10% இடஒதுக்கீடு விவகாரம்.. திமுக பின் நின்றால் அதிமுகவை மக்கள் மன்னிப்பார்கள்.. ஆர்.எஸ்.பாரதி பதிலடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: உயர் சாதி ஏழைகளுக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு விவகாரத்தில் திமுக பின் அதிமுக நின்றால் மக்கள் அவர்களின் பாவங்களை மன்னிப்பார்கள் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

உயர்சாதி ஏழைகளுக்கு வழங்கிய 10 சதவிகித இட ஒதுக்கீடு செல்லும் என சில நாட்களுக்கு முன் உச்சநீதிமன்றம் வழங்கியது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் வரவேற்றன.

ஆனால் திமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் 10 சதவிகித இட ஒதுக்கீடு தீர்ப்பு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

திமுகவின் நாடகம்

திமுகவின் நாடகம்

இதனிடையே 10 சதவிகித இட ஒதுக்கீடு தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்காது என்று அறிவிக்கப்பட்டது. இதுமட்டுமல்லாமல், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இட ஒதுக்கீடு விவகாரத்தில் திமுக கபட நாடகம் போடுவதாக குற்றச்சாட்டி உள்ளார்.

ஜெயக்குமார் குற்றச்சாட்டு

ஜெயக்குமார் குற்றச்சாட்டு

இது தொடர்பாக ஜெயக்குமார் வெளியிட்ட அறிக்கையில், "சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டம் என்ற திமுகவின் கபட நாடகத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். பாஜக தேவை இல்லை என்பதால் 10 சதவிகித இட ஒதுக்கீடு சட்டத்தை எதிர்ப்பது போல் திமுக நடிக்கிறது. 69 சதவிகித இட ஒதுக்கீட்டை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என்று குறிப்பிட்டார்.

கூட்டணி வேறு, கொள்கை வேறு

கூட்டணி வேறு, கொள்கை வேறு

இதற்கு திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் வில்சன் எம்பி ஆகியோர் பதிலடி கொடுத்துள்ளனர். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து ஆர்.எஸ்.பாரதி கூறுகையில், இடஒதுக்கீட்டுக்காகவே உருவாக்கப்பட்டது திராவிட கழகம். காங்கிரஸ் கூட்டணியில் இருந்த போது மத்திய அரசு கொண்டு வந்த பல திட்டங்களை திமுக தடுத்துள்ளது. திமுகவிற்கு கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு.

திமுகவே காரணம்

திமுகவே காரணம்

அனைத்துக் கட்சி கூட்டத்தில் கட்சிகள் தங்கள் கருத்தை முன்வைக்கலாம். இந்தியா முழுவதும் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு கிடைப்பதற்கு திமுகவே காரணம். 10% இடஒதுக்கீடு தொடர்பாக நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. முந்தைய ஆட்சியிலிருந்து எடப்பாடி பழனிசாமி 10% இடஒதுக்கீடு தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி இருக்க வேண்டும். ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும் என்பது அண்ணாவின் கருத்து, அதன் அடிப்படையிலேயே அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது.

 ஜெயக்குமார் அறிக்கைக்கு காரணம் இதுதான்

ஜெயக்குமார் அறிக்கைக்கு காரணம் இதுதான்

குறைகூறுவதை விட்டுவிட்டு திமுக பின்னால் அதிமுக நின்றால் அவர்களது பாவங்களை மக்கள் மன்னிப்பார்கள். அரசியல் அமைப்புக்கு தலைமை தங்கியவரே திமுக எம்பி வில்சன் வாதத்தை ஏற்றுக் கொண்டுள்ளார். மத்திய பாஜக அரசை திருப்திப்படுத்தவே 10% இடஒதுக்கீடு குறித்து ஜெயக்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். 10% இடஒதுக்கீடு தீர்ப்பை எதிர்த்து திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+