அச்சமின்றி பேசுபவர் விஜய் சேதுபதி... நானும் அவர் ரசிகர்தான் - பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
நடிகர் விஜய் சேதுபதி பேச்சு குறித்து நிதியமைச்சர் பேசியபோது நானும் விஜய் சேதுபதி கோடிக்கணக்கான ரசிகர்களில் ஒருவர் தான் என கூறினார்
சென்னை: எந்த அரசாக இருந்தாலும் தனது கருத்தை தைரியமாக பேசக்கூடியவர் விஜய் சேதுபதி. அவரது ரசிகன் நான் என்று அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அவரது தனித்துவமான நடிப்புக்கு என்று ரசிகர்கள் கூட்டம் உள்ளனர். தமிழக அமைச்சரே விஜய் சேதுபதியின் ரசிகர் என்று கூறியுள்ளார்.
ஹீரோவாக மட்டுமல்லாது வில்லனாகவும்,கௌரவ வேடத்திலும் நடத்து தனக்கென்று ரசிகர்கள் வட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார் விஜய் சேதுபதி. அரசு சார்பான விழாக்களிலும் அவ்வப்போது தலைகாட்டி வருகிறார். சமூக வலைத்தளங்களிலும் கருத்துக்களைப் பதிவிட்டு வருகிறார் விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி
வெறும் நடிகராக ஒதுங்கி நிற்காமல் சமூகப்பிரச்சினைகளுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் விஜய் சேதுபதி. அரசியல் ஒரு சாக்கடை என்று சொல்லிவிட்டு ஓட்டுப்போடுவதிலிருந்து ஒதுங்கிமட்டும் நிற்கவே கூடாது. அரசியலில் நமக்குப் பிடிக்காதவர்களை ஒதுக்கி வைப்பதற்காகவாவது தேர்தலில் அனைவரும் ஓட்டுப்போட வேண்டும் என்று கூறியிருந்தார் விஜய் சேதுபதி.

கூடைப்பந்து போட்டி
71-வது தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது. வரும் 10ஆம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் 16 அணிகளும், பெண்கள் பிரிவில் 15 அணிகளும் பங்கேற்றுள்ளன.

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
இந்த போட்டியை தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக நடிகர் விஜய் சேதுபதி பங்கேற்றார். போட்டியை தொடங்கி வைத்து அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், "ஒரு பொது தொழிலில் இருந்து கொண்டு, தெளிவாக கருத்தை தைரியமாக சொல்லி, அரசாங்கம் யாராக இருந்தாலும் இருக்கட்டும், அப்படி ஒரு தன்மையுடன், சிந்தனையுடன் பேசக்கூடியவர் விஜய் சேதுபதி.

நானும் ரசிகர்கள்
விஜய் சேதுபதி தனித்துவமான நடிகர். பல கோடி ரசிகர்களைப் போல நானும் விஜய் சேதுபதி ரசிகன்தான் என்று கூறினார். பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் இளம்பெண் நியாயத்துக்காக போராடுவது வேதனையாக இருக்கிறது. அந்த பெண்ணின் குரலை 10 வினாடிகள் கூட நம்மால் கேட்க முடியவில்லை. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பது சிறு குழந்தைகளுக்கு கூட தெரியும். குற்றவாளிகளுக்கு உடனே தண்டனை வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார் விஜய் சேதுபதி.

நல்லது நடக்கும்
நமக்குப் பிடிக்காத அரசியல்வாதிகளை அரசியலை விட்டு அப்புறப்படுத்த வேண்டும் என்கிற ஒரு காரணத்துக்காகவாவது கண்டிப்பாக தேர்தலில் ஓட்டுப்போடவேண்டும், கட்சியைப் பார்ப்பதை விடுத்து நல்ல தலைவர் யார் என்று நினைக்கிறீர்களோ அவர்களுக்கு ஓட்டுப்போட்டாலே போதும். நல்லது தானாகவே நடந்துவிடும் என்று கூறியிருந்தார் விஜய் சேதுபதி. இந்த கருத்துக்கள்தான் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications