ரஜினி, கமல் எல்லாம் ஜீரோ… இனி சிம்பு தான் சூப்பர் ஸ்டார்.. தொண்டர்கள் மத்தியில் சீமான் கலகல
சென்னை:நடிகர்கள் ரஜினி, கமல் எல்லாம் ஜீரோ... இனி சிம்பு தான் சூப்பர் ஸ்டார் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார்.
திரையுலகில் எப்போதுமே முக்கிய நடிகர்களுக்கும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமானுக்கும் கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஆகாது. அதிலும் குறிப்பாக நடிகர் ரஜினியை அவருக்கு கடுகளவும் பிடிக்காது.
திரையுலகை மட்டும் ஆளுங்கள்... தமிழகத்தை ஆள வேண்டும் என்று எண்ணாதீர்கள் என்று கடுமையாக ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து சீமான் விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும்.. ரஜினி ஆசைப்படக்கூடாது என்றும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சீமான் கருத்து
நடிகர்கள் நாடாண்டது போதும்... எங்களிடம் விட்டுவிடுங்கள் என்றும் பல இடங்களில் சீமான் கூறி வருகிறார்.இந் நிலையில் சென்னையில் கட்சி கூட்டத்தில் அவர் பேசிய சில கருத்துகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.மேடையில் அவர் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிம்பு குறித்து பேசியுள்ளார்.

ஆண்மகன் விஜயகாந்த்தான்
அவர் பேசுகையில், ஜெயலலிதா இருந்தபோது அரசியலுக்கு வந்த விஜயகாந்த்தான் உண்மையான ஆண்மகன். நடிகர்கள் ரஜினி, கமல் ஆகியோர் ஹீரோக்கள் இல்லை; அவர்கள் அனைவரும் ஜீரோக்கள் என்று விமர்சித்தார். தமிழகத்தில் இனிமேல் சிம்பு தான் சூப்பர் ஸ்டார் என்றும் அவரை வைத்து மூன்று படங்களை எடுக்க திட்டமிட்டுள்ளேன் என்றும் கூறினார்.

விஜய்யை கிண்டலடிக்கும் சீமான்
சர்கார் பட விவகாரத்தில் ஜெயலலிதா மீது தான் மிகவும் பற்றுகொண்டவன் என்று விஜய் பேசியதாக கூறிய சீமான், சர்கார் படத்தில் வரும் ஒரு விரல் புரட்சி பாடலையும் தொண்டர்கள் முன்னிலையில் கிண்டல் செய்தார். விஜய் தன்னுடைய படத்தில் நடிக்கமாட்டார் என்றாலும் தான் பேசுவதையே திரைப்படங்களில் பேசிக்கொண்டிருக்கிறார் என்றும் சீமான் கூறினார்.

பயம் எதற்கு என கேள்வி
தொடர்ந்து பேசிய சீமான் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். எடப்பாடி பழனிசாமிக்கெல்லாமா பயப்பட வேண்டும்?" என்றும் அவர் தொண்டர்கள் மத்தியில் கேள்வி எழுப்பினார்.
-
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications