டாஸ்மாக் ஏடிஎம் தெரியுமா? ‛டச்’ செய்தாலே மதுபானம் வரும்! சென்னையில் முதல் முறையாக அமல்.. எங்கு?
சென்னை: சென்னை கோயம்பேட்டில் உள்ள தனியார் மாலில் ஏடிஎம் இயந்திரம் வடிவில் தானியங்கி முறையில் மதுபானம் விற்பனை செய்வதை டாஸ்மாக் நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது. இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி உள்ளது.
தமிழகம் முழுவதும் தமிழ்நாடு மாநில வாணிப கழகம் (டாஸ்மாக்) சார்பில் மதுபானம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மொத்தம் 5,329 டாஸ்மாக் கடைகள் உள்ளன. தமிழ்நாட்டில் அரசுக்கு கிடைக்கும் வருவாயில் மதுபான விற்பனை முக்கிய இடம் வகிக்கிறது.

இருப்பினும் தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் தான் முதற்கட்டமாக 500 டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. எந்தெந்த கடைகளை மூட வேண்டும் என்பது தொடர்பான கணக்கெடுப்பு பணி தொடங்கி உள்ளது.
இதற்கிடையே தான் சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசு மதுபானம் தொடர்பான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியது. அதாவது தமிழ்நாட்டில் திருமண மண்டபங்கள், விருந்து மண்டபங்கள், வணிக வளாகங்கள், விளையாட்டு மைதானங்களில் மதுபானங்கள் பரிமாற வசதியாக தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகளில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு சிறப்பு உரிமத்தை அறிமுகப்படுத்தியது.
இந்த உரிமம் பெற்றவர்கள் பொது நிகழ்ச்சிகளில் விருந்தினர்கள், பார்வையாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்களுக்கு மதுபானம் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டது. அதோடு இதுதொடர்பாக அரசாணையும் வெளியிடப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பொதுமக்கள், அரசியல் கட்சியினர் என பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதையடுத்து திருமண மண்டபங்களில் மதுபானம் வழங்குவது ரத்து செய்யப்பட்டது. மாறாக சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மட்டும் மதுபானம் பரிமாற உரிமம் வழங்கும் வகையில் புதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதனை எதிர்த்தும், தமிழக அரசின் அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் தான் தமிழ்நாடு டாஸ்மாக் நிறுவனம் சார்பில் தமிழ்நாட்டில் முதல் முறையாக தானியங்கி இயந்திரம் மூலம் மதுபானம் விற்பனை செய்யும் வகையில் இயந்திரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த இயந்திரம் சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள தனியார் மாலில் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. அந்த இயந்திரம் பார்க்க ஏடிஎம் போல் உள்ளது.
இயந்திரத்தில் ஸ்கீரினில் பல்வேறு ஆப்ஷன்கள் உள்ளன. எந்த வகையான மதுபானம் வேண்டுமோ அதனை மக்கள் தேர்வு செய்யும் வகையில் இந்த ஆப்ஷன்கள் இருக்கின்றன. மதுபிரியர்கள் தங்களுக்கு தேவையான மதுபானத்தை ஸ்கீரினில் இருக்கும் அதற்கான ஆப்ஷனில் டச் மூலம் கிளிக் செய்ய வேண்டும். அதன்பிறகு பணம் அல்லது கார்டு வசதியை தேர்வு செய்து காசு செலுத்தினால் போதும். அடுத்த சில வினாடிகளில் அந்த இயந்திரத்தில் இருந்து விரும்பிய மதுபானம் தானாகவே வெளியே வரும். அதனை மதுபிரியர்கள் எடுத்து செல்லலாம்.
டாஸ்மாக்கில் மதுபானம் விற்பனைக்கு ஊழியர்கள் பயன்படுத்தப்படும் நிலையில் இந்த இயந்திரம் தானியங்கி முறையில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் இந்த இயந்திரத்தை தினமும் நிறையபேர் அங்கு சென்று பார்த்து செல்கின்றனர். மேலும் அந்த இயந்திரத்தில் இருந்து மதுபானம் பெறுவது எப்படி? என்பது தொடர்பான வீடியோவும் தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் தனியார்மயமாகிறது? விஜய்யின் மாஸ்டர்பிளான்! கோட்டையில் பரபரப்பு! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
நாம ஜெயிச்சுட்டோம் மாறா.. கன்னியாகுமரியில் விடிய விடிய போராடி டாஸ்மாக் கடையை மூட வைத்த மக்கள் -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே!












Click it and Unblock the Notifications