நாளை காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிறது.. தமிழகத்தில் இரு தினங்களுக்கு மழை!
சென்னை: நாளை மத்திய வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை மையம் கூறுகையில், குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும்.

இதனால் இரு நாட்களுக்கு தமிழகம், ஆந்திரா, தெலுங்கானாவில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். அரபிக் கடல் மற்றும் வங்கக் கடல் பகுதியில் மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம். அடுத்த 120 மணி நேரத்திற்கு புயல் உருவாகும் சூழல் ஏதும் ஏற்படவில்லை என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை காலம் அக்டோபர் 25-ஆம் தேதிக்கு பிறகு தொடங்கும் என வானிலை மையம் கணித்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக பருவமழை பொய்த்த நிலையில் இந்த முறையாவது மழை நன்றாக பெய்ய வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த இரு தினங்களாக அரக்கோணம், ஜோலார்பேட்டை, காட்பாடி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இன்றும் சென்னையில் லேசான மழை பெய்தது. இதனால் சென்னையில் மிகவும் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications