‛‛விஜயின் அந்த ஒரு பார்வை’’.. மனசாட்சி இல்லையா தம்பி! கள்ளக்குறிச்சியில் இளைஞரை கண்டித்த நிர்வாகிகள்
கள்ளக்குறிச்சி: கள்ளச்சாராயம் குடித்து கள்ளக்குறிச்சியில் சிகிச்சை பெற்று வருவோரை நேற்று நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த வேளையில் மனசாட்சி இன்றி செல்பி எடுத்த இளைஞரை விஜய் ஒரு பார்வை பார்த்ததும், அதன்பிறகு அவரது கட்சி நிர்வாகிகள் செய்த செயல் தொடர்பான வீடியோ இணையதளத்தில் வெளியாகி பரவி வருகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 100க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மெத்தனால் கலந்த சாராயம் பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்பட்ட நிலையில் அதனை வாங்கி குடித்தவர்கள் திடீரென்று வாந்தி, மயக்கம், வயிற்றெரிச்சல் உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர்கொண்டனர்.

இதையடுத்து அவர்கள் நேற்று முன்தினம் முதல் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதன்பிறகு பலர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டனர். இவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆனாலும் கூட பலர் சிகிச்சை பலனின்றி இறந்து வருகின்றனர். அளவுக்கு அதிகமாக கள்ளச்சாராயம் குடித்தவர்கள், ஏற்கனவே உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் அடுத்தடுத்து பலியாகி வருகின்றனர். அந்த வகையில் தற்போது வரை மொத்தம் 50 பேர் வரை பலியாகி உள்ளனர். மேலும் 50க்கும் அதிகமானவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலருக்கு கண்பார்வை பறிப்போய் உள்ளது.
இதனால் இந்த கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் மொத்த தமிழ்நாட்டையும் உறைய வைத்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்து வருகிறது. இத்தகைய சூழலில் தான் கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பவர்களை நடிகரும், நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான நடிகர் விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை அவர் சந்தித்து நலம் விசாரித்தார். ஒவ்வொரு பெட்டுக்கும் சென்று அங்கிருந்தவர்களை கையெடுத்து கும்பிட்டு விஜய் நலம் விசாரித்தார். இந்த வேளையில் பாதிக்கப்பட்டவர்களிடம் நலம் விசாரித்த நடிகர் விஜய், அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை பற்றி டாக்டர்களிடம் கேட்டறிந்தார். இந்த வேளையில் பாதிக்கப்பட்ட ஒருவரிடம் விஜய் நலம் விசாரித்தது அவரது குடும்பத்தை சேர்ந்த பெண்ணிடம் நலம் விசாரித்தார்.
இந்த வேளையில் இளைஞர் ஒருவர் நடிகர் விஜய் நலம் விசாரிப்பதை சேர்த்து செல்பி எடுத்தார். இதனை பார்த்த விஜய் சில நொடிகள் அந்த இளைஞர் செய்வதை பார்த்தார். துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் நலம் விசாரிக்கும்போது இப்படி செய்யலாமா? என்ற வகையில் விஜய் அந்த இளைஞரை சில நொடிகள் பார்த்தார். ஆனால் விஜய் எதுவும் கூறாத நிலையில் நிர்வாகிகள் சுதாரித்து கொண்டனர். இதையடுத்து நிர்வாகிகள், ‛‛செல்பி எடுக்கிற நேரமா இது.. மனசாட்சி இல்லையா தம்பி?'' என்று இளைஞரை பார்த்து கேட்டனர். இதையடுத்து இளைஞர் ‛செல்பி' எடுப்பதை நிறுத்தினார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications