Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விபச்சாரின்னு சொன்னா பயப்படுவோமா? அசிங்க அரசியல்.. ரோஜாவுக்கு ஆதரவாக வெளுத்து வாங்கிய ராதிகா

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெண்கள் அரசியலுக்கு வந்தால் அவர்களை விபச்சாரி என்றும் ப்ளூபிலிம் படங்களில் நடித்தவர்கள் என்றும் அசிங்கப்படுத்துவீர்களா என்று நடிகை ராதிகா கேள்வி எழுப்பியுள்ளார். இப்படி எல்லாம் பேச பண்டாரு சத்திய நாராயணா போன்ற ஆண்கள்தான் வெட்கப்பட வேண்டும் என்று கூறியுள்ள ராதிகா, ரோஜாவிற்கு ஆதரவாக என்றும் நான் துணை இருப்பேன் என்று கூறியுள்ளார்.

ரோஜா பற்றி விமர்சனம்: ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் அந்த கட்சியின் சுற்றுலாத்துறை அமைச்சராக நடிகை ரோஜா உள்ளார். இந்த நிலையில், ரோஜா குறித்து தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பண்டாரு சத்யநாராயண மூர்த்தி பேசிய கருத்து சர்ச்சையாகியுள்ளது. கட்சி ரீதியாக விமர்சிக்கிறேன் என்ற பெயரில் ரோஜாவின் தனிப்பட்ட வாழ்க்கையை குறித்து முன்னாள் அமைச்சர் பேசியது அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

I stand by at Roja Selvamani says Radikaa Sarathkumar and condemn Bandaru Satyanarayana

கண்ணீர் விட்ட ரோஜா: ரோஜா ரெக்கார்டு டான்ஸ் ஆடியவர் என்றும், அவர் ஆபாச படங்களில் நடித்துள்ளார் என்றும் பேசியிருந்தார் சத்திய நாராயணா.
இந்த பேச்சு ஆந்திராவில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது. இதற்கு நடிகையும் அமைச்சருமான ரோஜா கண்ணீர் மல்க பேட்டி அளித்தார்.
நான் படத்தில் நிர்வாணமாக நடித்ததாக கூறி என்னை சித்திரவதை செய்கின்றனர். சட்டசபையிலும் வீடியோக்கள் எல்லாம் காட்டப்பட்டது. ஆனால், அந்த வீடியோக்களில் இருப்பது நான் தான் என்று நிரூபிக்கப்படவில்லை என்று கூறினார் ரோஜா.

நீங்கள் யார்: பெண்கள் தங்கள் விருப்பப்படி வாழ வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறி இருக்கிறது. என் குணத்தை மதிப்பிட நீங்கள் யார்? தெலுங்கு தேசம் கட்சி பெண்களை விளையாட்டு பொருளாக நடத்துகிறது. உங்கள் வீட்டில் உள்ள பெண்களை பற்றி இப்படி பேசினால் முன்னாள் அமைச்சர்கள் காந்தா ஸ்ரீனிவாஸ், அய்யண்ணபத்ரா, சந்திரபாபு நாயுடு, லோகேஷ் ஆகியோர் இது தொடர்பாக கண்டிக்காதது ஏன்? தெலுங்கு தேசம் கட்சி ஒரு திரையுலக பிரமுகரால் நிறுவப்பட்ட கட்சி. பண்டாரு சத்தியநாராயணனின் பேச்சை கேட்டு அவருடைய மனைவியே அறைந்திருக்க வேண்டும் என்று கொதித்திருந்தார் நடிகை ரோஜா.

மரியாதை இல்லை: தப்பை கேள்வி கேட்டால் என்னை தாக்கி பேசுவார்களா? தெலுங்கு தேசம் கட்சியில் பெண்களுக்கு மரியாதை இல்லை. தெலுங்கு தேசம் கட்சியால் அரசியல் ரீதியாக வளர முடியாது. கட்சியால் சத்தியநாராயண மூர்த்தி மீது நான் மான நஷ்ட வழக்கு தொடர்வேன் என்று கூறி இருந்தார். இப்படி அமைச்சர் ரோஜா பேசியிருந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து போலீசார் அவதூறாக பேசிய வழக்கில் பண்டாரு சத்தியநாராயண மூர்த்தியை கைது செய்திருக்கின்றனர்.

ரோஜாவிற்கு ராதிகா ஆதரவு: ரோஜாவின் பேட்டி ஆந்திராவில் அதிர்வலைகளை உருவாக்கிய நிலையில் மதிப்பிற்குரிய அமைச்சரும், நடிகையுமான ரோஜாவுக்காக நான் ஆதரவாக இருப்பேன் என நடிகை ராதிகா வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ பதிவில், "ஒரு தோழியாக, நடிகையாக, அரசியல் தலைவராக ரோஜாவின் தைரியம் எனக்கு தெரியும். கடந்த இரண்டு நாட்களாக ரோஜாவுக்கு எதிராக தரம் தாழ்ந்த அரசியல் கருத்து பகிரப்பட்டு வருகிறது. அது மிகவும் வருத்தமளிக்கிறது.

அசிங்கமாக உள்ளது: அண்மையில் தான் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. பெண்கள் கல்வியில் மட்டும் இல்லாமல் அரசியலிலும் ஒரு பங்காக உள்ளனர். சமூகத்தின் ஒற்றுமையில் பெண்களும் ஒரு தூணாக உள்ளனர். இந்த நிலையில் பெண் குறித்த அவதூறான அரசியல் கருத்து அசிங்கமாக உள்ளது. இந்தியாவில் பெண்களை பாரத மாதாவாக பார்க்கும் நிலையில் இதுபோன்ற அவதூறான விமர்சனங்கள் அசிங்கமாக உள்ளது" என்றார்.

பயந்து விடுவோமா?: ஒரு அமைச்சரை புளூ பிலிமில் நடித்தவர் என்றும், அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் விமர்சிக்க உங்களுக்கு என்ன தகுதி உள்ளது என கடுமையாக பதிலடி கொடுத்துள்ள ராதிகா, பெண்களை விபச்சாரி என்று சொன்னாலோ, ப்ளூ பிலிமில் நடித்திருக்கிறார் என்று அவரது கேரக்டரை அசிங்கப்படுத்தினால் பெண்கள் பயந்து விடுவார்கள் என்று நினைத்தீர்களா? நீங்கள்தான் வெட்கப்பட வேண்டும் என்று விட்டு விளாசியுள்ளார் ராதிகா.

மோடி தலையிட வேண்டும்: ரோஜாவைப் பற்றி அவரது கேரக்டரை பற்றி அசிங்கமாக பேசிய அந்த நபர், ஒரு மனிதராக, ஒரு குடும்பத்தின் தலைவனாக, ஒரு அரசியல்வாதியாக தனது தவறுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் குரலெழுப்பியுள்ளார். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட்டு, பெண்களுக்கு எதிரான இதுபோன்ற பேச்சுக்கு பாராளுமன்றத்தில் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும் ராதிகா கேட்டுக்கொண்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+