உங்க வாழ்க்கையே மாறப் போகுது! கிராமப் பெண்கள் தான் குறி! சென்னையில் சிக்கிய சரளா! ஷாக்கான போலீஸ்!
சென்னை : வாழ்க்கையில் ஏதாவது ஒரு மூலையில் ஒரு நேரத்தில் தங்கள் வாழ்வு மாறிவிடாதா? என்று கிராமப் பகுதிகளில் இருந்து வேலை தேடி சென்னைக்கு வந்த இளம் பெண்களை குறி வைத்து அவர்களை மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கணவன் மனைவி கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் தான் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு வேலை தேடி வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கிராமங்களில் போதிய வேலை வாய்ப்பின்மை அல்லது படித்த படிப்புக்கு வேலை கிடைக்காதவை உள்ளிட்டவை ஒரு சில காரணங்கள்.
கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்து தங்களை படிக்க வைத்த பெற்றோரை வீட்டில் அமர வைத்து அழகு பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் வீட்டை மறந்து சொந்தத்தை மறந்து ஊரை மறந்து இளம் பெண்கள் பலரும் சென்னைக்கு நாளுக்கு நாள் வேலை தேடி வருகின்றனர்.

சென்னையில் அதிர்ச்சி
பொதுவாக இளைஞர்களைப் போல இளம் பெண்களுக்கு அதிக அளவில் செலவுகள் இல்லை. உணவு தங்குமிடம் போன்றவற்றைத் தவிர அனாவசிய செலவுகளை தவிர்த்து வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி கிடைக்கும் சொற்ப ஊதியத்தை சேமித்து பெற்றோருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஏராளமான இளம் பெண்கள் சென்னையில் பல பகுதிகளில் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களை குறி வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய மோசடி கும்பல் அதுவும் கணவன் மனைவி கைது செய்யப்பட்டு இருக்கும் சம்பவம் தான் தற்போது சென்னையில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

இளம் பெண்களிடம் மோசடி
இது தொடர்பாக காவல்துறை தரப்பில் விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை வண்ணாரப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள அப்பர் நகர் பகுதியில் வசிக்கும் கணவனும் மனைவியும் சேர்ந்து சில பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் அறிவுறுத்தலின்படி அந்த குறிப்பிட்ட வீட்டில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

பாலியல் தொழில்
அந்தச் சோதனையில் இரண்டு இளம் பெண்களை மிரட்டி அடைத்து வைத்து அவர்களை கட்டாயப்படுத்தி கணவனும் மனைவியும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்தது தெரிய வந்தது. குறிப்பாக வெளியூரில் இருந்து வேலை தேடிவரும் கிராமப்புற பெண்களை குறி வைத்து தனியார் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி இளம் பெண்களை மிரட்டி அவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபட வைத்ததும் விசாரணையில் அம்பலமானது. இதை அடுத்து இளம் பெண்களை மீட்ட போலீசார் அவர்களை அரசு காப்பகத்தில் சேர்த்துள்ளனர். பெண்களுக்கு வேலை தருவதாக கூறி பாலியல் தொழிலில் ஈடுபட வைத்த கணவன் சதீஷ்குமாரையும் அவரது மனைவி சரளாவையும் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

போலீசார் எச்சரிக்கை
அவர்களிடமிருந்து செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வேலை தேடி வரும் இளம் பெண்களை மிரட்டி வீட்டில் அடைத்து வைத்து கட்டாயப்படுத்தி பாலியல்தொழிலில் ஈடுபட வைத்த சம்பவம் சென்னையில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. அதே நேரத்தில் வேலை தருவதாக மோசடியாக இதுபோன்ற வாக்குறுதிகளை அளிக்கும் கும்பலிடம் சிக்க வேண்டாம் எனவும் நம்பகமான நிறுவனங்களில் வேலைக்கு சேர நம்பகமான நிறுவனங்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என காவல்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications
