சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"முன்னெச்சரிக்கையே இல்லை".. சாடிய முதல்வர் ஸ்டாலின்.. "ரொம்ப கஷ்டம்".. வானிலை மையம் தந்த பதில்!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் பெய்த பலத்த மழையை இந்திய வானிலை மையம் முன் கூட்டியே கண்டிக்கவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது.

Recommended Video

    Chennai-யில் திடீரென கொட்டித்தீர்த்த கனமழை..காரணம் என்ன? | Oneindia Tamil

    சென்னையில் நேற்று முதல்நாள் மாலை மிக கனமழை பெய்தது. மதியம் 2 மணியில் இருந்து இரவு 12 மணி வரை சென்னையில் பல்வேறு பகுதிகளில் விடாமல் மழை பெய்தது.

    பல இடங்களில் சென்னையில் நேற்று முதல்நாள் 200 மிமீக்கும் அதிகமாக மழை பதிவானது. இந்த மழையால் சென்னையின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக மாறியது.

     'படகு தேவை இல்லை..' மழை வெள்ளத்தை நடந்தே சென்று பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின்! 'படகு தேவை இல்லை..' மழை வெள்ளத்தை நடந்தே சென்று பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின்!

    ஸ்டாலின் மழை

    ஸ்டாலின் மழை

    இந்த நிலையில் உடனே வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின், அதன்பின் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் அளித்த பேட்டியில், வானிலை மையத்திடம் இருந்து எப்போதும் முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை கொடுப்பார்கள். ஆனால் இந்த முறை அவர்களே ஏமாந்து விட்டனர். அதற்கு வானிலை மையத்தினர் வருத்தம் கூட தெரிவித்து உள்ளனர்.

    சென்னை மழை

    சென்னை மழை

    இது எதிர்பாராத மழை. திடீரென கொட்டும் மழை, பேய் மழை பெய்துள்ளது. இதனால்தான் திருச்சியில் இருந்து வந்ததும் நேராக ரிப்பன் பில்டிங்கில் இருக்கும் வார் ரூமிற்கு சென்றேன். 24 மணி நேரத்திற்குள் தண்ணீரை வெளியேற்றிவிடுவோம். பணிகள் நடந்து வருகிறது.

    கருவிகளை வாங்க வேண்டும்

    கருவிகளை வாங்க வேண்டும்

    திடீரென மழையை கணிக்கும் வகையில் வானிலை மையம்தான் கருவிகளை வாங்க வேண்டும். அது அவர்கள் செய்ய வேண்டிய வேலை. மத்திய அரசிடம் இதை பற்றி பேசுவோம். 10 வருடமாக அதிமுக சென்னையை குட்டிசுவராக்கி உள்ளது. அதை பற்றி இப்போது பேச நேரம் இல்லை. அடுத்த வருடத்தில் இப்படி மழை பெய்தால் தண்ணீர் தேங்காத வகையில் மாற்றங்களை செய்வோம் என்று, முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

    விளக்கம்

    விளக்கம்

    இந்த நிலையில் முதல்வரின் கருத்து குறித்தது இந்திய வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது. அதில், தொழில்நுட்ப ரீதியாக இதில் நிறைய சிக்கல்கள் உள்ளன. அதேபோல் இதில் நிறைய நடைமுறை சிக்கல்களும் உள்ளன. எப்போதும் துல்லியமான கணிப்பை வெளியிட முடியாது.

    வானிலை மையம் பதில்

    வானிலை மையம் பதில்

    100 துல்லியமான கணிப்பை வெளியிட முடியாது. அது மிகவும் கடினம், லேசான மழையைதான் எதிர்பார்த்து இருந்தோம். ஆனால் தீவிர மழை பெய்துள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை மையம் விளக்கம் அளித்துள்ளது.

    English summary
    IMD responses to CM M K Stalin statement on Chennai Weather Forecast failure
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X