இலங்கை மருத்துவமனையில் அடம் பிடித்த பவதாரிணி! நர்ஸிடம் 3 பேரை பற்றியே பேசிய இளையராஜா மகள்
சென்னை: இளையராஜா மகளும் பாடகியுமான பவதாரிணி லங்கா மருத்துவமனையில் அடம்பிடித்த நிலையில் அவருடைய ஆசையை கடைசி ஆசை என்றே தெரியாமல் அவருடைய கணவர் சபரி நிறைவேற்றியதாக இலங்கையில் உடனிருந்தவர் பேட்டி அளித்துள்ளார்.
இதுகுறித்து பவதாரிணியின் உதவியாளர் சுரேன் லங்காஸ்ரீ ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: லங்கா மருத்துவமனையில் பவதாரிணிக்கு சற்று உடல் நிலை தேறியதும் அடுத்த நாள் சென்னை செல்ல சபரி நினைத்திருந்தார். அவர்களுடன் நானும் மருத்துவமனையிலேயே இருந்தேன்.

அப்போது அருகே இருந்த ஒரு செவிலியரிடம் பவதாரிணி தனது தந்தை 24 ஆம் தேதி இலங்கை வருகிறார். அவர் வந்ததும் என்னை பார்க்க வருவார், அப்போது அவரை உங்களை எல்லாம் சந்திக்க வைக்கிறேன் என கூறியதாக என்னிடம் செவிலியர் சொன்னார். அன்றைய தினம்தான் இளையராஜா இலங்கைக்கு இசைக் கச்சேரிக்காக வந்தார்.
என் குழந்தையை அழைத்து சென்று பவதாரிணியிடம் அறிமுகப்படுத்தினேன். என் குழந்தையிடம் நன்றாக பேசினார். என் குழந்தையை இசை கற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தியிருந்தார். நன்றாக பேசிக் கொண்டிருந்த பவதாரிணிக்கு திடீரென ஏன் அத்தனை வலி வந்தது, உடல்நிலை மோசமானது ஏன் என தெரியவில்லை.
ஆயுர்வேத மருத்துவத்தில் அவர் நன்றாக குணம் பெறுவார் என்றுதான் நாங்கள் நம்பினோம். இளையராஜா வந்ததும் அவரிடம் சொல்லிவிட்டு தனது மனைவியை சென்னைக்கு அழைத்து செல்ல சபரி முடிவு செய்திருந்தார். ஆனால் பவதாரிணிக்கு தான் இறக்க போகிறோம் என்பது தெரிந்துவிட்டதா என தெரியவில்லை. பவதாரிணி சென்னை செல்ல அடம் பிடித்தார்.
அவர் தனது கணவரிடம், "நான் அப்பாவுடன் இருக்கிறேன். அவர் வந்ததும் அவரை பார்க்க வேண்டும். அவருடைய இசைக் கச்சேரி முடியும் வரை இலங்கையில்தான் இருக்க வேண்டும்" என்றார். இதையடுத்து மனைவியின் ஆசையை மறுக்க முடியாமல் கொழும்புவில் இளையராஜா தங்கியிருந்த ஹோட்டலில் அவரது அறைக்கு பக்கத்தில் ஒரு அறையை புக் செய்தார்.
24 ஆம் தேதி இரவே பவதாரிணியை கொழும்பு ஹோட்டல் அறைக்கு அழைத்து சென்றார் சபரி. அதன் பிறகு இளையராஜா தனது கச்சேரிக்கான ஒத்திகையை பார்த்துவிட்டு தனது மகளின் அறைக்கு வந்து 2 மணி நேரம் இருந்தார். அறையில் இருவர் மட்டுமே இருந்தனர். அப்போது ஹோம் நர்ஸும் வெளியே காத்திருந்தார்.
பவதாரிணி அடம் பிடித்தது போல் அவரது கடைசி ஆசையை சபரி நிறைவேற்றினார். பிறகு 25 ஆம் தேதி காலை மீண்டும் பவதாரிணிக்கு வலி ஆரம்பித்து அதிகரித்தது. இளையராஜாவை பார்த்ததால் அன்றைய தினம் அதிகாலை விமானத்தில் சென்னை செல்வதாக இருந்த போதுதான் வலி ஏற்பட்டது.
இதையடுத்து பவதாரிணி மீண்டும் லங்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. இதையடுத்து எனக்கு சபரி போன் செய்து பவதாரிணி இறந்துவிட்டார் என தெரிவித்தார். உடனடியாக நானும் அந்த இடத்திற்கு சென்றுவிட்டேன். இளையராஜாவும் வந்தார். தனது மகளை கண்ணீருடன் பார்த்தார்.
இதையடுத்து பவதாரிணியின் உடலை அங்கிருந்து விமான நிலையத்திற்கு கொண்டு செல்லும் பொறுப்பும் எனக்கு கொடுக்கப்பட்டது. பவதாரிணி தனது தந்தையை பற்றியும் தனது சகோதரர்கள் கார்த்தி, யுவன் குறித்தும் அடிக்கடி செவிலியரிடம் கூறியிருந்தார். இவ்வாறு சுரேன் தெரிவித்திருந்தார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications