அப்படியே மனசு மாறிய IAS, IPSகள்.. ஆளும் கட்சி பேச்சையே கேட்பது இல்லையாமே? காட்சி மாறுதா? குழப்புதே!
சென்னை: ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளின் மனநிலை மாறியிருப்பதாக பாஜகவுக்கு தகவல் தந்திருக்கிறது மத்திய உளவுத்துறை. அதாவது, தேர்தல் காலத்தில் ஆளும் கட்சிக்கு ஆதரவாக அதிகாரிகள் இருப்பதும், மீண்டும் ஆளும் கட்சியே ஆட்சிக்கு வரவேண்டும் என்றும் உயரதிகாரிகள் நினைப்பது இயல்பானதுதான்.
அப்படித்தான் தற்போதைய திமுக ஆட்சியே, மீண்டும் வரும் என்கிற எதிர்பார்ப்பில் இருந்து வந்தனர். இந்த நிலையில், உயரதிகாரிகளின் மனநிலை எப்படி இருக்கிறது என்று உளவுத்துறையில் உள்ள தனது நட்பு வட்டாரங்களில் அண்ணாமலை விசாரித்திருக்கிறார்.

மனநிலை மாற்றம்
இதனையடுத்து, தலைமைச்செயலகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளிடம் சீக்ரெட்டாக விசாரித்திருக்கிறது மத்திய உளவுத்துறை. அதில் பல தகவல்கள் கிடைத்துள்ளதாம். அந்த தகவல்களை அண்ணாமலையிடம் பகிர்ந்து கொண்ட உளவுத்துறையிலுள்ள அவரது நண்பர்கள், ஏப்ரல் 10-ந்தேதி வரை திமுக ஆதரவு மனநிலையில் அதிகாரிகள் இருந்துள்ளனர். ஆட்சியை திமுக தக்க வைத்துக்கொள்ளும் என்கிற நம்பிக்கையும் அவர்களிடம் இருந்துள்ளது. இதனால், காபந்து அரசாக இருந்தாலும், தற்போதுள்ள அமைச்சர்கள், அவர்கள் சார்ந்த துறைகளில் சிலபல காரியங்களை செய்து கொடுக்க அதிகாரிகளை அணுகிய போது, அதனை செய்து தந்திருக்கிறார்கள்.
சுணக்கம் காட்டும் தலைகள்
ஆனால், கடந்த 1 வாரமாக அந்த மனநிலை மாறியிருக்கிறது. அமைச்சர்கள் கேட்கும் அவசர உதவிகளை செய்து தருவதில் சுணக்கம் காட்டுகிறார்கள். அதாவது, செய்ய முடியாது என அமைச்சர்களிடம் நேரடியாக சொல்லாமல், பார்க்கிறேன் சார் என்று மட்டும் சொல்லி தவிர்க்கிறார்கள். மேலும், அமைச்சர்கள் தந்த கோர்க்கைகளை கிடப்பிலும் போட்டு விடுகிறார்கள். அந்த அளவுக்கு அதிகாரிகளிடம் மாற்றம் தெரிகிறது. ஆட்சியை திமுக தக்க வைத்துக் கொள்வதில் அவர்களுக்கு சந்தேகம் வந்திருக்ககூடும். அதன் விளைவு தான் அவர்களிடம் எதிரொலிக்கும் மாற்றம் என்று அண்ணாமலைக்கு தகவல் தந்துள்ளனர் அவரது உளவுத்துறை நண்பர்கள்.
அதிகாரிகள் மாற்றம்
முதல்வர் ஸ்டாலினுக்கு பொதுவாக நெருக்கமாக இருக்கும் அதிகாரிகள் என்றால் அது டிஜிபி, தலைமை செயலாளர், சென்னை கமிஷ்னர், லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி ஆகியோர்தான். இவர்கள் எல்லோரையும் தேர்தல் ஆணையம் மாற்றி உள்ளது.
தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கு முன் திமுகவிற்கு நெருக்கமான அதிகாரிகள் என்ற லிஸ்ட் அடங்கிய ஃபைல் ஒன்றை எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு அனுப்பினாராம். இந்த லிஸ்டில் பல அதிகாரிகளை மாற்ற சொல்லி இருந்தாராம். அவர் கொடுத்தது என்னவோ உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம்.
ஆனால் அவர் டெல்லியிடம் வேண்டும் கேட்ட சில அதிகாரிகளே தற்போது தேர்தல் நேரத்தில் உயர் பொறுப்பிற்கு நியமனம் செய்யப்பட்டு உள்ளார்களாம். தமிழக அரசின் உச்சபட்ச அதிகார மையத்தில் அதிரடியான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது இந்திய தேர்தல் ஆணையம். தொடர்ச்சியாக ஒரு மாநிலத்தை கட்டுப்பாட்டில் வைத்து இருக்கும் டாப் அதிகாரிகளை டெல்லி மாற்றி உள்ளது.
சமீபத்தில் சென்னையின் கமிஷ்னர் மாற்றப்பட்டார். சென்னை காவல் ஆணையராக இருந்த அருண் மாற்றப்பட்டு புதிய காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக (Chief Secretary) எம். சாய் குமார் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தின் இந்த அதிரடி உத்தரவு கோட்டை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
என்ன நடந்தது?
ஏப்ரல் 8, 2026 அன்று இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட அதிரடி உத்தரவைத் தொடர்ந்து, தற்போது தலைமைச் செயலாளராக இருந்த என். முருகானந்தம் ஐ.ஏ.எஸ் அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான எம். சாய் குமார் இந்தப் பொறுப்பை ஏற்கிறார்.
நிர்வாக மாற்றத்தின் முக்கிய அம்சங்கள்:
தலைமைச் செயலாளர் மாற்றம்: எம். சாய் குமார் ஐ.ஏ.எஸ் புதிய தலைமைச் செயலாளராக நியமனம்.
நிர்வாகத் திறமையில் அனுபவம் வாய்ந்த எம். சாய் குமார், ஏற்கனவே பல்வேறு முக்கியத் துறைகளில் செயலாளராகப் பணியாற்றியவர். தேர்தல் நேரத்தில் நிர்வாக இயந்திரத்தைச் சமநிலையுடன் கொண்டு செல்வதில் இவருக்கு முக்கியப் பங்கு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல், லஞ்ச ஒழிப்புத் துறை டி.ஜி.பி-யாக நியமிக்கப்பட்டுள்ள சந்தீப் மிட்டல், ஐ.பி.எஸ் வட்டாரத்தில் நேர்மையான அதிகாரி என்று பெயர் எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- சிறப்பு நிருபர் எழில்
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications