விஜயகாந்த் மட்டும் நல்லா இருந்திருந்தா எங்களை இப்படி விட்டிருக்க மாட்டார்.. உருகிய இலங்கை அமைச்சர்!
சென்னை: விஜயகாந்த் நலமுடன் இருந்திருந்தால், இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலையை பார்த்துக்கொண்டு சும்மா இருந்திருக்க மாட்டார் என இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் கூறியுள்ளார்.
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த டிசம்பர் 28ஆம் தேதி காலமானார். அவரது உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலக வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. விஜயகாந்த் மறைவைடுத்து தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கட்சி தொண்டர்கள், ரசிகர்கள் என பல்லாயிரம் பேர் சென்னைக்கு வந்து நேரில் அஞ்சலி செலுத்தினர்.

திரையுலகினர் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழகமே விஜயகாந்த்தின் மறைவை நினைத்து இன்னமும் கலங்கி நிற்கிறது. தற்போது விஜயகாந்த்தை நல்லடக்கம் செய்த இடத்தில் கூட்டம் கூட்டமாக பொதுமக்கள் வந்து அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கின்றனர். விஜயகாந்த் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நினைவிடம் அமைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார் பிரேமலதா விஜயகாந்த்.
விஜயகாந்த் மறைவுக்கு, வெளிநாடுகளில் இருந்தும் பலர் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இலங்கை நாட்டின் அமைச்சரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டைமான் விஜயகாந்த் விஜயகாந்த் நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது வீட்டுக்கு சென்று அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, பிரேமலதா விஜயகாந்திற்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜீவன் தொண்டமான், "தலைவன் என்ற சொல்லுக்கு சிறந்த உதாரணம் கேப்டன் விஜயகாந்த். கேப்டன் விஜயகாந்த் அனைத்து மக்களின் மீது அன்பு வைத்திருந்த ஒரு பெரும் தலைவர். யார் கஷ்டம் என வந்தாலும் அவர்களுக்கு உதவி செய்யக் கூடியவர். தேமுதிக தொண்டர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஏழை எளிய மக்களுக்கு கேப்டன் செய்த உதவிகளை கணக்கிட முடியாது. இலங்கை மக்கள் மீது அதிக பாசம் கொண்டவர் கேப்டன். இலங்கை மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்தவர். அவர் மட்டும் உடல் நலத்துடன் இருந்திருந்தால், இலங்கை இத்தகைய பொருளாதார நெருக்கடியில் இருப்பதை பார்த்து அமைதியாக இருந்திருக்க மாட்டார். இலங்கைக்கு மிகப்பெரிய நிதியுதவியை அவர் நிச்சயம் செய்திருப்பார்.
அவரது இழப்பு தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல இலங்கைக்கும் பேரிழப்பு தான். இலங்கைத் தமிழர்களை வைத்து அனைவரும் இன்றைக்கு அரசியல் செய்கிறார்கள், ஆனால் அவர்களுக்கான பிரச்சனைகளுக்கு தீர்வு காண யாரும் முன் வரவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழ் மக்கள் மீது அதீத அன்பு கொண்டவர் விஜயகாந்த். 80களில் இலங்கையில் தமிழர்கள் படுகொலை அதிகரித்த போது, சென்னையில் நடிகர் நடிகைகளை திரட்டி உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார் விஜயகாந்த். இலங்கையில் இருந்து அகதிகளாக வந்த மக்களுக்காக பல உதவிகளை செய்துள்ளார். 1989-ல் மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த இலங்கை தமிழர்களை சந்தித்து, அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்தார் விஜயகாந்த்.
தொடர்ந்து, பல இலங்கை அகதிகள் முகாமுக்கு அரிசி உள்ளிட்ட பொருட்களை அனுப்பி வந்தார் விஜயகாந்த். விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் மீதான அபிமானத்தால், தனது மகனுக்கு விஜய பிரபாகரன் என்றும், தனது 100வது படத்துக்கு கேப்டன் பிரபாகரன் என்றும் பெயர் வைத்தார் விஜயகாந்த்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன












Click it and Unblock the Notifications