மனைவிக்கு முதல் பர்த்டே.. சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்த கணவன்! எமனாக வந்த அலங்கார லைட்..சென்னையில் சோகம்
சென்னை: சென்னை மாம்பலத்தில் மனைவியின் முதல் பிறந்த நாளை கொண்டாட நினைத்து, அலங்கார விளக்குகளை மாட்டிக் கொண்டிருந்த கணவன், மின்சாரம் தாக்கி மனைவியின் கண் எதிரிலேயே உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தங்களுக்கு பிடித்தமான நபர்களின் பிறந்த நாளை பிரம்மாண்டமாக கொண்டாடி அசத்தி விட வேண்டும் என்று பலரும் நினைப்பார்கள். அதிலும் புதுமண தம்பதிகள் தங்கள் இணையின் பிறந்த நாளை, இதுவரை யாரும் கொண்டாடாத வகையில் கொண்டாடிட வேண்டும் என நினைப்பதுண்டும்.

இதற்காக கேக் ஆர்டர் கொடுப்பதில் இருந்து, வீட்டில் அலங்காரம் போடுவது வரை பார்த்து பார்த்து செய்வார்கள். அந்த வகையில் தான் சென்னை மேற்கு மாம்பலத்தில் வசித்து வரும் அகஸ்டின் பால் (வயது 29) தனது மனைவியின் பிறந்த நாளை சொந்த பந்தங்கள் அசந்து போகும் அளவிற்கு கொண்டாட வேண்டும் என நினைத்துள்ளார்.
மனைவி கீர்த்தியை கரம் பிடித்து 8 மாதங்கள் தான் ஆகிறது.. திருமணம் ஆன பிறகு வரும் முதல் பிறந்த நாள் இதுதான். எனவே மனைவியை அசர வைக்கும் விதமாக பிறந்த நாளை கொண்டாட திட்டமிட்டு இருக்கிறார். பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகளையும் செய்து வந்த அகஸ்டின் பால், வீட்டீல் அலங்கார விளக்குகளை வாங்கி மாட்டிக் கொண்டு இருந்து இருக்கிறார்.
அப்பொது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் அகஸ்டின் பால் உயிரிழந்தார். மனைவியின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக அலங்கார லைட் மாற்றிய போது மின் ஷாக் அடித்து மனைவியின் கண் எதிரிலேயே அகஸ்டின் பால் உயிரிழந்தது குடும்பத்தினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மின்சாரம் தாக்கியதில் அகஸ்டின் பால் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மனைவியின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக அலங்கார விளக்குகளை மாட்டும் போது கணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications