ரொம்ப ஷாக்கிங்கா இருக்கு! என்ன சொல்றதுன்னே தெரியல! பவதாரிணி மறைவு பற்றி இசையமைப்பாளர் பரணி உருக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பவதாரிணியின் இழப்பு மிகப்பெரிய இழப்பு. என்ன ஆறுதல் சொல்வது என்றே தெரியவில்லை. நல்ல பாடகி.. தனித்துவமான குரல்.. நல்ல இசையமைப்பாளரும் கூட என்று இசையமையாளர் பரணி ஒன் இந்தியாவுக்கு அளித்த பேட்டியின் போது உருக்கத்துடன் பேசினார்.

இசைமையாப்பாளர் இளையராஜா மகளும் பாடகியுமான பவதாரிணி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 47. புற்று நோய் பாதிப்பால் இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்த பவதாரிணி சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். அவரது உடல் இன்று மாலை சென்னை கொண்டு வரப்படும் என்று சொல்லப்படுகிறது.

ilayaraja-daughter-bhavadharini-demise-is-very-shocking-i-dont-know-what-to-say-musician-bharani

பாடகி பவதாரிணி மரணம் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் அவரது ரசிகர்களும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். பவதாரிணி உயிரிழப்பு என்பதை தன்னால் நம்பவே முடியவில்லை என்று இசையமைப்பாளர் பரணி உருக்கமாக கூறியுள்ளார். ஒன் இந்தியாவுக்கு பரணி அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

பவதாரிணி இறந்த செய்தியை கேள்வி பட்டதும் அதிர்ச்சி அடைந்தேன். ரொம்ப சின்ன வயசு அவுங்க... பவதாரிணிக்கு இந்த மாதிரி ஒரு நோய் இருந்ததே எனக்கு தெரியாது. இன்றைக்குதான் கேள்விப்படுகிறேன். இலங்கையில் உயிரிழந்துவிட்டதாக சொன்னது முதலில் போலியாக இருக்குமோ என்று நினைத்தேன். அப்புறம் சேனலில் போன் பண்ணி பேசினார்கள்.

இதில் இருந்து என்னால் மீள முடியவில்லை. என்ன ஆறுதல் சொல்வது என்றே தெரியவில்லை. நல்ல பாடகி.. தனித்துவமான குரல்.. நல்ல இசையமைப்பாளரும் கூட. என் இசையில் கூட ஒரு பாடலை பாட வைத்து இருக்கிறேன். என்ன சொல்வது என்றே தெரியவில்லை. இளையராஜா சார் குடும்பத்திற்கு என்ன ஆறுதல் சொல்வது என்றே தெரியவில்லை. பவதாரிணியின் இழப்பு மிகப்பெரிய இழப்பு.

பவதாரிணியிடம் பேசிய தருணங்கள் பற்றி கேட்கிறீர்கள். அது குறித்து சொல்வது என்றால் , நல்லா பேசுவாங்க.. அவருக்கு இப்படி ஒரு பாதிப்பு இருக்கும் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. பயங்கர ஷாக்கிங்கா இருக்கு.. எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. ஒருமாதிரியாக இருக்கிறது.. பவதாரிணியின் குரல் தனித்துவமானது. அவரைப்போல யாரும் பாட முடியாது.

சுவர்ணலதா எப்படி தனிக் குரலோ அது போல பவதாரிணி குரலும் தனித்துவமானது. அவரது குரல் பிடித்து போய்தான் கொஞ்ச வெயில் கொஞ்சம் மழை படத்தில் உசுரதிருடி போற என்ற பாடலை பாடவைத்தேன். அந்த பாடலை நன்றாகவும் பாடியிருப்பார். இதில் இருந்து மீளவே முடியவில்லை. அதிக வயதான காலத்தில் இப்படி நடந்து இருந்தால் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. ஆனால், நல்லா வாழ வேண்டியவங்க.. வயதே 47 தான்.. இதெல்லாம் ஒரு பெரிய வயசே இல்லை. ஜீரணிக்கவே முடியவில்லை. அவரது ஆன்மா சாந்தியடையட்டும்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+