ரொம்ப வருத்தமாக இருக்கு! தமிழில் பேச முடியலையே! மேடையிலேயே உருகிய ராஜ்நாத் சிங்.. என்னாச்சு?
சென்னை: இந்தியாவில் மிகவும் பழமையான மொழி என்பதோடு, இந்திய மொழிகளின் தாய் மொழியாக இருக்கும் தமிழில் பேச முடியவில்லையே என மேடையிலேயே மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மிகவும் வருத்தப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ள பாஜக தயாராகி வருகிறது. அதன்படி நாடு முழுவதும் மத்திய பாஜக அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த பொதுக்கூட்டங்கள் தமிழ்நாட்டிலும் நடந்து வருகிறது.
சில நாட்களுக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாடு வருகை தந்தார். தென்சென்னை லோக்சபா தொகுதி நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு வேலூரில் நடந்த சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பேசினார்.

அந்த வரிசையில் தான் இன்று சென்னை தாம்பரம் அருகே இரும்புலியூரில் பாஜகவின் 9 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று பேசினார். அப்போது அவர் தனக்கு தமிழ் மொழி பேச தெரியாமல் போனதை நினைத்து மனம் வருந்தினார். இதுபற்றி ராஜ்நாத் சிங் கூறியதாவது:
வணக்கம்.. சகோதர, சகோதரிகளே நண்பர்களே உங்கள் முன்பு சென்னையில் இருப்பதற்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன். இது மிகவும் உற்சாகமான, சிறந்த பண்பாடு மிகுந்த நகராகும். மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக நான் இருக்கிறேன். ஆனால் போர்படையை இதற்கு முன்பு மிகவும் திறமையாக கையாண்டவர்கள் ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் ஆவார்கள். அவர்கள் பிறந்த பூமியில் இருப்பதை பெருமையாக கருதுகிறேன்.
தமிழ்நாடு திருவள்ளூவர் போன்ற மிகப்பெரிய கவிஞர்களையும், அறிஞர்களை தந்த நிலம். திருக்குறள் என்ற நூலை திருவள்ளூவர் தந்துள்ளார். திருக்குறளின் கருத்துகள் பாடல் வரிகளாக மட்டுமின்றி மிக முக்கிய முடிவுகளை எடுக்க வழிகாட்டும் நூலாக உள்ளது. சித்தர்கள், ஆழ்வார்கள், நாயன்மார்கள் வாழ்ந்த பூமிக்கு வந்திருப்பது மகிழ்ச்சி.
தமிழ் மிகவும் பழமையான மொழி. தமிழ் மொழி அழகான மொழி மட்டுமல்ல. எல்லா மொழிகளுக்கான தாயான மொழியாக தமிழ் உள்ளது. இந்தியாவின் பழமையான மொழியாகவும், தொன்மை கொண்ட மொழியாவும் உள்ளது. இத்தகைய தொன்மை கொண்ட தமிழ் மொழியில் பேச விரும்புகிறேன். ஆனால் தமிழ் மொழியில் பேச முடியவில்லையே என வருந்துகிறேன். தமிழ் மொழி எனக்கு தெரியாது என்பதால் எனது தாய்மொழியான இந்தியில் பேச உள்ளேன்'' எனக்கூறி தனது உரையை தொடங்கினார்.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே!












Click it and Unblock the Notifications