தொங்கு பாராளுமன்றம் அமையும்.. இதுதான் ரியலான கணிப்பு.. காயத்ரி ரகுராம் ட்வீட்
சென்னை: நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜகவிற்கு மெஜாரிட்டி கிடைக்காது என்றும், காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை கைப்பற்றும் என்றும் வெளியிடப்பட்டிருந்த அக்னி கணிப்பினை சுட்டிக்காட்டி நடிகை காயத்ரி ரகுராம் வெளியிட்ட பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2019 லோக்சபா தேர்தலில் பாஜக தேசிய அளவில் 303 இடங்களில் வென்றது. அதேநேரம் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி 353 இடங்களில் வென்றது. காங்கிரஸ் 52 இடங்களில் வென்றது. காங்கிரஸ் கூட்டணி 91 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்தியாவில் வெளியாகி உள்ள பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் பாஜக கூட்டணி அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளத. என்டிடிவி, இந்தியா டுடே, ரிபப்ளிக் டிவி, நியூஸ் 18 , சிவோட்டர் என பல்வேறு கணிப்புகளும் பாஜகவே ஆட்சி அமைக்கும் என்று கூறியுள்ளன. இதில் பெரும்பாலான கணிப்புகள் பாஜக கூட்டணி 350 இடங்களை வெல்லும் என்று கூறியுள்ளன. அதேநேரம் இந்தியா டிவி பாஜக கூட்டணி 401 இடங்களில் வெல்லும் என்று கணித்துள்ளது.
ஆனால் அதேநேரம் ஒரே ஒரு கணிப்பு மட்டும் பாஜக இந்த முறை மெஜாரிட்டி பெறாது என்று கூறப்பட்டுள்ளது. அக்னி நியூஸ் வெளியிட்ட கணிப்பில், பாஜக என்டிஏ கூட்டணி 242 இடங்களை மட்டும் வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மெஜாரிட்டி பெற 272 இடங்கள் தேவை என்று கணிப்பில் கூறப்பட்டு உள்ளது.

எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி 264 இடங்களில் வெல்லும் அக்னி நியூஸ் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 37 இடங்களில் இந்திய கூட்டணியில் இல்லாத மற்ற எதிர்க்கட்சிகள் வெல்லும் என்று அக்னி நியூஸ் கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது தொங்கு நாடாளுமன்றம் உருவாக வாய்ப்பு உள்ளதாகவே அக்னி நியூஸ் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கணிப்பு குறித்து ஒன் இந்தியாவில் வெளியாகி இருந்த கார்டை ஷேர் செய்திருந்த அதிமுகவின் காயத்ரி ரகுராம், நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது என்றும், தொங்கு பாராளுமன்றம் தான் அமையும் என்றும், இந்த ஒரு கணிப்பு தான் எதார்த்தமாக இருப்பதாக கூறியுள்ளார். மேலும் யாருக்கும் ஐஸ் வைக்க வேண்டிய மாதிரியான கணிப்பு இல்லை என்றும் காயத்ரி ரகுராம் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications