தேர்தல் ஆணைய முடிவால் காலியான லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி பதவி.. துரை குமாருக்கு கூடுதல் பொறுப்பு!
சென்னை: லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி பதவி காலியாக உள்ள நிலையில், அப்பொறுப்பை ஐ.ஜி. துரை குமார் கவனிப்பார் என உள்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். டேவிட்சன் தேவாசிர்வாதம் மாற்றப்பட்ட பிறகு, லஞ்ச ஒழிப்புத்துறை டி.ஜி.பி. பதவிக்கு சந்தீப் மிட்டல் நியமிக்கப்பட்டார். பின்னர் அந்த நியமனத்தை தேர்தல் ஆணையம் திரும்பப் பெற்றதை அடுத்து, தற்போது காலியாக உள்ள பதவிக்கு பொறுப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அரசு நிர்வாகத்தில் முக்கிய மாற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையின் இயக்குநர் பதவி காலியாக இருந்த சூழலில், தற்போது அந்தப் பொறுப்பை கவனிப்பதற்கான பொறுப்பு அதிகாரியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, லஞ்ச ஒழிப்புத்துறை டி.ஜி.பி-யாக இருந்த டேவிட்சன் தேவாசிர்வாதம் மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, அந்த இடத்திற்கு சந்தீப் மிட்டல் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டார். தேர்தல் ஆணையத்தின் இந்த நியமனத்துக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து, சந்தீப் மிட்டலின் நியமனம் ரத்து செய்யப்பட்டது. இதனால் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் பணியிடம் காலியாக இருந்தது.
இந்நிலையில், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் க. மணிவாசன் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி-யாக (SIC-I) பணியாற்றி வரும் ஏ.டி. துரை குமார் ஐபிஎஸ் லஞ்ச ஒழிப்புத்துறையின் இயக்குநர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மறு உத்தரவு வரும் வரை அல்லது ஒரு நிரந்தர அதிகாரி நியமிக்கப்படும் வரை, ஐ.ஜி. துரை குமார் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் பொறுப்பை முழுமையாகக் கவனிப்பார். தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நேரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி பொறுப்பிற்கு பொறுப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதால், நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் நிர்வாகப் பணிகள் தொய்வின்றி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏ.டி. துரை குமார் 2004 ஆம் ஆண்டு பேட்ச், தமிழ்நாடு கேடர் ஐபிஎஸ் அதிகாரி. இவர் தமிழக காவல்துறையில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில், குறிப்பாக அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ-யில் பணியாற்றியுள்ளார். 2022-ல் திருநெல்வேலி காவல் ஆணையர் பொறுப்பில் இருந்து, தமிழக அமலாக்கத்துறை ஐஜியாக (IG Enforcement) மாற்றப்பட்டார்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications