தமிழ்நாட்டின் அருமை தெரியனும் என்றால்.. ஒரு முறையாவது வட இந்தியா பக்கம் போங்க -தமிமுன் அன்சாரி
சென்னை: தமிழ்நாட்டின் அருமை தெரிய வேண்டும் என்றால் ஒரு முறையாவது வட இந்தியா பக்கம் போய்வர வேண்டும் என மஜக பொதுச்செயலாளர் தமுமுன் அன்சாரி பேசியுள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள ஒற்றுமையை வட இந்தியாவில் பார்க்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்று தமிமுன் அன்சாரி பேசியதாவது;
தமிழ்நாடு வாழ்க என முழங்குவதற்கு பல காரணங்கள் உண்டு தமிழ்நாட்டின் சிறப்புகளை உணர வேண்டும் என்றால் ஒரு நாளாவது உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம், பிஹார் , போன்ற வட மாநிலங்களில் சென்று பார்க்க வேண்டும். அல்லது வட இந்தியாவில் இருந்து வரும் ரயில்களில் பயணம் செய்ய வேண்டும்.

இதன் மூலம் மட்டுமல்ல கலாச்சாரம் ஒற்றுமை மூலம் தமிழ்நாட்டின் சிறப்பை உணரலாம். இங்கு இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர், ஒற்றுமை சிறப்பாக உள்ளது மாமன் மச்சான்களாக நாம் வாழ்கிறோம் எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்து வருகிறோம்.
அதனால்தான் தமிழ்நாட்டின் புதல்வர்கள் என்பதில் பூரிப்படைகிறோம். இங்கு சோழர் காலத்தில் சோழ மன்னர்களும், முஸ்லிம்களும், நெருக்கமாக வாழ்ந்துள்ளனர், சுலைமான் நபி அவர்களுக்கு பூம்புகார் துறைமுகம் வழியே ஏற்றுமதி செய்த முத்துக்கள் சேர்ப்பிக்கப்பட்டுள்ளது.
பாண்டிய மன்னன் சீனாவுக்கான தூதுக்குழுவுக்கு ஒரு முஸ்லிமை தான் தலைவராக அனுப்பி வைத்தார். சேர மன்னன், சேரமான் பெருமாள் தான், இஸ்லாத்தை தழுவிய முதல் மன்னர் ஆவார்.
இங்கு சேர, சோழ, பாண்டிய மன்னர்கள், ஒற்றுமையோடு வழி நடத்திய நாடு தமிழ்நாடு.இந்த ஒற்றுமையை வட இந்தியாவில் பார்க்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications