I Will Come Back... இதெல்லாம் சகஜம் தான்.. விஜய் பிறந்தநாள் விழாவில் தீக்காயமடைந்த சிறுவன் ‛அசால்ட்’
சென்னை: சென்னை நீலாங்கரையில் விஜய் பிறந்தநாளையொட்டி நடந்த விழாவில் சிறுவனின் கையில் தீப்பற்றி எரிந்தது. தீக்காயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள நிலையில் ‛‛சாகசம் பண்ணும்போது இதெல்லாம் சகஜம் தான். I will come Back’’ என்று கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். இப்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கி உள்ளார். வரும் 2026 சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். தற்போது நடிகர் விஜய் தனது கட்சியை பலப்படுத்தும் பணியிலும், நிர்வாகிகள் நியமனத்திலும் தீவிரம் காட்டி வருகிறார்.

இந்நிலையில் தான் நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாளாகும். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 55 பேர் பலியான நிலையில் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் வேண்டாம் என விஜய் அறிவுறுத்தியிருந்தார். ஆனாலும் கூட அவரது ரசிகர்கள், கட்சியை சேர்ந்தவர்கள் விஜய்யின் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் சென்னை நீலாங்கரையில் விஜய் பிறந்தநாளையொட்டி சாகச நிகழ்ச்சியில் நடந்தது. இதில் 7 ம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஓடுகளை உடைக்க தயாராக இருந்தார். ஓட்டில் பெட்ரோல் ஊற்றி தீவைக்கப்பட்ட பிறகு அவர் அதனை உடைக்க ரெடியானார்.
‛‛விஜயின் அந்த ஒரு பார்வை’’.. மனசாட்சி இல்லையா தம்பி! கள்ளக்குறிச்சியில் இளைஞரை கண்டித்த நிர்வாகிகள்
இந்த சாகசத்துக்காக ஓடுகள் மற்றும் சிறுவனின் கையில் பெட்ரோல் ஊற்றப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்பிறகு லைட்டர் பயன்படுத்தி தீ பற்றவைத்தபோது சிறுவனின் கையில் திடீரென்று தீப்பற்றியது. அதாவது சிறுவன் ஓடுகளை கையால் உடைக்க மேடையில் தயாராக இருந்தார். அந்த சிறுவனின் கையில் பெட்ரோல் லேசாக ஊற்றப்பட்டு தீ வைக்கப்பட்டது.
‛‛விஜய் காலில் விழ யாரும் சொல்லவில்லை’’.. அவரை பார்த்ததும் அழுகை வந்திடுச்சி - கள்ளக்குறிச்சி பெண்
இந்த வேளையில் யாரும் எதிர்பாராத விதமாக தீ சட்டென கையில் பற்றியது. சிறுவன் பதறிப்போனான். அருகே இருந்தவரின் கையிலும் தீப்பற்ற மேடை முழுவதும் தீப்பிழம்பானது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதில் சிறுவனின் கையில் தீக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. இதனை பார்க்கும் பலரும் அந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர், சிறுவன் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தினரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தான் காயமடைந்த சிறுவன் சம்பவம் பற்றி விளக்கம் அளித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:
மளிகை + அத்தியாவசிய பொருள்.. கள்ளச்சாராய பாதிப்பு குடும்பத்துக்கு உதவி.. விஜய் கட்சி முக்கிய முடிவு
‛‛நான் 7 ம் வகுப்பு படிக்கிறேன். 15 உலக சாதனை செய்துள்ளேன். நான் சாகசம் செய்யும்போது இதுபோன்று நடப்பது சகஜம் தான். எனக்கு ஒன்றும் ஆகவில்லை. கொஞ்சம் ஸ்பார்க் ஆகிவிட்டது. I Will come Back. 15 உலக சாதனைகளை நிகழ்த்தியபோது பாதுகாப்பாகவே இருந்தேன். ஆனால் இன்று இப்படி ஆகிவிட்டது. இந்த முறை சட்டென ஸ்பார்க் ஆகிவிட்டது. இதனால் கையில் தீப்பற்றிவிட்டது’’ என தெரிவித்துள்ளார்.
-
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications