட்டங்களாகவும் தேர்தல் நடத்தப்பட்டது.

மேற்கு வங்கத்தில் கடைசி கட்ட தேர்தல் நேற்று நடந்து முடிந்தது. இதன் முடிவுகள் மே 2 ம் தேதி வெளியாக உள்ளன. இந்நிலையில் நேற்று மாலை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புக்கள் வெளியிடப்பட்டன.

இந்தியா டுடே, சி வோட்டர், ஏபிபி, தந்தி டிவி, சாணக்கியா உள்ளிட்ட செய்தி நிறுவனங்கள் தங்களின் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டன. இதில் அசாமில் பாஜக மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும் என்றும், புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்றும், கேரளாவில் மீண்டும் இடதுசாரிகள் ஆட்சி அமையும் என்றும் அனைத்து கருத்துக்கணிப்புக்களும் கூறின. ஆனால் மேற்கு வங்கத்தில் மம்தா பெரம்பான்மை பெற்று ஆட்சியை அமைப்பார் என்று சில கருத்துக் கணிப்புக்களும், பல தொகுதிகளில் பாஜக உடன் கடும் போட்டி நிலவும் என்று சில கருத்துக்கணிப்புக்களும் கூறின.

இதே போன்று தமிழகத்தில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என சில கருத்துக்கணிப்புக்களும், கடும் இழுபறி நிலவும் என சில கருத்துக்கணிப்புக்களும் கூறுகின்றன. அதே சமயம் தாங்கள் தான் அதிக இடங்களில் வெற்றி பெற்று, பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளதாக அதிமுக, திமுக இரண்டு கூட்டணிகளும் கூறி வருகின்றன. கருத்துக்கணிப்புக்கள் என்ன சொன்னாலும் மக்கள் ஆதரவு எங்களுக்கு தான் கிடைக்கும், நாங்கள் தான் அடுத்த முதல்வர் என சீமான், கமல் ஆகிய கூறி வருகின்றனர். கடந்த தேர்தல்களில் கருத்துக்கணிப்புக்கள் எந்த அளவிற்கு சரியாக இருந்தன என்பதை இங்கு பார்க்கலாம்.

 "புள்ளி" வச்ச சசிகலா.. "கோலம்" போட்ட திமுக.. சொல்லி அடிச்ச தினகரன்.. விக்கித்து பார்க்கும் அதிமுக!

 கருத்துக்கணிப்புக்கள் எப்படி நடக்கிறது

கருத்துக்கணிப்புக்கள் எப்படி நடக்கிறது

பொதுவாக கருத்துக் கணிப்புக்கள் என்பது, ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்களிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டு, அதில் பெறப்படும் பதில்களின் அடிப்படையில் கணிப்புக்கள் வெளியிடப்படுகின்றன. ஆனால் இந்நிறுவனங்கள் கேட்கும் கேள்விகளுக்கு மக்கள் சரியான பதிலை அளிப்பார்களா என்றால் அது சந்தேகம் தான். உதாரணமாக எந்த கட்சிக்கு ஓட்டளித்தீர்கள் என்ற கேள்விக்கு மக்கள் உண்மையான பதிலை அளித்தால் மட்டுமே, கருத்துக்கணிப்புக்கள் சரியானதாக இருக்கும், ஒரு கட்சிக்கு ஓட்டளித்து விட்டு, மற்றொரு கட்சிக்கு ஒட்டளித்ததாக கூறினால், கருத்துக்கணிப்புக்கள் பொய்யாகவே வாய்ப்புள்ளது.

 இதுவரை கருத்துக்கணிப்பு எப்படி

இதுவரை கருத்துக்கணிப்பு எப்படி

கருத்துக் கணிப்பு முடிவுகள் சில நேரங்களில் சரியாக இருந்தாலும், பெரும்பாலான நேரங்களில் மக்கள் மனநிலையை சரியாக பிரதிபலிக்க முடியவில்லை. சட்டசபை தேர்தலில் மட்டுமல்ல லோக்சபா தேர்தலிலும் கருத்துக்கணிப்புக்கள் பொய்யான வரலாறும் உள்ளது. 2004 லோக்சபா தேர்தலின் போது, பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என பெரும்பாலான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புக்கள் கூறின. ஆனால் கருத்துக்கணிப்புக்களை பொய்யாக்கி காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. இதே போன்று 2009 ல் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என தேர்தல் முடிவுகள் கூறிய நிலையில், பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.

 தமிழகத்தில் கருத்துக்கணிப்புக்கள்

தமிழகத்தில் கருத்துக்கணிப்புக்கள்

2011 தமிழக சட்டசபை தேர்தலில் தேர்தலுக்கு பின் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் அதிகபடியாக இடங்களில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என சில கருத்துகணிப்புக்களும், திமுக கூட்டணி வெற்றி பெறும் என சில கருத்துக்கணிப்புக்களும் கூறின. திமுக கூட்டணிக்கு அதிகபட்சமாக 117 இடங்களை வரை மட்டுமே கிடைக்கும் என கூறப்பட்டது. அதிமுக கூட்டணிக்கு 176 வரை கிடைக்கும் என கூறப்பட்டது. ஆனால் அந்த தேர்தலில் அதிமுக கூட்டணி 203 இடங்களிலும், திமுக கூட்டணி 31 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றன.

 பொய்யான கருத்துக்கணிப்புக்கள்

பொய்யான கருத்துக்கணிப்புக்கள்

2016 சட்டசபை தேர்தலின் போது வெளியிடப்பட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் அதிமுக கூட்டணிக்கு இந்தியா டுடே - 89 முதல் 101, நியூஸ் நேஷன் - 95 முதல் 99, சி வோட்டர் - 139, நியூஸ் எக்ஸ் - 90, ஏபிபி - 95, என்டிடிடி - 103, தந்தி டிவி -111 கிடைக்கும் என்றும், திமுக கூட்டணிக்கு இந்தியா டுடே - 124 முதல் 140, நியூஸ் நேஷன் - 120 முதல் 118, சி வோட்டர் - 78, நியூஸ் எக்ஸ் - 140, ஏபிபி - 132, என்டிடிடி - 120, தந்தி டிவி -99 என கணிக்கப்பட்டது. ஆனால் கருத்துக்கணிப்புக்களை பொய்யாக்கி, 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட அதிமுக 136 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் பிடித்தது.

 லோக்சபா தேர்தலிலும் பொய்யானது

லோக்சபா தேர்தலிலும் பொய்யானது

2019 லோக்சபா தேர்தல் தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக.,விற்கு 16 இடங்களை வரை கிடைக்கும் என்றே பெரும்பாலான கருத்துக்கணிப்புக்கள் தெரிவித்தன. திமுக கூட்டணிக்கு 34 இடங்கள் வரை கிடைக்கும் என கணிக்கப்பட்டது. ஆனால் அதிமுக.,விற்கு ஒரே ஒரு இடம் மட்டுமே கிடைத்தது. திமுக கூட்டணி 38 இடங்களை கைப்பற்றியது. இதே போன்று 2014 லோக்சபா தேர்தலின் போது அதிமுக.,விற்கு 27 இடங்களும், திமுக.,விற்கு 5 இடங்களும் கிடைக்கும் என கருத்துக்கணிப்புக்கள் தெரிவித்தன. ஆனால் இந்த தேர்தலில் அதிமுக 37 இடங்களில் வெற்றி பெற்றது. அதே சமயம் திமுக.,விற்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.

 கண்டு கொள்ளாத தலைவர்கள்

கண்டு கொள்ளாத தலைவர்கள்

கடந்த கால தேர்தல்களின் போது வெளியிடப்பட்ட பெரும்பாலான கணித்துக் கணிப்புக்களுக்கு நேர் மாறாக தேர்தல் முடிவுகள் வந்ததால் தான் இந்த முறை கருத்துக்கணிப்புக்களை அரசியல் கட்சி தலைவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பலர் இது தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிப்பதை தவிர்த்து வருகின்றன. மக்களின் தீர்ப்பை யாராலும் துல்லியமாக கணிக்க முடியாது என்பதே பெரும்பாலான தலைவர்களின் கருத்தாக உள்ளது.

இந்த முறை சட்டசபை தேர்தல் முடிவுகளில் கருத்து கணிப்புக்கள் சரியாக எதிரொலிக்குமா அல்லது இந்த முறையும் நேர்மறையாக இருக்குமா என்பதை மே 2 வரை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

English summary
How was the reflactions of the polls in the previous Tamil Nadu elections
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X