ஊழல்வாதிகளை எதிர்த்தால் ரவுடியா.. பரவாயில்லை ரவுடியாகவே இருக்கோம்.. திமுகவுக்கு பதிலடி கொடுத்த பாஜக
சென்னை: ‛‛ஊழல்வாதிகளை எதிர்க்கும் அண்ணாமலையை ரவுடி என கூறினால் அப்படியே அழையுங்கள்'' என திமுகவின் எம்பி செந்தில்குமாருக்கு பாஜகவின் மாநில துணை தலைவர் நாராயண் திருப்பதி பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழகத்தில் உள்கட்சி பூசலால் அதிமுக பிளவுப்பட்டு உள்ளது. இதனால் சமீபகாலமாக தமிழகத்தின் அரசியல் என்பது பாஜக, திமுகவை சுற்றியே நிகழ்ந்து வருகிறது.
இதனால் தமிழகத்தில் திமுக மற்றும் பாஜக தலைவர்கள் இடையே வார்த்தைப்போர் நீடித்து வருகிறது. பொது மேடைகள், டுவிட்டர் உள்ளிட்ட பிற சமூக வலைதளங்களில் அவர்கள் கருத்துகள் பதிவிட்டு ஒருவரையொருவர் தாக்கி பேசி வருகின்றனர்.

பிடிஆர்-அண்ணாமலை மோதல்
இந்த கருத்து மோதல்கள் நேற்று முதல் இன்னும் தீவிரமாகி உள்ளது. நேற்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பாஜக அண்ணாமலை தொடர்பான படங்களை வெளியிட்டு ஆடு இமோஜியை பயன்படுத்தி விமர்சனம் செய்தார். இதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் காட்டமாக பதிலளித்தார். அப்போது, ‛‛பிடிஆர் பழனிவேல் அரசியலுக்கும், மாநிலத்திற்கும் சாபக்கேடு. என் செருப்புக்கூட அவர் நிகரில்லை'' என தெரிவித்து இருந்தார். இது கடும் சர்ச்சையானது.

திருப்பி அடிப்போம் என பேட்டி
மேலும் இன்று சென்னையில் அளித்த பேட்டியில், ‛‛திமுக தான் மதஅரசியல் செய்கிறது. திமுக மிரட்டும் தொனியில் அரசியல் செய்தால் அதை கண்டு பயப்படமாட்டோம். நான் இயேசு கிறிஸ்து அல்ல. ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தை காட்டும் அவசியம் இல்லை. திருப்பி அடிப்போம்'' என ஆக்ரோஷமாக கூறியிருந்தார்.

தர்மபுரி திமுக எம்பி எதிர்ப்பு
இந்நிலையில் தான் தர்மபுரி திமுக எம்பி செந்தில்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் பாஜக தலைவர் அண்ணாமலையை மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர், ‛‛தமிழக பாஜகவில் மரியாதைக்குரிய தலைவர்களாக டாக்டர் தமிழிசை, டாக்டர் முருகன், ராதா கிருஷ்ணன் போன்றோர் இருந்தார்கள். தற்போதைய மாநில தலைவர் என்பவர் பண்பற்ற, கலாச்சாரமற்ற, தூய்மையற்ற, இழிவான, அரசியல் கண்ணியமற்ற நபராக உள்ளார். ரவுடிகள் பயன்படுத்தும் மொழியை பத்திரிகையாளர் சந்திப்பு உள்பட பிற இடங்களில் பயன்படுத்துகிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது'' என விமர்சனம் செய்துள்ளார்.

நாராயண் திருப்பதி பதிலடி
இதனை தற்போது பாஜகவின் துணை தலைவர் நாராயண் திருப்பதி விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛ஊழல்வாதிகளை எதிர்க்கிறார் என்பதற்காக ஒருவரை ரவுடி என்று அழைத்தால் தாராளமாக அப்படியே அழைக்கலாம். தமிழ்நாட்டில் மரியாதைக்குரிய வகையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் (எம்பி) இருந்தனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பற்ற, பயனற்ற, தகுதியற்ற நபராக உள்ளார். அவர்களின் சொந்த மொழியில் மக்களிடம் பதில் சொல்வதில் தவறில்லை'' என காட்டமாக பதில் அளித்துள்ளார்.
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா?












Click it and Unblock the Notifications