புடிங்க புடிங்க.. மெரினாவில் ப்ளூ காரில் அலப்பறை.. உள்ளே இருந்த 2 பெண்கள் யார்? போலீஸ் விசாரணை
சென்னை: சென்னை மெரினா கடற்கரை சாலையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஹூண்டாய் எலண்ட்ரா நீல ரக கார் அலப்பறை செய்த வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. அந்த காரை போலீசார் துரத்தி சென்று மடக்கிய நிலையில், விருட்டென்று தப்பித்து செல்லும் காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் அந்த காரில் இருந்த 2 பெண்கள் யார் என்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் இன்று அதிகாலை மெரினா கடற்கரை சாலையில் கார் ஒன்று பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வேகமாக சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. வழக்கமாக அதிகாலை நேரத்தில் மெரினா கடற்கரையில் பொதுமக்கள் உடற்பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். அந்த நேரத்தில் போக்குவரத்து நெரிசல் குறைவாகவே இருக்கும்.

இந்த நிலையில் இன்று அதிகாலை மெரினா கடற்கரை சாலையில் ஹுண்டாய் எலன்ட்ரா ரக நீல நிறத்தினாலான கார் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வேகமாக சென்றிருக்கிறது. குறிப்பாக மெரினா காமராஜர் சாலை - விவேகானந்தர் இல்லம் அருகே எதிர்புறத்தில் இருந்து கடற்கரை சாலைக்குள் சென்ற போது, திடீரென பின்னோக்கியும் முன்னோக்கி சென்றும் காரில் சாகசம் செய்துள்ளனர்.
அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த காவலர் ஒருவர், அந்த காரை மடக்கி பிடித்துள்ளார். அப்போது பின்னோக்கி சென்ற கார், அந்த காவலரை இடிக்கும் வகையிலும் முன்னோக்கி வந்துள்ளது. எச்சரிக்கையாக இருந்த காவலர் உடனடியாக ஒதுங்க, அந்த கார் மின்னல் வேகத்தில் முன்னோக்கி சென்று வலது புறமாக திரும்பி இருக்கிறது. அந்த காரில் ஒரு இளைஞரும், 2 இளம் பெண்களும் இருந்ததாக கூறப்படுகிறது.

மீண்டும் அந்த காரை கடற்கரை சாலையில் போலீசார் மடக்கி பிடிக்க முயற்சித்த போதும், போக்கு காட்டி தப்பி இருக்கிறது. தற்போது அந்த காரின் பதிவெண் கொண்டு, யாருடைய கார், காரினை இயக்கியது யார் என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிய வந்துள்ளது. அந்த காரின் பதிவெண் TN 07 CS 1315 என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த கார் மயிலாப்பூர் பகுதியில் உள்ள அபிஷேக் என்பவரின் பெயரில் பதிவாகி இருப்பது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். அதிகாலை நேரத்தில் சென்னையின் மிக முக்கியமான சாலையில் காரில் சாகசம் செய்திருப்பது மக்கள் மத்தியில் விவாதமாகி இருக்கிறது.

-
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
பூட்டிய வீட்டில்.. பேராசிரியர் இருந்த கோலம்! 1400 கி.மீ டிராவல் செய்து வந்து சம்பவம் செய்த தம்பதி! -
சென்னை மெட்ரோ தலைகீழாக மாறப்போகிறது.. ஷாப்பிங் + கொண்டாட்டம்.. ஒரே இடத்தில்! -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்?












Click it and Unblock the Notifications