உடலில் தமிழ் உணர்ச்சி இருந்திருந்தால்.. அதிமுகவினர் இப்படி செய்திருப்பார்களா? துரைமுருகன் விளாசல்!
சென்னை: உடலில் தமிழ் உணர்ச்சி இருக்குமேயானால் இந்தி எதிர்ப்பு தீர்மானம் கொண்டு வரும் போது சட்டசபையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்திருக்க மாட்டார்கள் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
உடலில் தன்மான ரத்தம் ஓடுமேயானால் இந்தி எதிர்ப்பு தீர்மானத்தை ஆதரிப்பதற்காக அதிமுக உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் இருந்திருப்பார்கள் எனவும் அவர் கூறினார்.
மத்திய அரசுக்கு எதிரான இந்தி எதிர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்ட வேளையில் அதிமுக உறுப்பினர்கள் அமளி துமளியில் ஈடுபட்டு சபையிலிருந்து வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.

வரலாற்று முக்கியத்துவம்
தமிழக சட்டசபையில் தமிழகத்தையே உலுக்கும் வகையில் இரண்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதுமட்டுமல்லாமல் இந்தி எதிர்ப்பு தீர்மானமும் கொண்டுவரப்பட்டது. இப்படி முக்கியத்துவம் வாய்ந்த பல நிகழ்வுகள் இன்றைய தினம் சட்டசபையில் நடைபெற்ற நிலையில் அதிமுக இருக்கை விவகாரத்தை காரணம் கூறி அமளி துமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தது.

உடலில் தமிழ் உணர்ச்சி
இந்நிலையில் இது குறித்து தனது வேதனையையும், ஆதங்கத்தையும் பகிர்ந்துகொண்ட அமைச்சர் துரைமுருகன், உடலில் தமிழ் உணர்ச்சி இருக்குமேயானால் இந்தி எதிர்ப்பு தீர்மானம் கொண்டு வரும் போது சட்டசபையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்திருக்க மாட்டார்கள் என்றும் உடலில் தன்மான ரத்தம் ஓடுமேயானால் இந்தி எதிர்ப்பு தீர்மானத்தை ஆதரித்திருப்பார்கள் எனவும் மிக கடுமையாக பேசினார்.

பயந்து ஓடி
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் அளித்த அறிக்கையை கண்டும், ஆறுமுகசாமி ஆணையத்தின் ஜெயலலிதா மரணம் தொடர்பான அறிக்கையை கண்டும் அதிமுக பயந்துள்ளதாகவும், இதனால் வெளிநடப்பு செய்வது என ஏற்கனவே திட்டமிட்டு சபைக்கு வந்து நாடகத்தை நடத்தி முடித்திருக்கிறார்கள் எனவும் ஒரு பிடி பிடித்தார். இந்தி எதிர்ப்பு தீர்மானத்தை ஓ.பன்னீர்செல்வம் வழிமொழிந்து பேசியது குறிப்பிடத்தக்கது.

அதிமுக இருந்திருக்கலாம்
தமிழக சட்டசபையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விவகாரங்கள் இன்று நடைபெற்றிருக்கும் நிலையில் அதிமுக அவசியம் அங்கு இருந்திருக்க வேண்டும் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது. அதைவிடுத்து ஒரு இருக்கை பிரச்சனையை பூதாகரமாக்கி வெளிநடப்பு செய்தது ஏற்புடையதல்ல என்பதும் அவர்களின் கருத்தாக இருக்கிறது.
-
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications