குரு பூஜைக்கு வந்தால்.. எடப்பாடி மீது தாக்குதல் நடக்கும்.. பரபரப்பை கிளப்பிய சசிகலா டீம்.. அலறுதே!
சென்னை: பசும்பொன்னில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டால் குருபூஜையில் பெரிய பிரச்சனையே வரும். இதை மீறி குருபூஜைக்கு போலீஸ் பாதுகாப்பு அவருக்கு கொடுக்கப்படலாம், அவர் மீது அதை மீறி செருப்பை தூக்கி ஒருவர் வீசினால் எடப்பாடி என்ன செய்ய முடியும், என்று தேனி கர்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்த மாதம் 30ம் தேதி பசும்பொன்னிற்கு செல்ல உள்ளார். தேவர் குருபூஜையை கலந்து கொள்ள வேண்டும் என்று அவர் பசும்பொன்னிற்கு செல்ல உள்ளார். இது தமிழ்நாடு அரசியலில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

எடப்பாடி பழனிசாமி; இது தொடர்பாக சசிகலா ஆதவாளர் தேனி கர்ணன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், எடப்பாடி பழனிசாமி துரோகம் மேல் துரோகம் செய்துவிட்டார். சசிகலாவை ஏமாற்றினார். அதன்பின் டிடிவி தினகரனை ஏமாற்றினார். ஆட்சிக்கு 4 ஆண்டுகள் உறுதுணையாக இருந்த ஓ பன்னீர்செல்வமை ஏமாற்றினார். அப்படி இருக்க அவரை எப்படி தென் மண்டல மக்கள் நம்புவார்கள். அவரை எப்படி தென் மண்டல மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். அவர் இதை மீறி எப்படி பசும்பொன்னுக்கு வர முடியும். எப்படி தேவர் பூஜையில் கலந்து கொள்ள முடியும்.
பசும்பொன்னில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டால் குருபூஜையில் பெரிய பிரச்சனையே வரும். இதை மீறி குருபூஜைக்கு போலீஸ் பாதுகாப்பு அவருக்கு கொடுக்கப்படலாம். போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்படலாம் . ஆனால் அவர் மீது அதை மீறி செருப்பை தூக்கி ஒருவர் வீசினால் எடப்பாடி என்ன செய்ய முடியும். தூரத்தில் இருந்து எடப்பாடியை நோக்கி செருப்பு பறந்து வந்து தாக்கினால் என்ன செய்வார். எடப்பாடியால் என்ன செய்ய முடியும்.
குரு பூஜை: அவரை முக்குலத்தோர் மதிக்கவில்லை. அவர் மதுரைக்கே மாநாடு நடத்தும் போது செல்லவில்லையே. அப்படி இருக்கும் போது அவரால் எப்படி குருபூஜைக்கு வர முடியும் . தென் மாவட்ட மக்கள் அவரை எப்படி அனுமதிக்க வேண்டும் என்று எடப்பாடி நினைக்கிறார். அவருக்கு அச்சம் இருக்கிறது. அதனால்தான் அவரால் மதுரைக்கு கூட வர முடியவில்லை. இதுதான் வெற்றிகரமான மாநாடா? இதுதான் மதுரையில் அதிமுக நடத்திய பெரிய மாநாடா?

எப்படி அவரை முக்குலத்தோர் மதிப்பார்கள். அவர் மீது தாக்குதல் நடக்கும். நான் தூண்டவில்லை. பசும்பொன் வந்தால் அவர் மீது தாக்குதல் நடக்கும். தேவர் சமூகத்தை சேர்ந்தவர்களை எடப்பாடி பழனிச்சாமி முதுகில் குத்திவிட்டார். அவர்களை ஏமாற்றிவிட்டார். அருவாளை எடுத்து வெட்ட மாட்டார்கள். ஆனால் எவனாவது ஒருவன் வந்து செருப்பை எடுத்து அடிப்பான். எவனாவது ஒருவன் செருப்பை தூக்கி வீசுவான்.
எடப்பாடி வந்தால் அது சட்ட ஒழுங்கு பாதிப்பை ஏற்படுத்தும். அங்கே பிரச்சனை. அங்கே மக்கள் மனநிலை அப்படி உள்ளது. இவரை மக்கள் எட்டப்பனாக பார்க்கிறார்கள். அவரை எட்டப்பன் என்றே நினைக்கிறார்கள். காந்தியை கொன்ற கோட்ஸே போல பார்க்கிறார்கள். அப்படி இருக்க அவர் எப்படி குருபூஜைக்கு வர முடியும். மக்கள் அவரை நம்ப மாட்டார்கள். முக்குலத்தோர் அல்ல தென் மாவட்டத்தில் யாருமே அவரை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், என்று தேனி கர்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications