டெல்லி கார் வெடிப்பில் சம்பந்தமே இல்லாமல் சிக்கிய பழைய ஓனர் சல்மான்! நீங்க "அந்த" தப்பை செய்யாதீங்க
சென்னை: தலைநகர் டெல்லியில் ஏற்பட்ட கார் வெடிப்புச் சம்பவத்தில் காரின் பழைய ஓனர் சல்மான் என்பவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். சல்மானுக்கு பிறகு பலருடைய கைகள் மாறினாலும் கூட சல்மானை போலீசார் கைது செய்துள்ளனர். காரை விற்கும்போது அவர் செய்த மிக முக்கியமான ஒரு தவறே அதற்குக் காரணமாகும்.
டெல்லியில் செங்கோட்டை அருகே கடந்த திங்கட்கிழமை மாலை ஹூண்டாய் ஐ20 காரில் நடந்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் காயமடைந்த நிலையில், இந்தச் சம்பவம் தற்கொலைப்படை தாக்குதலாக இருக்கலாம் என முதலில் சந்தேகிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதைக் கண்டறியவும் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சிக்கிய பழைய ஓனர்
மேலும், வெடித்துச் சிதறிய கார் யாருக்குச் சொந்தமானது என்பதைக் கண்டறியும் முயற்சியிலும் போலீசார் இறங்கினர். அதில் அந்த ஒரே கார் பல மாநிலங்களில், பலமுறை விற்கப்பட்டுள்ளது தெரிய வந்தது. பல நபர்களின் கைமாறிய இந்த கார் கடைசியாகவே உமர் நபி கைகளுக்கு வந்துள்ளது. உமர் நபி தான் விபத்து ஏற்பட்ட போது காரை ஓட்டியதாக சந்தேதிக்கப்படுக்கிறது.
இதற்கிடையே இந்த காரின் 2வது உரிமையாளராக இருந்த சல்மானை இந்த விவகாரத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். சல்மானுக்கு பிறகு பலரது கைகளுக்கு கார் மாறிவிட்ட நிலையில், சல்மான் கைது செய்யப்பட்டது பலருக்கும் ஆச்சரியத்தை அளிக்கலாம். அதற்குக் காரணம் என்னவென்றால் சல்மான் காரை விற்கும்போது அதன் உரிமையை மாற்றிவிடவில்லை.
காரணம் என்ன!
செகண்ட் ஹேண்ட் கார் மார்கெட்டில் காரை வாங்கும் போது அல்லது விற்கும்போது உரிமை மாற்றம் என்பது ரொம்பவே முக்கியம். ஆனால், பலரும் இதை யாரும் செய்வதில்லை. அப்படித் தான் சல்மான் காரை விற்றபோது இதைச் செய்யாமல் இருந்துள்ளார். அதுவே இப்போது அவரை வம்பில் மாட்டிவிட்டு இருக்கிறது.
டெல்லியில் வெடித்துச் சிதறிய அந்த ஐ20 கார் 2013-ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட மாடல்.. ஓராண்டு வேறு ஒரு நபர் அந்த காரை ஓட்டி வந்த நிலையில், 2014ல் குர்கானில் வசிக்கும் சல்மான் என்ற நபர் அதை வாங்கியிருக்கிறார். அதன் பிறகு, டெல்லியின் ஓக்லாவைச் சேர்ந்த தேவேந்திரா என்பவருக்கு அந்த கார் விற்கப்பட்டது. அங்கிருந்து அம்பாலாவில் உள்ள ஒருவரிடம் சென்று, பின்னர் ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் ஆமீர் என்பவருக்குக் கைமாறியது. ஆனால், அது அத்தோடு முடியவில்லை. அங்கிருந்து தான் கார் வெடிப்பு நடந்தபோது காரை வைத்திருந்த டாக்டர் உமர் முகமது என்பவரிடம் கார் சென்றது.
நீங்க இந்த தவறை செய்யாதீர்கள்
கார் இத்தனை பேருக்குப் போன போதும் சல்மானை ஏன் கைது செய்தார்கள் என்றால்.. அவரை காரை விற்கும்போது உரிமை மாற்றம் செய்யப்படவில்லை. இதனால் கார் பல மறை விற்கப்பட்ட போதிலும் சல்மான் தான் அதிகாரப்பூர்வ உரிமையாளராக இருந்துள்ளார். இதனால் தான் அவர் சிக்கலில் மாட்டினார். கார் விற்கும்போது உரிமையை மாற்றிவிடுவது எந்தளவுக்கு முக்கியமானது என்பதையே இது காட்டுகிறது. செலவைக் குறைக்கச் சிலர் இதுபோல உரிமத்தை மாற்றாமல் விட்டுவிடுவார்கள். அது எவ்வளவு பெரிய ஆபத்தில் தள்ளும் என்பதற்கு இதுவே உதாரணம்.
உரிமத்தை மாற்ற வேண்டும்
எனவே, அடுத்த முறை காரை விற்கும்போது அல்லது வாங்கும் போது உரிமத்தை மாற்றிவிடுங்கள். ஆர்சி புக், இன்சூரன்ஸ், மாசுச் சான்றிதழ், சர்வீஸ் ஹிஸ்டரி, வரி என தேவையான அனைத்து டாக்குமெண்டுகளையும் கொடுங்கள். நீங்கள் செகண்ட் ஹேண்ட் கார் வாங்கும்போதும் இந்த டாக்குமெண்டுகளை கேட்டு வாங்குங்கள். சில ஆயிரம் செலவுக்காகப் பெரிய சிக்கலில் மாட்டிக் கொள்ள வேண்டாம்.
ஓனர்ஷிப் ஹிஸ்டரி
அதேபோல நீங்கள் வாங்கும் காரை இதற்கு முன்பு யாரெல்லாம் வைத்திருந்தனர் என்பதை ஓனர்ஷிப் ஹிஸ்டரில் சரி பார்க்கவும் மறக்க வேண்டாம். கையோடு இன்சூரன்ஸும் கூட மாற்றிவிடுவது நல்லது. இதன் மூலம் எதிர்காலத்தில் வரும் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்!
உரிமையை அதிகாரப்பூர்வமாக மாற்றுவதற்கு ஆர்டிஓ அலுவலகத்தில் படிவங்கள் 28, 29 மற்றும் 30 ஆகியவற்றைச் சமர்ப்பிக்கவும். படிவம் 28 தடையில்லா சான்றிதழுடன் தொடர்புடையது. படிவங்கள் 29 மற்றும் 30 உரிமை மாற்றத்துடன் தொடர்புடையவையாகும். இதன் நகல்களையும் கூட பத்திரமாக வைத்திருங்கள்!
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications